Saturday, June 17, 2017

தொண்டன் - இயக்குநர் சந்திரசேகரன் நேர்காணல்...


“தொண்டராக இருப்பவரால் மட்டுமே தலைவராக முடியும். முதல்வராக முடியும்” என்று டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

நடிகர் விஜய்யின் தந்தையும், 70 படங்களை இயக்கியவரும், தயாரிப்பாளர் - நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களுக்கு அமெரிக்காவிலுள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது. இதற்கான விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியதாவது…

“நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய நான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் உழைப்புதான். கடவுள்கூட கைவிடலாம், ஆனால் உழைப்பு ஒரு மனிதனை கைவிடாது என்பதற்கு என்னை நானே ஒரு உதாரணமாக சொல்லிக்கொள்வேன். எனது மகனாக இருந்தாலும் உழைப்பு என்பதை ஊட்டி வளர்த்ததால்தான் இன்று இந்த அளவுக்கு பெரிய உயரத்தை அடைந்த பிறகும், இன்னும் அவர் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் எனது பிள்ளைகள்தான். அவர்களுக்கு நான் கற்றுக்கொடுத்திருப்பதும் உழைப்பு மட்டும் தான். எனக்கு ஓய்வு என்பதே பிடிக்காத விஷயம். விஜய்யை, விஜயகாந்தை, ரகுமானை, சிம்ரனை, ஒரு ஷங்கரை உருவாக்கியிருக்கிறோம். இவ்வளவு சாதனை செய்துவிட்டோம் என்று ஒருபோதும் நான் எண்ணியது கிடையாது. புகழ்ச்சி என்ற போதைக்கு அடிமையாகிவிட்டால், நமது வளர்ச்சி அடங்கிப் போய்விடும்.

நான் என் தாயை 25 வருடங்கள் எனது வீட்டில் மகாராணி போல் வாழ வைத்தேன். எனது தாயை சந்தோஷப்படுத்தியதால் எனது வளர்ச்சியும் பல மடங்காகியது. அதேபோல் தான் விஜய்யும், எந்த படப்பிடிப்பு இருந்தாலும் ஒரு முறையாவது ஷோபாவை பார்க்காமலோ, பேசாமலோ இருக்க மாட்டான். அதனால்தான், கடவுள் உங்கள் விஜய்யை இந்த உயரத்தில் வைத்திருக்கிறார். ஆகவே விஜய் ரசிகர்களிடமும், அனைத்து மக்களிடமும் நான் கேட்பதெல்லாம், தாயை நேசியுங்கள். அவர்களை சந்தோஷப்படுத்துங்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் உங்கள் காலடியில் கிடைக்கும். ஒவ்வொருவரும் ஏதாவது வகையில் முடிந்த அளவுக்கு தொண்டு செய்யுங்கள்.

தொண்டனாக இருப்பவனால் மட்டுமே தலைவனாக முடியும், முதல்வராக முடியும். இந்த டாக்டர் பட்டத்திற்கு நான் தகுதியுள்ளவனா என்று என்னை பரிசோதிக்குபோது, எனது உழைப்புக்காக அவர்கள் தந்ததாக இந்த பரிசை, பட்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். கடைசிவரை ஓடிக்கொண்டிருக்கவே விரும்புகிறேன். எனது உழைப்பு நின்றுவிட்டால், நான் ஓய்வெடுக்கிறேன் என்றால், அது எனது இறுதி மூச்சை விட்ட இடமாகத்தான் இருக்கும்...”
DhanushKRaja.tumblr.com

ஓம் நமசிவாய!

செய்தி: தினசரி நாளிதழில்…

Tuesday, September 27, 2016

'விசாரணை' திரைப்படம் - வெளிநாட்டுப் பிரிவிற்கான ஆஸ்கார் விருதிற்கு தேர்வானது..

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் பிரிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் விசாரணை படத்திற்கு இருக்கிறது. கண்டிப்பாக ஆஸ்கர் வெல்வோம் என்கிறார் படத்தின் கதாசிரியர் ஆட்டோசந்திரன் அவர்கள். 
facebook.com/AutoChandran
கோவை, பீளமேடு ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் அனுபவத்தில் இருந்து எழுதப்பட்ட லாக்அப் நாவலை, விசாரணை திரைப்படமாக வெளிக்கொண்டு வந்தார் இயக்குநர் வெற்றிமாறன். இதுவரையில், வெனிஸ் திரைப்பட விருது, தேசிய விருது என ஏழு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மத்திய திரைப்படக் குழு, ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படத்தை பரிந்துரைத்துள்ளது. இதை அறிந்து உற்சாகத்தில் இருக்கின்றனர் விசாரணை படக்குழுவினர். 

சந்திரகுமாரிடம் பேசினோம். " மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைத்த மத்திய திரைப்படக் குழுமத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதன்முதலாக, என் கதையை படமாக்குவதாக வெற்றிமாறன் சொன்னபோது, ' என் பெயரை டைட்டிலில் போடுவீர்களா?' என்று கேட்டேன். ' உங்களை நான் ஒரு கோடி பேருக்கு அறிமுகம் செய்து வைப்பேன்' என்றார். அடுத்ததாக, ' உலகம் முழுவதும் வாழும் நாடோடிக் குழந்தைகளின் விடுதலைக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்தேன். ' தமிழ்நாட்டில் நமது படம் பேசப்பட்டாலே போதும். உலகம் முழுவதும் என்பது சரியாக இருக்குமா?' என்றார். அவரிடம், ' இது சர்வதேசத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு கதைக்களம். உலகம் முழுவதிலும் வாழும் ஏதிலிகளின் வலி அதில் இருக்கிறது. அவர்களை அதிகாரத்தின் கரங்கள் ஒடுக்குகின்றன. அந்த அதிகாரத்திற்கு எதிரான முழக்கம் இந்தக் கதையில் இருக்கிறது' என்றேன். என் கருத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். 


video
கடந்த ஓராண்டில் ஏழு விருதுகளைப் பெற்றுவிட்டது விசாரணை. இப்படியொரு திரைப்படத்தை, ' மத்திய திரைப்படக்குழு ஆஸ்கருக்கு அனுப்பும்' என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களின் எதிர்பார்ப்பை இந்திய தேர்வுக்குழு நிறைவு செய்துவிட்டது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதை, விசாரணை படம் பெறும் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்த 21-ம் நூற்றாண்டு என்பது மனித உரிமைகளுக்கான ஆண்டு. ' ஒரு தனிமனிதன் சுதந்திரமானவனாகவும் பாதுகாப்பானவனாகவும் வாழ வேண்டும். அந்த எல்லையை மனித சமூகம் தொட வேண்டும்.
சமூகம் என்கிற கூட்டமைப்பில் தனிமனிதன் எப்போதும் நசுக்கப்படுகிறான். தனிமனிதனின் விடுதலையையும் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சியையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு பொதுச் சமூகம் உருவாக வேண்டும்' என்பதுதான் உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் மையக் கருத்தாக இருக்கிறது. அரசுகள் இன்னமும் பழமையான பயங்கரவாத முறைகளான ராணுவ தாக்குதல், போலீஸ் தடியடி என அப்பாவி மக்களின் மீது தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கு நடுவில்தான் மானுட விடுதலையை நோக்கி நாம் நகர்கிறோம். லாக்-அப் கதையும் அதையொட்டித்தான். காட்சிப்படுத்துதல், தொழில்நுட்பம், கலைஞர்களின் அற்புதமான நடிப்பு, நேர்த்தியான இயக்கம் என அனைத்திலும் சிறப்பாக உருவான படம். 
கடந்த 2015-ம் ஆண்டில் டி காப்ரியோ நடித்த 'ரெவனென்ட்' படம் ஆஸ்கரை வென்றது. 200 ஆண்டுகளுக்கு முந்தைய தனிமனிதனின் போராட்டம்தான் கதை. இதற்கு முந்தைய ஆண்டில், '12 இயர்ஸ் ய ஸ்லேவ்' படம் ஆஸ்கரை வென்றது. ஒரு மனிதன் 12 ஆண்டுகள் அடிமைப்படுத்தப்படுகிறான். அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைக்கான தேவையை முன்வைத்து எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமாக அது அமைந்தது. 2013-ம் ஆண்டில் ஆஸ்கரை வென்ற ஆஸ்திரேலிய படமும், 1895-ம் ஆண்டு நடந்த போயர் யுத்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். அந்தப் படத்தில், பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன், கமாண்டர் ஒருவர் மேல் வழக்குத் தொடுக்கிறான். அந்த அதிகாரியின் அத்துமீறல்களை ஆதாரத்தோடு முன்வைக்கிறான்.
கமாண்டர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுகின்றன. ஆனால், பிரிட்டிஷ் ராணுவம் பெற்றி பெறுவதற்காகத்தான் போயர்களை அடக்குகிறது. ராணுவத்தின் உத்தரவுகளைத்தான் அந்த கமாண்டர் பின்பற்றினார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, தீர்ப்பை ஏற்றுக் கொண்ட கமாண்டர் வசனம் பேசுவார், ' பிரிட்டிஷ் அரசுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது' என உயர் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்பார். தொடர்ந்து, ' நீங்க என்ன செய்யச் சொன்னீர்களோ, அதைத்தான் நான் செய்தேன். என்னைத் தூக்கில் போட வேண்டாம். சுட்டுக் கொல்லுங்கள்' என்கிறான். அதன்படியே தீர்ப்பும் நிறைவேற்றப்படுகிறது.  தற்போது 2016-ம் ஆண்டுக்கான ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விசாரணை படமானது, ஆந்திர நிலப்பரப்பில் நடக்கும் ஒரு கதை. சாலையோரப் பணியாளர்கள், சந்தேக வழக்கு என அதிகார அமைப்பு, அவர்களை தங்களுக்கானவர்களாக மாற்றுவதற்கான முறைகளும், கேள்வி கேட்பார் இல்லாமல் இருக்கும் எளியவர்களை இந்த சிஸ்டம் எப்படி நசுக்குகிறது என்பதையும் விவரித்த படம். இந்த சிஸ்டம், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ந்து அதிகாரத்தை செலுத்திக் கொண்டே இருக்கிறது. அதன் உண்மை முகத்தை உலகுக்கு உரத்துச் சொன்னது விசாரணை திரைப்படம். இந்தக் காரணத்தினால்தான், இத்தாலியில் மனித உரிமைப் பிரிவில் விருதை வென்றது. அனைத்து தகுதிகளோடும் ஆஸ்கர் பயணத்திற்குச் செல்கிறோம். வெற்றிகரமான பயணமாகவே அமையும்" என்றார் நெகிழ்ச்சியோடு. 
'லாக்கப்' மனிதனின் கரங்களில் ஆஸ்கர் தவழட்டும்! 

விகடன் குழுமத்திற்கு நன்றிகள்!

AutoChandran

'விசாரணை' திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு செல்கிறது..

வெனிஸில் திரையான முதல் தமிழ் படம், மூன்று தேசிய விருதுகள் வென்ற படம் என பல வரவேற்புகள் பெற்றது விசாரணை. தற்போது இன்னொரு ஸ்பெஷல் பாராட்டுக்கு தயாராகிவருகிறது. 89வது ஆஸ்கரில், சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுப் பிரிவுக்காக, வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 2017 பிப்ரவரி 27ம் தேதி நடக்கவிருக்கிறது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி.

விசாரணை படம் பற்றி வெற்றிமாறன் ஆனந்த விகடன், மைல்ஸ் டூ கோ தொடரில் கூறியது, 
"ஒருநாள் தனுஷிடம் ‘தியேட்டர்ல மூணே மூணு நாள் ஓடுற ஒரு படம் இருக்கு. தயாரிக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘உலகத்துல எந்த டைரக்டரும் ஒரு தயாரிப்பாளரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க’னு சிரிச்ச தனுஷ், என் மீதுள்ள நம்பிக்கையில் கதையைக்கூட கேட்காமல் அங்கேயே `ஆரம்பிச்சிடலாம்'னு சொன்னார்.
அந்த அளவுக்கு ‘விசாரணை’ மேல் எனக்கு நம்பிக்கை வரக் காரணமான மனிதர் சந்திரகுமார். ‘விசாரணை’யின் மூலக்கதையான ‘லாக்கப்’ நாவலை எழுதியவர். இந்த நாவலை எங்க டைரக்டரிடம் வொர்க் பண்ணின ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன்தான் படம் பண்ணலாம்னு என்னிடம் கொண்டுவந்து தந்தார். இப்ப அவரும் படம் பண்ணப்போறார். ‘உங்கள் நாவலைப் படமாக்குறேன்’னு நான் சொன்னதும், ‘அன்னைக்கு நாங்க அழுத அழுகை, அந்த நாலு சுவர் தாண்டி வெளிய கேட்டுடாதானு ஏங்கினோம். நாளைக்கு இந்த உலகமே அதைக் கேட்கப்போகுது தோழர்’னு சந்திரகுமார் சொன்ன வலி நிறைந்த அந்த வார்த்தைகள்தான் இந்தப் படைப்பின் ஆதாரம்.  

‘விசாரணை’ படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கணும்னு முடிவுபண்ணினேன். அதனால்தான் தனுஷிடம் அப்படிக் கேட்டேன். திரைப்பட விழாக்கள் கலையை, திறமையை வெளிக்காட்டும் தளம் மட்டுமே கிடையாது; மாற்று சினிமாவுக்கான மாற்றுச் சந்தையையும் கண்டுபிடிக்கிற இடம். அந்த மார்க்கெட் நோக்கித்தான் ‘விசாரணை’ படத்தைக் கொண்டுபோக நினைச்சேன்". 
விசாரணை திரைப்படம் கண்டிப்பாக ஆஸ்கரின் டாப்-5க்குள் வரும். ஆஸ்கர் விருது பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
விகடன் குழுமத்திற்கு நன்றி..!

Tuesday, September 13, 2016

செவாலியே விருது - 'வைகோ' நேர்காணல்!

video

உலகநாயகன் 'கமல்ஹாசன்' அவர்கள் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருது அறிவிக்கப்பட்ட நாளன்று, 'வைகோ' அவர்கள் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்..!
twitter.com/VaikoMdmk

ஓம் நமசிவாய!
ஓம் நமோ நாராயணா!

Tuesday, June 28, 2016

ஜோக்கர்

'பிரைட்' செருப்பு வாங்கி ஏழெட்டு மாசம் இருக்கும். இதைக் கால்ல போட்டுகிட்டு போகாத இடமில்லை. இப்ப பசங்க போடுற மாதிரி கூலர்ஸ் செப்பல், காலை பெல்டு மாதிரி மூடுற செப்பலெல்லாம் போட விரும்புறதில்லை. பிரைட் போட்டு நடக்குறதுக்கும் எளிமையாவும் இருந்தது..

ஒரு நாள் தீடீர்னு பெருவிரல் பக்கத்துல இருக்குற கயிறு அறுந்துருச்சி. நல்ல வேளையா செருப்புத் தைக்கிறவரு பக்கத்துல கடை போட்டு உக்காந்து இருந்தாரு. தைக்க கூலியா 20 ரூபாய் சொன்னாரு. அஞ்சு நிமிஷத்துல தச்சிக் கொடுத்துட்டாரு...
#Joker

உங்களுக்கு ஒரு மாசம் எவ்வளவு வருமானம் வருதுன்னு கேட்டேன். மூணு நேரம் சாப்பாடுபோக தினமும் கையில 700 ரூபா நிக்குமுன்னு சொன்னாரு..

இவரை சொன்னப்ப என்ன ஆச்சரியமுன்னா, இலட்சக்கணக்குல பணம் கட்டி படிச்சி வர்ற இன்ஜீனியரிங் இளைஞர்கள் வேலை செய்யுறப்ப சாப்பாடுபோக மாசம் கையில 1500 ரூபா நிக்குது. கலை அறிவியல் கல்லூரியில வேலை செய்யுற உதவி பேராசிரியர்களுக்கு மாசம் 8000 ஊதியம்.. இன்னும் நிறைய!

ஒரே விஷயம் என்னதுன்னா, பணம் சம்பாதிக்குறதுக்கு பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. காலம் மாறிப்போச்சு..

ரஷ்யா நாட்டோட அதிபரா இருந்த ஸ்டாலினோட அப்பா செருப்பு தைக்குற தொழிலாளியா வாழ்ந்தவரு...

Thursday, October 22, 2015

தி சாஷான்க் ரிடம்ப்ஷன்


தி சாஷான்க் ரிடம்ப்ஷன் படத்தை 2002 ம் வருடம் ஸ்டார் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். அப்போது பார்க்கும்போது படம் நன்றாக இருப்பதாக மனதில் தோன்றியது. மொழி அவ்வளவாக புரியவில்லை. சமீபத்தில் IMDB இணையதளத்தில் சிறந்த 250 படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் இருந்தது. தற்செயலாக வீடியோ டிவிடி கடையில் பார்த்தபோது இந்தப் படத்தின் தமிழ் மொழி குறுந்தகடு கிடைத்தது. 

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், உரையாடலும்தான்...

'ஆண்டி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிம் ராப்பின்ஷும், மார்கன் பிரிமேனும் அற்புதமான நடிப்பை செய்துள்ளது மனதை கவர்ந்தது. ஆண்டி தனது மனைவி வேறொருவனுடன் தகாத உறவு கொள்ளும்போது, கொலை செய்யும் நோக்கத்துடன் காரில் அமர்ந்திருக்கும்போது வேறொருவன் கொலை செய்கிறான். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெறுகிறான். கொடும் சித்தரவதை நிகழும் இடமாக ஷாஷாங் சிறைச்சாலையில் அடைபடுகிறான். சிறைச்சாலை அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு மார்கன் பிரீமேன் இவனுக்கு முன்பே சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார். இருவருக்குள்ளும் சிநேகிதம் உருவாகிறது. கொஞ்சம்கூட கவலைகொள்ளாத ஆண்டியின் நடவடிக்கைகள் மார்கனை கவருகிறது. ஒரு மாலை நேர சந்திப்பில் ஆண்டி மார்கனிடம் சிறிதான சுத்தியல் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறான். மார்கன் அதற்கு செலவாகுமே என்று சொல்லும்போது அதற்கான பணத்தையும் கொடுக்கிறான். சுத்தியல் சிறைச்சாலைக்கே உரிய ரகசியமான முறையில் பணியாளர் ஒருவர் மூலம் ஆண்டிக்கு கிடைக்கிறது. அதன்பிறகான படத்தின் திரைக்கதை இதயத்தையே உலுக்குகிறது. 

ஒவ்வொரு நாளும் தன்னுடைய சிறைச்சாலையின் சுவரை சுத்தியலால் தட்டித் தட்டி தன்னுடைய வேலையை ஆரம்பிக்கிறான். அதன்பிறகு சிறைச்சாலையில் பல மாறுதல்களை செய்கிறான். சிறைச்சாலை நூலகத்தில் பல புதிய புத்தகங்களை வரவழைக்கிறான். தன்னுடைய வங்கி அதிகாரி என்ற பணி அனுபவத்தில் சிறை அதிகாரிகளை தன் வசப்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவுகிறான். இதன் மூலம் ஆண்டியின் செல்வாக்கு உயருகிறது. சிறைச்சாலை அதிகாரிகளின் பல அந்தரங்கமான விசயங்கள் இவன் வசமாகிறது. தான் செய்யாத கொலைக்குற்றம் வேறொரு கைதியின் மூலம் இன்னொருவன் செய்தான் என்று தெரியவரும்போது குற்றம் நடந்த நிகழ்வை சொல்பவனை அதிகாரிகள் சுட்டுக் கொள்கிறார்கள். இதனிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புவதற்குண்டான வேலைகளை ஆண்டி கச்சிதமாக செய்துகொண்டே இருக்கிறான். ஒரு பொய்யான மனிதன் என்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதன் மூலம், சிறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஆதாரங்களுடன் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புதுறையிடம் சிக்க வைக்கிறான். ஆண்டி சிறையிலிருந்து தப்பும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 'மர்லின் மன்றோ' வால்போஸ்டரை சிறை அறையினுள் ஒட்டி வைத்து அதன் பின்புறம் கச்சிதமாக இருபது வருடங்கள் ஓட்டை போட்டு தப்பிப்பது, சிறையின் பின்புறமுள்ள தண்ணீர்க் குழாயை உடைத்து மூணே முக்கால் கிலோ மீட்டர் தூரம் குழாயினுள்ளே பயணித்து, சிறைச்சாலையை விட்டு வெளியேறியதும் விடுதலை பெற்ற சாகாசத்துடன் மழையில் நனைவது அசாத்தியமான மனிதனின் செயல்பாடாக பிரமிக்க வைக்கிறது. முதாலாளித்துவத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதுபோல் உள்ளது. அதன்பிறகு மார்கன் சிறையிலிருந்து விடுதலையானதும் ஆண்டியை தேடிச்சென்று அடையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மனித வாழ்வின் உன்னதநிலைகளை இந்தப் படத்தில் பார்த்தபோது, இதயமே உறைந்துவிட்டது. இதற்கு முன்பு வில்லியம் வைலரின் "பென்ஹர்" திரைப்படத்தில் தொழு நோயாளிகள் படித்துறையில் மிச்செலா தன்னுடைய அம்மா, சகோதரியை பார்க்கும்போது இதயமே உறைந்துபோகிற அளவிற்கு உணர்ந்திருக்கிறேன். அதுபோன்று இந்தப் படத்தில் மார்கனுடனான ஆண்டியின் உரையாடல் மனதை கட்டிப்போட்டது. இந்தப் படத்தை காலதாமதமாக பார்த்தது வருத்தம்தான். இருப்பினும் இந்த வருடத்தில் பார்த்தது மனநிறைவைத் தந்தது...

Thursday, September 24, 2015

எனது உரை - SRNM கல்லூரி - சாத்தூர் - 04.04.14

SRNM கல்லூரியில் நடைபெற்ற கணிப்பொறித்துறையின் சில்வர் ஜுபிலி விழாவில், முன்னாள் மாணவராக கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டேன். எனது உரையின் வீடியோ காணொளி..

சிறப்பு விருந்தினர் : அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர் - முனைவர் பொன்ராஜ் அவர்கள்..!

video

வலைப்பூ : SRNM கல்லூரி