Friday, January 2, 2009

அடங்கிப்போன அரை நூற்றாண்டு வரலாறு!!

கண்ணியமில்லாத யுத்தம் - நாடு 
தலைப்பிளைகளைக் கேட்டது - மரணம் 
பதுங்கு குழியின் படிக்கட்டில் 
ஒரு கடன்காரரைப்போல் காத்திருந்தது...
பராக்கிரமசாலிகளின் புஜங்கள் 
குற்றஉணர்ச்சியால் இளைத்துப்போயின 
கள்ளத்தீர்க்கதரிசிகளும் கலையாடிகளும் 
ஏற்கனவே சரணடைந்துவிட்டார்கள்...

நன்றியுள்ள ஜனங்களோ 
பீரங்கித் தீனிகலாய் ஆனார்கள் 
இரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும் 
சரணடையாதே தனித்து நின்றார்கள் 
ஓரழகிய வீரயுகம் 
அதன் புதிரான வீரத்தோடும் 
நிகரற்ற தியாகத்தோடும் 
கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தது!!
இனி அந்த நாட்கள் மீண்டும் வரவேண்டாம் என்று 
இறைவனின் குழைந்தைகளாகிய நாங்கள் 
அந்த இறைவனையே பிரார்த்தனை செய்கிறோம்!!

No comments:

Post a Comment