Sunday, January 4, 2009

வாசிக்கும் பழக்கம் இறைவனடி சேரும் வரைக்கும் - அறிஞர் அண்ணாவுக்கு

அறிஞர் அண்ணா தமிழக முதல்வராக இருந்தபோது தான் அவருக்குத் தொண்டையில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்தார்.

அவருடைய உடல் நிலையைச் சோதித்த மருத்துவர் மில்லர்."நாளை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யலாம். நீங்கள் மனதளவில் தயாராக இருங்கள்.நான் மற்ற ஏற்பாடுகளை செய்கிறேன்" என்றார்.

"இரண்டு நாள் கழித்து அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா?" என்றார் அண்ணா.

திடுக்கிட்டுப்போன மருத்துவர் ஏன் எனக் கேட்க,"ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.அதை முடிக்க இரண்டு நாளாகி விடும்.அறுவை சிகைச்சியில் ஏதாவது ஆகிவிட்டால் அந்த நூலை வாசிக்க முடியமால் போய்விடும். முழுமையாக வாசித்துவிட்டால் ஒரு நூலைப் படித்த திருப்தியாவது வந்துவிடுமே! என்றிருக்கிறார்.

தொட்டில் பழக்கமான வாசிப்புப் பழக்கம் அவர் வாழ்நாளின் இக்கட்டான நிலையிலும் தொடர்வதைக் கண்டு சிலிர்த்துப் போனார் மில்லர்.

No comments:

Post a Comment