Saturday, May 15, 2010

கனா காணும் காலங்கள் - 6

பிரிய நினைக்கிறோம்
கடந்து போன நாட்கள்
நம்மை விட்டு பிரிய மறுக்கின்றன...

காலங்கள் கடந்த பின்பும்
அந்த பசுமையான
நினைவு நாட்கள்
அனைவரின் இதயங்களையும்
இணைக்கின்றன...

அந்த இனிமையான நாட்களை
வருக! வருக என வரவேற்போம்...!

நான் என்னுடைய வகுப்பு மாணவர்களுடன் வழியனுப்பு விழாவில், பிரிவுத் துயரம் தாங்காமல் கனத்த இதயத்துடனே இருக்கின்றேன்...

கலிங்கப்பட்டி கோபிநாத் மாப்ளே தன்னுடைய உணர்ச்சிகளை அடக்க முடியாம, கொஞ்ச நேரம் அழுதுட்டு இடத்துல போயி உட்கார்ந்துட்டாரு. நாகலாபுரம் சுரேஷ்குமாரு, மாப்ளே ஒரு பொண்ண திரும்பிப் பாரு. சம்பந்தப்பட்ட ஆளும் அழுகுறாங்க பாத்தியா. நான் சொன்னேன்ல. சரி மாப்ளே, நானும் போத்திராஜ் மாமாவும்தான் பேசிட்டு வந்தோம். எங்களுக்காக யாரு மாப்ளே அழுதாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு மாப்ளே! ஆனா சுரேஷ், என்னோட ஆளு வேற வகுப்புல, வேற துறையில இருக்காங்க. மூணு வருசமா நேருக்கு நேரா அடிக்கடி பாத்துக்குவோம். 5,6 தடவை பேசியிருக் -கிறேன். எப்படின்னா, ரெண்டு தடவை டைம் என்னாச்சுனு கேட்டுருக்கேன். ரெண்டு தடவை நாளைக்கு காலேஜ் இருக்கா? லீவான்னு கேட்டுருக்கேன். ஏதோ மூணு தடவை நீங்க வழக்கமா போற பஸ்சு போயிருச்சுன்னு சொல்லியிருக்கேன். ஆனா மாப்ளே, ஒரே ஒரு தடவை அந்தப் பொண்ணு, நீங்க சொன்ன இன்பர்மேசனுக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொன்னத வாழ்க்கை -யில எப்படி மாப்ளே மறக்க முடியும்...

நாம ஒரு கணக்கு போட்டா, ஆண்டவன் ஒரு கணக்கு போடுறான். ஆண்டவன் போடுற கணக்கு எப்பவுமே கரெக்டா இருக்கு. நாம நினைக்கிறத எல்லாம் அவ்வளவு சீக்கிரமா நடந்துறக்கூடதுன்னு, ரொம்ப தீர்மானமா ஆண்டவன் இருக்குறாரு மாப்ளே..!

உன்னையும்தான் மாப்ளே, உன்னை ஒருத்தங்க பாக்குறாங்க, பாக்குறாங்கன்னு தேவையில்லாம மனசக் கெடுத்தேன். நல்லா படிச்சிக்கிட்டு இருந்த நீ, நாலாவது செமஸ்டர்ல மார்க் கம்மியாயிருச்சு. மார்க் கம்மியானதப் பத்தி எனக்கு ஒண்ணும் கவலை இல்லேன்னு சொன்னே. ரொம்பவே மனசுல மனக்கோட்டை கட்டுன மாப்ளே. ஆனா, 5 வது செமஸ்டர்ல படிச்சிகிட்டு இருக்கும்போது, கல்யாணமுன்னு சொல்லி எல்லாத்துக்கும் பத்திரிகை வச்சாங்க. கண்டிப்பா, அவசியமா என்னோட கல்யாணத்துக்கு வரணும்னு உங்கிட்ட சொன்னாங்க மாப்ளே. வகுப்புல இருந்து எல்லாரும் கல்யாணத்துக்கு போயி, பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கனு, வாழ்த்திட்டு வந்தோமே மாப்ளே! அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடிய விசயமா மாப்ளே... ஆண்டவன் போடுற கணக்கு எப்பவுமே நியாயக் கணக்குதான்.
இதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டா, இன்னும் வாழ்க்கையில எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு...

திடீர்னு சுரேஷ்குமாரு எங்கிட்ட மாப்ளே செந்திலு, டெல்லி பொண்ணு வெங்கடேஸ்வரி பேச வந்திருக்கு. கொஞ்சம் சும்மா இரு மாப்ளே. என்ன பேசுறாங்கனு கேட்போம்...

வெங்கடேஸ்வரி ஆங்கிலத்துல பேசுறாங்க..ஏதோ அப்ப நான் புரிஞ்சிகிட்டத, இப்ப தமிழ்ல சொல்றேன்...

இந்த தருணம் மகிழ்ச்சியா இருந்தாலும், பிரிய நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்குது. கொஞ்சம் கசப்பான நினைவுகள், ரொம்ப இனிமையான நாட்களுனு மூணு வருஷம் போச்சு. பேராசிரியர்.தனபால் சாரு எங்களுக்கு பாடம் நடத்த வரலையேன்னு, கொஞ்சம் வருத்தம் இருக்கு. பரவா இல்லே, இப்ப வாச்சும் அவரு இந்த தருணத்துல கலந்துகிட்டு, பேசுனது ரொம்ப சந்தோசமா இருக்குது. ரொம்ப சந்தோசமான நாளுன்னு சொன்னா, வகுப்புல இருந்து கிருஷ்ணவேணி மேடம், அருணேஷ் சாரோட பெங்களூரு, மைசூருனு நான்கு நாட்கள் சுற்றுலா போனது, மறக்க முடியாத நினைவுகளா என்னோட வாழ்க்கையில இருக்கும். நம்ம கிருஷ்ணவேணி மேடத்தை, சுற்றுலால பாலகிருஷ்ணன் அடிக்கடி 'ரங்கே குட்டான் மெதடுக்கு' ஒரு ஓ போடுன்னு சொன்னத என்னால மறக்கவே முடியாது...

அதுக்கு முன்னாடி மாப்ளே பாலகிருஷ்ணன் எதுக்காக அப்படி சொன்னான்னு பாத்தோமுனா...கிருஷ்வேணி மேடம் நாலாவது செமஸ்டர்ல Numerical Method கணக்குப் பாடம் நடத்த வந்தாங்க. இந்தக் கணக்குப் பாடத்துல ரங்கே குட்டான் மெதடுனு ஒரு பகுதி வரும். ரொம்ப கஷ்டமான பகுதிதான். அடிக்கடி அந்த method - யை மேடம் நடத்துவாங்க. வகுப்புல தேர்வு வைப்பாங்க. இதை வெச்சிதான் மாப்ளே பாலகிருஷ்ணன் சுற்றுலா போனப்ப, இப்படி சொன்னது. வேற ஒன்னும் இல்ல. இந்த விஷயம் மேடத்துக்கு ரொம்ப நாளா தெரியாம இருந்துச்சு. வெங்கடேஸ்வரி பொண்ணு டப்புன்னு போட்டு வழியனுப்பு விழாவுல சொல்லி உடைச்சிட்டாப்புல. பாலகிருஷ்ணன் மாப்ளேக்கு கையும் ஓடல, காலும் ஓடல. எல்லாரும் பாலகிருஷ்ணன் மாப்ளைய திரும்பிப் பாக்குறாங்க. நான் மாப்ளைய பாத்து சொன்னேன், வசமா மாட்டுனயுல மாப்ளேனு சொல்லி சிரிச்சேன். மானத்தை வாங்காத, கொஞ்சம் அமைதியா இருடான்னு பின்னாடி ஒரு சாக் பீச முதுகுல வீசி எரிஞ்சி பாலகிருஷ்ணன் சொன்னான். 
இதுதான் நடந்தது...

வெங்கடேஸ்வரி பேசுறாங்க - எங்க அப்பா இந்திய ராணுவத்துல வேலை செய்யுறாங்க. நானும் ஏதோ ஒரு இந்தியாவோட பாதுகாப்பு படையில சேர்ந்து சாதிக்கணும்னு இருக்கிறேன். என்னால புவனேஸ்வரி, கிருஷ்ண வேணி, சவுந்தரவள்ளி, செவக்குளம் ரம்யாவெல்லாம் மறக்கவே முடியாது. அவங்கள நான் ரொம்ப மிஸ் பண்றேன். லேசாக வேங்கடேஸ்வரியிடமிரு ந்து சோகம் வெளிப்பட்டது. 

திடீர்னு நான் சுரேஷ்குமாரு கிட்ட சொன்னேன், மாப்ளே வெங்கடேஸ் -வரியோட பேருலேயே, அதே பேர்ல நம்ம விஜயாபுரி வெங்கடேஷ் மாப்ளே, அதான் நம்ம வகுப்புலேயே படிப்புலயும், விளையாட்டுலயும், கம்பியூட்டர்ல புரோக்ராம் போடுறதலயும் கெட்டிக்காரர இருக்கிற வெங்கடேஷ் மாப்ளே, 
ஒரு பொண்ணுகிட்ட மனச பறிகொடுப்பாருனு எதிர்பாத்தம மாப்ளே. அந்த மாப்ளேக்கு போயி, ஆண்டவன் கணக்க சோதனையா முடிச்சு வச்சத எப்படி மாப்ளே மறக்க முடியும்..! ஆனா மாப்ளே வெங்கடேஷ் கடைசி வரைக்கும் மனசு தொறந்து அவங்ககிட்ட சொல்லல. அமெரிக்காவுல சாப்ட்வேர் கம்பெனியில வேலை செஞ்சிகிட்டு இருக்குற விஜயாபுரி வெங்கடேஷ் மாப்ளேக்கு, நடந்து போன கசப்பான நாட்களை மேலும் நினைவுபடுத்த விரும்பல. அந்த கடந்து போன நாட்களோட கசப்பான நினைவுகள், அந்த 2002 ம் வருஷத்தோட காத்துல கரைஞ்சி போனாதகவே இருக்கட்டும்...

நாம ஒரு கணக்கு போடுறதும், ஆண்டவன் ஒரு கணக்கு போடுறதும், அரசியல்ல சகஜமா இருந்தாலும், வாழ்க்கையிலயும் சகஜமா போச்சு...!

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment