Sunday, September 9, 2012

நான், நண்பர்கள் குமாரவேல், ரமேஷ், மோகன் அவர்களுடன் மலைகளின் இளவரசி வால்பாறைக்கு சென்றிருந்தபோது - 2009

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வழியிலுள்ள ஆழியாறு அணை (கீழே உள்ள புகைப்படம்)


நண்பர் குமாரவேல், நான், மோகன் அவர்கள் (இடமிருந்து)






வால்பாறை காடுகள்...

நாங்கள் சென்றிருந்த போது  மழைச்சாரல் தூறிக்கொண்டே இருந்தது. மனதிற்கு இனிமையாக இருந்தது. காடுகளுக்கு உள்ளே சென்று புகைப்படம் எடுத்தபோது அட்டைப்பூச்சி கடித்தது. இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பாலாஜி கோயிலுக்கு சென்றோம். ஒன்றிரண்டு இடங்களில் சிறுத்தை, புலிகளைப் பார்த்தோம். குமாரவேல் அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது பார்த்ததால் பயம் வரவில்லை. நண்பர் ரமேஷ் சொன்னார், வண்டியில போறதால தப்பிச்சோம், இல்லேன என்ன ஆயிருக்குமுனு தெரியலையே என்று நகைச்சுவையாக கூறினார். சோலையாறு அணைக்கட்டு, பரம்பிக்குளம் அணைக்கட்டைப் பார்த்தோம். ரம்மியமாக இருந்தது. இதெல்லாம் வெள்ளைக்காரன் நம் இந்திய திருநாட்டை ஆட்சி செய்தபோது உருவாக்கிய அணைக்கட்டுகள். வெள்ளைக்காரன் நாட்டை காலி செஞ்சிட்டு போனதுக்கு அப்புறம், முதல்வர் காமராஜர் அவர்கள் அணைக்கட்டுகளை உருவாக்கி சாதிச்சாருனு நான் நண்பர்கள் கிட்ட சொன்னப்போ, பெரிய பெரிய பேச்சல்லாம் பேசுரயே செந்திலு. சந்தோசமா இருக்குது என்று பேராசிரிய நண்பர் மோகன் கூறினார். அதன்பிறகு இப்படி இந்த ஆருயிர் நண்பர்களுடன் மலை வாசஸ்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. பசுமையான நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கிறேன்...

நண்பர் மோகன், நான், குமாரவேல் அவர்கள் (இடமிருந்து)...







No comments:

Post a Comment