Wednesday, October 31, 2012

கைவிட்டு போகுமோ முல்லை பெரியாறு?

மனிதன் மனம் முழுக்க நிரம்பிருக்கு கூவம் ஆறு,
அதை கொஞ்சம்தான் நீயும் எண்ணிப் பாரு,
ஒற்றுமைதான் வேணும்னு சொன்னாரு பட்டினத்தாரு,
இங்கே செவி கொடுத்து கேட்பது யாரு,
சாதிகள்தான் ஒழியணும்னு சொன்னாரு பாரதியாரு,
அதையும் தாண்டி, சாதி பள்ளிக்கூட விண்ணப்பத்தில இருக்குது பாரு,
ஊர் முழுக்க திறந்திருக்கு கள்ளுக்கடை பாரு,
நாளைய இளைஞனும் வச்சிருப்பான் கைல தான் பீரு,
திரைகடல் ஓடி திரவியம் தேடும் தமிழன பாரு,
அவன் குடும்பம்தான் அவனுக்காக ஏங்கி தவிக்கும் நிலமைய பாரு,
பசிக்காக உடம்பை விற்கும் பெண்ணுக்கு வேசினு பேரு,
அவ இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் யாரு,
நகர் முழுக்க புகையை கக்கிக்கிட்டு பறக்குது காரு,
உன் கார் கண்ணாடியை இறக்கித்தான் ஏழைய எட்டிப் பாரு,
தமிழன் கால்கடுக்க காத்திருந்து ஏமாந்துபோனான் காவேரி ஆறு,
கிட்டாமல் போனதையா கிருஷ்ணா நதி நீறு,
நாளை, கைவிட்டு போகுமோ முல்லை பெரியாறு?...

No comments:

Post a Comment