Saturday, December 29, 2012

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் தாயார் என் நேசத்திற்குரிய பாட்டி மாரியம்மாள் அவர்களிடம் நான் ஆசிபெற சென்ற வேளையில் ~ 28.12.12 ~ கலிங்கப்பட்டி கிராமம்

நான் கோவையிலிருந்து எனது கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் வைகோ அவர்களின் வீட்டிற்கு போன் செய்து பாட்டி மாரியம்மாள் வீட்டில் உள்ளார்களா என்று கேட்பேன். இருக்கிறார்கள் என்று உருதி  செய்து கொண்டு அவரை காணச்செல்வேன். அவரிடம் மனம் திறந்து உரையாடிவிட்டு, நான் வாழும் இந்த சமூகத்திற்கு பல நற்காரியங்களை செய்வதற்கு, நான் நீண்ட ஆயுளுடன் வாழ எனக்கு ஆசி தாருங்கள் என்று கூறி அவர் பாதங்களில் சாஷ்டங்கமாக விழுந்து ஆசிபெருவேன். இதே போல் எனது தாயாரிடமும் ஆசி பெறுவேன்.

ஆனால் தமிழக அரசியலில் கலிங்கத்து சிங்கம் என அனைவராலும் போற்றப்படும் ,வீரப்புதல்வர்,காவியதலைவர் வைகோ அவர்களை பெற்றெடுத்த அந்த தாய்குலத்திடம் ஆசி பெறுகையில் நான் மிகுந்த புத்துயிர் பெறுவேன். அப்படித்தான் 28.12.12 அன்று ஆசி பெற்றேன். அவரிடம் ஆசி பெரும் ஒவ்வொரு நாளுமே என் வாழ்வின் பொன்னான நாட்கள். இதை நமது கிராமத்து இணையத்தளத்தில் பதிவு செய்ய காரணம், நாம் ஒவ்வொருவரும் நமது பெரியோர்களிடம் ஆசிபெற்றால், நாம் வாழும் சமூகத்திற்கு நீண்ட ஆயுளுடன் பல நற்காரியங்களை ஆற்றலாம் என்பதுதான் நிதர்சனம்.


No comments:

Post a Comment