Saturday, February 16, 2013

நான் உதவி பேராசிரியராக பணிபுரியும் எஸ்.என்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் ~ 15.02.13

(இடது புறம்) பத்மஸ்ரீ.கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் Dr.T.வேலுச்சாமி அவர்களுடன் நான்...


பத்மஸ்ரீ.கிருஷ்ணகுமார்  (இடது) அவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர். எனது கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இளங்கலை மேலாண்மைத் துறை மாணவர்களுக்கு சிறப்பு உரை ஆற்றினார்...

கோவையில் ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய பார்மசி என்ற இவருடைய மருத்துவமனை  இந்திய அளவில் புகழ்பெற்றது. இவரது பூர்விகம் கேரள மாநிலம் ஆகும். ஆனால் தமிழகத்திற்காக, தமிழக மக்களுக்காக அயராத, அளப்பரிய மருத்துவ சேவை புரிகிறார். அவரது அருகில் நின்று நான் புகைப்படம் எடுத்ததே மிகப்பெரிய பாக்கியம். எனது குருநாதர் சுவாமி விவேகானந்தர், புகைப்படம் எடுக்கும் சக்தி வாய்ந்த ஆன்மிக பலத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். இதிலுள்ள புகைப்படத்தை நான் எடுக்கவில்லை. ஆனால் சக்தி வாய்ந்த மனிதர்களுடன் புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.



எனது ஆருயிர் நண்பர்,என்னுடன் உதவி பேராசிரியராக பணியாற்றும் சத்தியமங்கலம் ஊரைச் சேர்ந்த சிவக்குமார் அவர்கள்...








No comments:

Post a Comment