Thursday, April 18, 2013

நினைவுகள் - 8

கணிப்பொறித்துறை
வகுப்பு மாணவர்களுடனும்
பேராசிரியர்களுடனும்
புகைவண்டியில் ஏறிச்செல்கையில்
குபுகுபுவென புகையைக் கக்கிக்கொண்டு
அதிவிரைவுப் புகைவண்டி
மின்னல் வேகத்தில்
பெங்களூருவை நோக்கி
வரலாற்றுப் பயணத்தை
தொடங்கியது...
புகைவண்டிக்குத் தெரியும்
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்
புகைவண்டியில் பயணிக்கும்
ஒரு கணிப்பொறித்துறை மாணவனால்
வலைப்பூவில் எழுதப்பட்டு
கல்லூரியின் வரலாற்றில்
காலத்தால் அழியாத
காவியமாக பேசப்படும் என்று...


துறையிலிருந்து எங்கள் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது...

2001 ம் வருடம் - ஐந்தாம் பருவம் - ஆகஸ்ட் மாதம்...

மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய வருடங்களில் சீனியர்களை மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றார்களா என்று அவ்வளவாகத் தெரியவில்லை.

DR.Krishnaveni
துறைத்தலைவர் பேராசிரியர் கிருஷ்ணவேணி அவர்கள் எங்கள் வகுப்பிற்கு ஐந்தாம் பருவத்தில் Numerical 
Method பாடம் எடுக்கிறார். ஒரு நாள் வகுப்பில் சுற்றுலா செல்லும் விசயமாகப் பேசினார். துறையிருந்து உங்களை சுற்றுலா கூட்டுப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இது ஒரு Industrial visit ம் கூட. கேரளா போறதா, பெங்களூர்-மைசூர் போறதா, இல்ல வட இந்தியாவுல ஆக்ரா,டெல்லி,சிம்லா,ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு போறதான்னு முடிவு பண்ணுங்க. உங்ககூட சுற்றுலாவுக்கு நானு, அருணேஷ் சாரு, புஷ்பராஜு சாரு, ஜோதிப்பிரியா மேடம், ஜெயச்சந்திரா தேவி மேடம்னு நாங்க அஞ்சு பேரு வருவோம். 
20 நாள்ல கிளம்புற மாதிரி இருக்கும். Train ல டிக்கெட் புக் பண்ணி, ஸ்டுடன்ஸ் கன்செஷன்ல போறோம். ஒருத்தருக்கு மொத்தமா செலவு நாலாயிரம் ரூபா வரைக்கும் வரலாம். சுற்றுலாவுக்கு யாரு, யாரெல்லாம் வர்றதுக்கு விருப்பம் இருக்கோ, வெங்கடேஷ் கிட்ட பேரைக் கொடுத்துருங்க. பேரைக் கொடுத்ததுக்கு அப்புறமா, நான் வரலேன்னு யாரும் சொல்லக்கூடாது. இப்படி கிருஷ்ணவேணி மேடம் வகுப்புல அறிவிச்சுட்டுப் போயிட்டாங்க. மேடம் போனதுக்கு அப்புறம் வகுப்புல ஒரே விவாதம், சலசலப்பு. கொஞ்சம் பேரு டெல்லி, ஆக்ராவுக்கு போகலாம்னு சொல்றாங்க. கொஞ்சம் பேரு கேரளாவுக்கு போகலாம்னு சொல்றாங்க. நிறைய பேரு பெங்களூரு, மைசூருக்கு போகலாம்னு சொல்றாங்க. ஏன்னா பெங்களூரு, மைசூருக்கு செலவு கொஞ்சம் கம்மியா வரும். அதனாலே நிறைய பேரு பெங்களூரு, மைசூருன்னு விவதாம் செய்றாங்க. 

விஜயாபுரி வெங்கடேஷ் மாப்ளே ஒரு ஐடியா பண்ணாரு. சுற்றுலா போற இடங்களை ஒரு பேப்பர்ல டைப் பண்ணி, வகுப்பு மாணவர்களோட பெயர் பட்டியல் போட்டு, சுற்றுலா போற விருப்பமான இடங்களை டிக் பண்ணச் சொல்லி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்துல நாங்கெல்லாம் பிராக்டிகல் ப்ரோக்ராம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது கொடுத்தாரு. அதிகம் பேரு பெங்களூரு, மைசூரு தேர்வு பண்ணாங்க. மைசூரு, பெங்களூருக்கு போறதுன்னு முடிவு ஆயிருச்சு.

நானு, போத்திராஜ் மாமா, வவ்வாதொத்தி சிவக்குமாரு, நாகலாபுரம் சுரேஷ்குமாரு மாப்ளே எல்லாம் இந்த சுற்றுலா போற விசயத்துல அதிகமா ஆர்வம் காட்டல. போறதுக்கும் விருப்பம் இல்லாம இருந்தோம்.

எனக்கு என்ன பயம்னா, 11 ம் வகுப்பு படிக்க ஆர்மபிக்கும்போது ஏழரைச் சனி எனக்கு ஆரம்பிச்சிருச்சுன்னு அப்பா சொன்னாரு. இந்த ஏழரைச் சனி முடியிற வரைக்கும் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கும்டா. நீ என்னதான் நாலு பேருக்கு நல்லது செய்ய நினைச்சாலும், சோதனைகள் அதிகமா இருக்கும். நிறைய கெட்டப் பேரு சம்பாதிக்க வேண்டியிருக்கும். உனக்கு கெட்ட பேரு வாங்கிக்கொடுத்து, தலை குனிஞ்சு நடக்க வைக்கிறதுக்கு, நண்பர்கள் சில பேரு தயாரா இருப்பாங்க. ஏன்னா ஏழரைச் சனி அப்படி செய்யவைப்பான். இந்த ஏழரைச் சனி முடிஞ்சதுக்கு அப்புறம், வாழ்க்கையில ரொம்பவே பக்குவப்பட்டு, பெருமைக்குரிய மனிதனா வர்றதுக்கு வழிவகுக்கும். நியூமரலாஜிப் படி உன்னோடப் பேரைக் கூட்டுனா 43 வரும். நியூமரலாஜியில ரொம்ப ரிஸ்க்கான நம்பரும் கூட, நல்ல நம்பரும் கூட. எனக்கு இதைப் பத்தி தெரியறதுக்கு முன்னாடியே பேரை வச்சிட்டேன். இந்தப் பேரை இனி மாத்த வேண்டாம்னு நினைக்கிறேன். 2 ந் - தேதியில  பிறந்திருக்குறதுனால சந்திரனோட ஆதிக்கம். வாழ்க்கையில ஏற்றமும், தாழ்வுமா போய்கிட்டு இருக்கும். அதனால சனீஸ்வரன் பல நல்ல விசயங்களை செய்யக்கூடிய வலிமையை உனக்குக் கொடுப்பாரு. அதனால வருசத்துல ரெண்டுதடவை கன்னியாகுமரியில இருக்குற விவேகானந்தர் பாறைக்கும், கேந்திரத்துக்கும் போயி ஒரு நாளோ, ரெண்டு நாளோ தங்கி அங்குள்ள பள்ளியில ஏதாவது கல்விச் சேவை செஞ்சா நல்லா இருக்கும். இந்த காலகட்டத்துல தூரப்பயணம் போறதை பெரும்பாலும் தவிர்த்துறனும். பெரிய அளவுல தீமைகள் வருதுன்னு பலன் சொல்லுது. அதனால இந்த ஏழரை வருசமும் ரொம்ப ஜாக்கிரைதையா இருக்கணும் செந்தில்குமா -ருன்னு அடிக்கடி எங்க அப்பா சொல்லிகிட்டே இருப்பாரு. எங்க அப்பாவுக்கு ஜோசியமும், நியுமராலஜியும் நல்ல பார்ப்பாரு. ஆனா இதை வச்சுகிட்டு காசு சம்பாதிக்க மாட்டாரு. 

(எங்க அப்பா சொன்ன மாதிரியே சுற்றுலாவுல மைசூர்ல மரணத்தோட எல்லை வரைக்கும் போயி உயிர்தப்பிச்சேன். இது எனக்கும், சுற்றுலா வந்த புஷ்பராஜ் சாருக்கு மட்டும்தான் தெரியும். இந்த சம்பவத்தை அப்புறமா சொல்றேன்...)

அதனால நமக்கு ஏண்டா வம்புனு ஆர்வம் காட்டல. மாலை வேலையில மாணவர் விடுதிக்கு என்னோட அறைக்கு வந்ததுக்கு அப்புறமா, ரூம் மேட் பாலகிருஷ்ணன் எங்கிட்ட கேட்டான். ஏண்டா செந்திலு சுற்றுலா வரலையா..? இல்ல மாப்ளே, எங்க அப்பா OK சொல்ல மாட்டாரு. அப்படியே ஓகே சொன்னாலும் பணம் தர மாட்டாரு. ஏன்னா, இப்பதான் செமஸ்டர் பீசு கட்டுனாரு. மெஸ் பீசு கட்டுனாரு. விவசாயத்துல வேற செலவு அதிகமா இருக்குது. இந்த நேரத்துல பணத்துக்கு நான் எங்க போறது மாப்ளே. அட இவ்வளவுதானே..! நாம எப்ப வேணும்னாலும் மைசூரு, பெங்களூரு சுற்றுலா போகலாம். இப்ப நாம படிக்கும்போது, நம்ம வகுப்பு மாணவர்களோட போற அனுபவம் எப்பவுமே கிடைக்காது மாப்ளே. நீ டூர் வந்தேனா, ஏதாவது கல கலன்னு பேசிகிட்டு இருப்பே. ஜாலிய இருக்கும். அதனால என்னோட மோதிரத்தை, self finance ல படிக்கிற ஹரிஹரன் அடகுக் கடையில அடகு வச்சி உனக்கு பணம் தர்றேன். நீ எப்ப பணம் குடுக்க முடியுமோ, அப்பக் குடுத்த போதும் மாப்ளேனு பாலகிருஷ்ணன் சொன்னப்ப, நான் அப்படியே ஆடி போயிட்டேன். என்ன மாப்ளே சொல்ற, மோதிரத்தை அடமானம் வெச்சா. சும்மா விளையாடதே மாப்ளே, இப்ப சொல்ற. நான் டூர் வர்றேன்னு பேரைக் கொடுத்ததுக்கு அப்புறமா, வீட்ல சத்தம் போடுறாங்க மாப்ளேன்னு கொடுக்க முடியாம போச்சுன்னா, எனக்கு சிக்கலாகிப் போயிரும். சொன்னதுக்கு ரொம்ப நன்றி, வேண்டாமுன்னு நான் சொன்னேன். 

பாலகிருஷ்ணன் மாப்ளே..
இப்ப உடனே கிளம்பு மாப்ளே. அடகுக் கடைக்கு போறோம். உன்னோட கையில பணத்தைக் கொடுக்குறேன். நாளைக்கு சுற்றுலா வர்றேன்னு பேரைக் கொடுத்துரு. போதுமா மாப்ளே!! அது சரி மாப்ளே, சுற்றுலால நம்ம கூட கிருஷ்ணவேணி மேடம் வேற வர்றாங்க. நாம ஒண்ணும் அட்டகாசம் பண்ண முடியாதே. எனக்கு வேற ஏழரைச் சனி நடந்துகிட்டு இருக்குது. ஏதாவது சிக்கல் வந்துருமோன்னு பயமா இருக்குது. ஏய் மாப்ளே அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. தைரியமா இரு. சுற்றுலால ஜாலிய இருக்குறத மேடம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்ன பொண்ணுங்ககிட்ட மட்டும் அதிகமா பேசாத மாப்ளே, ஒரு பிரச்சினையும் வராது. ஆனா நமக்குன்னு ஒரு வரைமுறை இருக்குது. அதைத் தாண்டக்கூடாது. அவங்க நம்மளோட பேராசிரியர்கள். மதிப்புக் கொடுக்கணும் மாப்ளே. சரி மாப்ளே, அடகுக் கடைக்கு கிளம்புவோம். பணத்தை வாங்குறோம். பேரைக் கொடுக்குறோம். சுற்றுலா போறோமுன்னு உற்சாகமா பேசிகிட்டு இருந்தோம். போத்திராஜ் மாமா அமைதியா உட்கார்ந்து படிச்சிகிட்டே நாங்க பேசுறத கேட்டுகிட்டே இருந்தாப்புல. ஏன் மாமா டூருக்கு வரல. குடும்ப விசயமா ஒரு முக்கியமான வேலை இருக்குது. அதன் வர்றதா, வேண்டம்மானு யோசிச்சுகிட்டு இருக்கேன். இப்படியே ஏதாவது பொய்யச் சொல்லி நழுவுறேங்களே மாமா. நீங்க இல்லன்னா அங்க நான் மட்டும் போயி என்ன சந்தோசமா சுத்திப்பாக்கப்போறேன். ஏய் மாப்ளே கிளம்பு, சாத்தூருக்குப் போகலாம். பாலகிருஷ்ணன் கூட ஹரிஹரன் கடைக்குப் போயி நகையை அடகு வச்சு நாலாயிரம் ரூபா பணத்தை வாங்கிட்டோம். ஹரிஹரன் மாப்ளே கடையில பணத்தைக் கொடுத்துட்டு சிரி சிரின்னு சிரிக்கிறான். ஆனா தொழில் ரகசியம், ஹரிஹரன் மாப்ளே காலேஜ்ல யாருகிட்டேயும் சொல்லல.

நினைவுகள் தொடரும்...

No comments:

Post a Comment