Saturday, June 15, 2013

MCA வகுப்பு கட்டிடம் திறப்பு விழா - சிறப்பு விருந்தினர் திரு.வைகோ அவர்கள்

IGNOU - கல்விமையத்தை தென்மண்டல இயக்குநர் டாக்டர்.சவுந்தரவல்லி அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றும் காட்சி - 30.03.2001  
வைகோ அவர்களுக்கு பின்னால் நான் நின்றுகொண்டிருந்தேன்... நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட எம்.சி.ஏ. வகுப்பு கட்டடத்தை திரு.வைகோ அவர்கள் திறந்து வைத்தபோது - 30.03.2001...
இன்றைய தினம் மாணவர்களுக்கு வைகோ ஆற்றிய மாபெரும் உரை என் இதயத்தில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உரையும் கூட. தற்போது 04.04.14 அன்று நடைபெற்ற சில்வர் ஜுபிலி விழாவில் முன்னாள் மாணவர் என்ற முறையில் நான் பேசியபோது, வைகோ அவர்கள் பேசியது குறித்து குறிப்பிட்டேன், என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று... அவர் பேசியதிலிருந்து சில வரிகளையும் குறிப்பிட்டு பேசினேன்... எனக்கும் சில்வர் ஜுபிலி விழா வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வும் கூட...

அப்போதைய கல்லூரியின் முதல்வர் விலங்கியல் துறை பேரா. குருசாமி
அவர்கள் வைகோ அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்புரை செய்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு.வைகோ அவர்களுக்கு என்.சி.சி.மாணவர்கள்  அணிவகுப்பு மரியாதையை செய்கிறார்கள். என்.சி.சி.யில் அப்போது என்னுடைய ஆருயிர் நண்பன் வணிகவியல் துறையில் படித்த தனுஷ்கோடி இருந்தார். தற்போது இந்திய இராணுவத்தில் மிக உயர்ந்த ஆபிசர் பதவியில் பணிபுரிகிறார். தனுஷ்கோடிக்கு சாத்தூர் சொந்த ஊர். சாத்தூரிலுள்ள SHN எட்வர்ட் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். அந்தப் பள்ளியில் படித்த முத்துக்குமார், சீனிவாசராகவன், சுந்தரமணிகண்டன், வேனில் இளவரசன் போன்றோர் என்னுடைய வகுப்பு மாணவர்கள். தனுஷ்கோடியின் வகுப்பில் படித்த S.G.சீனிவாசன் இன்று வரைக்கும் என்னுடைய ஆருயிர் நண்பன். சமீபத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு ஊருக்கு வந்தபோது தனுஷ்கோடி என்னை சாத்தூருக்கு அழைத்தார். நானும், சீனிவாசனும், தனுஷ்கோடியும் சந்தித்து பேசிக் கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்...


திரு.வைகோ அவர்கள் MCA வகுப்பு கட்டிடத்தை திறந்து வைக்கும்போது அருகில் ஜெயவிலாஸ் குழுமத்தின் நிறுவனர் தினகரன் ஐயா அவர்கள் உள்ளார்...


திரு.வைகோ அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்களுக்கு மேல் பேசினார். சரியாக 2.30 மணி அளவில் பேசத்தொடங்கி 3.45 - 4.00 மணி அளவில் நிறைவு செய்தார். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், பொது மக்கள் என்று சாத்தூரிலிருந்தும் வேறு பல ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்காண பேர் கலந்து கொண்டார்கள். அப்போது வைகோ அவர்களுக்கு 57 வயது. தற்போது வயது 70 ஆகிறது. இப்போதும் ஒரு துடிப்பான இளைஞரைப்போல் கம்பீரமாக உள்ளார். வைகோ அவர்களின் துடிப்பான கம்பீரமும், ஆன்மிக பலமும்தான் இலட்சக்கணக்கான என்னைப் போன்ற இளைஞர்களுக்கு மாபெரும் வரலாற்றை, சகாப்தத்தை உலகில் படைக்க முடியும் என்ற மனோபலத்தை, எல்லையற்ற தன்னம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் பேசியபோது, பல உலக நாடுகளின் வரலாற்றில் சகாப்தத்தை உண்டாக்கிய தலைவர்களின் வாழ்க்கையை மேற்கோள்காட்டி பேசினார். குறிப்பாக ஆப்ரகாம்லிங்கனின் வாழ்க்கை வரலாறைப் பற்றி குறிப்பிட்டு பேசியபோது, என் கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது. அதற்கு முன்பு ஆப்ரகாம்லிங்கனைப் பற்றி படித்திருந்தேன். ஆனால் ஆப்ரகாம் லிங்கனின் வாழ்வில் தோல்விகளையும், எண்ணற்ற அவமானங்களையும் சந்தித்தவர், அமெரிக்காவின் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடி, எல்லையற்ற இன்னல்களை சந்தித்து, தன்னுடைய ஆன்மாவையே அர்பணித்து, அந்த அமெரிக்க தேசத்தின் குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார். அமெரிக்க நாட்டின் உள்நாட்டுப் போருக்கு காரணமான கேரியத் பீச்சர்ஸ் ஸ்டோவின் "டாம் மாமா குடில்" என்ற புத்தகத்தின் ஆசிரியரின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்று, ஜானதிபதி வெள்ளை மாளிகையில் பதவியேற்கும் நிகழ்ச்சியை குறிப்பிட்டு பேசியது இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அவருடைய சிம்மக் குரலில் உரையைக் கேட்டபோது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வந்தது. ஒரு மாத காலம் என்னுடைய நித்திரையில் அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறுதான் கனவாக வந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் இயக்கத்தில் உருவான "லிங்கன்" என்ற திரைப்படத்தில் 13 Amendment - கறுப்பின மக்களின் விடுதலைக்கான சட்டத்தை எவ்வாறு அமெரிக்க பாராளுமன்றத்தில், பல தடைகளையும் மீறி தாக்கல் செய்கிறார் என்பதை அற்புதமான காவியமாக பார்த்தபோது, வைகோ அவர்கள் பேசிய உரைதான் பலமுறை ஞாபகம் வந்தது. மேலும் பல தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது மாகாத்மா காந்தியின் சுதந்திரப் போராட்ட காலத்தைய நிகழ்வுகளைப் பேசினார். அதே சமயம் என்னுடைய வாழ்க்கையில் நான் தமிழ் மொழியை நேசிப்பதற்கும், தமிழ்த் தாய் என்னுடைய நாவில் வந்து குடிகொண்டதற்கும் கல்கி அவர்களின் காலத்தால் அழியாத வரலாற்றுக் காவியமான "பொன்னியின் செல்வன்" புதினமும், "சிவகாமியின் சபதம்" என்ற இரண்டு புதினங்கள்தான், என்னுடைய சிறு வயது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழைத் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். இன்றும் நான் தமிழ் இலக்கியங்களையும், தமிழர்களின் வரலாற்று நிகழ்வுகளையும், உலக இலக்கியங்களையும், உலக வரலாறையும் ஒரு மாணவனாக கற்றுக் கொண்டே இருக்கிறேன். அந்த வகையில் கல்கி பத்திரிகை தமிழக வரலாற்றில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டது என்று குறிப்பிட்டு பேசினார். MCA வகுப்பு தொடங்க AICTE அங்கீகாரத்தை பெறுவதற்கு தான் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளையும், செயல்பாடுகளையும் பற்றி பேசினார்...எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியின் வரலாற்றில் 30.03.2001, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்பதை, இந்த SRNM கல்லூரி வலைப்பூ சொல்லிக் கொண்டே இருக்கும்...
கல்லூரியின் 2001 ம் வருட ஆண்டு விழா நிகழ்வின்போது.. (இடமிருந்து இரண்டாவது) - பேராசிரியர்.விஜயஸ்ரீ அவர்கள். கணிப்பொறித் துறை சுயநிதிப் பாடப்பிரிவில் பணிபுரிந்தார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அமெரிக்காவிலிருந்து எனக்கு முகநூலில் கல்லூரியின் வலைப்பூவை சிறப்பான முறையில் வடிவமைத்ததாக பாராட்டினார். வலைப்பூவில் நான் பதிவு செய்யும் செய்திகளுக்கு சிறந்ததொரு பாராட்டுக்களை கூறினார். அவருடைய பாராட்டுக்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். நான் இந்த அளவிற்கு என்னுடைய பேராசிரியர்களிடமிருந்தும், என்னுடன் பயின்ற மாணவ நண்பர்களிடமிருந்தும் வாழ்த்துக்களை பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், என்னுடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் நான் படித்த எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரிக்கு, சமூக வலைதளத்தில் உலக அளவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம் என்னை தினம் தினம் இயங்கச் செய்கிறது. இவற்றில் என்னுள் முழுமையான ஆன்மிக பலத்தை என்னுடைய குருநாதர் சுவாமி. விவேகானந்தர் அருள்கிறார்...

2001 ம் ஆண்டு - நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, கல்லூரி ஆண்டு விழா நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்...

No comments:

Post a Comment