Sunday, July 28, 2013

60 வயதை தாண்டிய அபூர்வ ராகத்தின் ஆச்சர்ய கீதங்கள்

**எவன் ஒருவனும் உன்னை விரும்பிவிட்டால்,அதை அடைவதிலிருந்து அவனை உலகின் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.சுவாமி விவேகானந் தரின் இந்த பொன்மொழிதான் ரஜினி அவர்களின் வீட்டு வரவேரற்பறையை அலங்கரிக்கிறது!!


**25 தடவைகளுக்கு மேல் ரத்த தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு தன கையெழுத்து போட்ட சர்டிபிகேட் தருவது ரஜினியின் வழக்கம்.

**'தளபதி' காலத்தில் வலது கணுக்காலில் கருப்பு கயிறு கட்டியிருப்பார்.பிறகு,இடது கை கட்டை விரலில் தங்க வளையம்.இப்போது ருத்ராட்ச மோதிரம்,ரஜினி ஸ்பெஷல்.

**ரஜினி Free ஆக இருந்தால்,அடையாளத்தை மறைக்கும் அளவுக்கு சின்னதான கெட்டப் சேஞ்சுடன் வெளியே கிளம்பிவிடுவார்.அப்படி போய் வந்த இடங்கள் திருப்பதி,கேரளா.

**கருப்பு நிற உடைகளை விரும்பி அணிந்த ரஜினி பிறகு வெள்ளைக்கு மாறினார்.இப்போது ஓய்வு நேரங்களில் காவி,கருப்பு,நீளம் என கலர் வேட்டிகள் அணிகிறார்.

**கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சியார் குப்பம்தான் ரஜினியின் பெற்றோருடைய பூர்விக ஊர்.அங்கு ரஜினியின் பெற்றோர் நினைவாக மண்டபம் ஒன்று கட்டப்பட்டபோது,அந்த பணிகளை நாச்சியார் குப்பத்துக்கு அடிக்கடி சென்று பார்வையிட்டவர் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்.

**முன்பு எல்லாம் நெருங்கிய நபர்கள் இறந்துபோனால் அவர்களின் துக்கத்துக்குப் போக மாட்டார்.நடிகர் ஜெய்சங்கரின் மரணத்துக்கூடப் போகவில்லை.'அவர்களின் சிரித்த முகம்தான் எனக்கு நினைவில்
இருக்க வேண்டும்' என்பதுதான் காரணம்.பிற்பாடு இந்த நிலையை மாற்றிக்கொண்டார்.

**பைரவி படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்'என்ற பட்டத்தை கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு.

**ரஜினிக்கு தெரிந்த மொழிகள் தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,மளையாளம்,
ஹிந்தி,தெலுங்கு!

*மால்பரோ சிகரெட்டை விரும்பிப் புகைக்கும் ரஜினி அவர்கள்,இப்போது வில்ஸுக்கு மாறிவிட்டார்.முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்தவர் இப்போது டென்சன் பொழுதுகளைத் தவிர மற்ற நேரங்களில் புகைப்பது இல்லை.

*ரஜினி அவர்களுக்கு பழக்கமான வாடகைக் கார் டிரைவர் இருக்கிறார்.இரவு நேரங்களில் திடீரென அவருக்கு போன்செய்து வரச் சொல்லி,எங்காவது கையேந்திபவனில் சாப்பாடு வாங்கி காருக்குள்ளேயே உட்கார்ந்து சாப்பிடுவார்.

*ரஜினி அவர்களை வைத்து அதிகப் படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி அவர்கள் நடித்து முத்துராமன் அவர்கள் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏ.வி.எம்.தாயரிப்பு!

*தமிழ் படங்களில் ரஷ்ய மொழியில் டப் ஆகிய முதல் படம் 'சந்திரமுகி'!

*ரஜினி அவர்கள் இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'.

*யார் தன்னை பார்க்க வந்தாலும்,வயது குறைந்தவர்களாக இருந்தாலும்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினி அவர்களின் வழக்கம்.வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்!

*தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெகுகாலம் முன்பே ஒரு பெருந்தொகையை fixed டெபாசிட்டில் போட்டுவிடுவார்.அந்த வட்டி பணத்தில்தான் அந்தக் குடும்பக்களுக்கான விழாச் செலவுகள் நடைபெறும்.

*பழமொழிகள்,குட்டிக் கதைகள்,பொன்மொழிகள் இவற்றுக்காகவே தனியாகப்  பல நூறு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறார்.அவற்றை மேடையில் பேசும்போது பயன்படுத்துவார்.

*ரஜினி அவர்களின் போயஸ் தோட்டத்து வீட்டின் பெயர் 'பிருந்தாவன்'.
இது ரஜினி அவர்களே ஆசையாக வைத்த பெயர்.


வலைப்பூ:www.rajni-superstar.blogspot.com

No comments:

Post a Comment