Wednesday, July 24, 2013

இந்திய திரை உலகின் நட்சத்திர இயக்குனர் - நவீன தமிழ் சினிமாவின் நாயகன்

*நவீன தமிழ் சினிமாவின் 'நான் கடவுள்'.ஒளியையும் மொழியையும் மாற்றி புதிய கதவைத் திறந்தவர்.உலகின் நூறு சிறந்த படங்களில் ஒன்றாக 'நாயகன்' டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டது.மிகப் பெரிய கவுரவத்தைக் கொண்டாட விழா எடுக்க நினைத்தபோது,அதைத் தடுத்தவர் மணிரத்னம்!

*தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள்,ஊழியர்கள்,உறவினர்கள் அனைவரையும் ஒரு கல்யாண மண்டபத்தில் கூட்டி சைவ விருந்து அளிப்பார்.பாட்டும்,ஆட்டமும் அவசியம் உண்டு.

*கைக்கடிகாரம் அணிகிற வழக்கம் இல்லை.ஆனால்,கடிகாராத்தை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்து,நேரம் அறிய விரும்பும்போது பார்ப்பார்.

*மணிரத்னம் சென்னைக்காரர் என்றே நினைக்கிறார்கள்.பக்கா மதுரைக்காரர்.ஜூன் - 2 பிறந்த தேதி.

*தன்னை யார் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் ரியாக்சன் காட்டவே மாட்டார்.இரண்டையும் புரம்தள்ளிவிடுகிற இயல்புடையவர்.

*கதை விவாதத்துக்கு எப்போதும் துணை சேர்க்கவே மாட்டார்.எல்லாமே அவரது எண்ணங்களாகத்தான் இருக்கும்.சந்தேகம் இருந்தால் மட்டும் ராக்கெட்டோ ஜாக்கெட்டோ சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வார்.

*முழு ஸ்க்ரிப்டையும் பென்சிலில்தான் எழுதுவார்.பேனா உபயோகிக்க மாட்டார்.தவறாக எழுதியிருந்தால் திருத்தி எழுத வசதியாச்சே.
பென்சிலில் இருந்து நேரடியாக ஸ்கிரிப்ட் கம்ப்யூட்டர் மயமாகிவிடும்.

*படம் ரிலீசான தினத்தன்று கொஞ்சம் கூட டென்சன் ஆக மாட்டார்.தியேட்டர் நிலவரம் விசாரிக்க மாட்டார்.நிதானமாக அன்றைக்கு அடுத்த படத்தின் வேலையை ஆரம்பிப்பார்.

*நந்தனுக்கு பரீட்சை என்றால் அன்று அலுவலகத்துக்கு விடுமுறை போடுவார். மகனுக்கு சொல்லிக்கொடுக்கத்தான் இந்த விடுமுறை.

*நல்ல படமாகவும் இருக்க வேண்டும்.அது வெற்றிகரமான படமாகவும் இருக்க வேண்டும்.அந்த விதத்தில் '16 வயதினிலே' பாடத்தைத்தான் பிடித்த படம் என அடிக்கடி குறிப்பிடுவார்.

*காரில் ஏறி உட்கார்ந்ததும் முதல் வேலையாக சீட் பெல்ட் போட்டுக்கொள்வார். எல்லோரையும் அவ்விதம் செய்யத்தூண்டுவார்.

*படத்துக்கு பூஜை,கேமராவுக்கு முன்னாடி தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டுவது,பூசணிக்காய் உடைப்பது,ராகுகாலம்,எமகண்டம் இப்படி எதையும் பார்க்கமாட்டார்.தன உழைப்பு ஒன்றையே நம்புவார்.

*பாலாவின் பிதாமகன்,நான் கடவுள் படங்களை டிக்கெட் எடுத்து தியேட்டுருக்கே போய் மக்களோடு இருந்து பார்த்திருக்கிறார்.பாலாவின் படங்களின் மீது மட்டும் ஸ்பெசல் மரியாதை.

*தன்னிடம் இருந்து எந்த ஒரு அசிஸ்டன்ட் வெளியே வாய்ப்பு தேடி போனாலும், அவர்களுக்கு ஒரு தொகையை கொடுத்து,வாய்ப்பு கிடைக்கும் வரை பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுவார்.

*மனைவியை எப்போதும் 'ஹாசினி' என்றே அழைப்பார்.சுஹாசினியும்
இவரை சிம்பிளாக 'மணி' என்றே அழைப்பார்.

*பெண் குழந்தை ரொம்பவும் பிடிக்கும்.அநேகமாக அவரின் பல படங்களில் ஹீரோ ஹீரோயினையைப் பார்த்து 'எனக்குப் பெண் குழந்தை பிடிக்கும்' எனச் சொல்லும் சீன் இருக்கும்.

*மணிரத்னம் முதல் ஐந்து படங்கள் முடியும் வரை கார் வாங்கவே இல்லை.'தளபதி' படம் முடிந்த பிறகுதான் கார் வாங்கினார்.அவரின் திருமணமும் அப்புறம்தான் நடந்தது.

*மணிரத்தனம் தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், சிரமப்பட்டு எடுத்த படமாகவும் கருதுவது 'இருவர்'.பேச்சின் ஊடாக அதை அடிக்கடி குறிப்பிடுவார்.

*நடிகர்களிடம் இப்படித்தான் நடிக்க வேண்டும் என நடித்துக்காட்ட மாட்டார்.அவர்களை இயல்பாக நடிக்கவிட்டு,தேவையான கரெக்சன்களை மட்டுமே கொடுத்து படமாக்குவதையே விரும்புவார்.

*மணிரத்னம் படங்களில் மழையும் ரயிலும் நிச்சயம் இடம்பெறும்.கூர்ந்து கவனிக்கும் ரசிகர்களுக்கு புரிபடும் இந்த உண்மை!

*தனிமை விரும்பி.அவரைத் தெரிந்து கொண்டவர்கள் அதை அனுசரித்து நடப்பார்கள்.

*மணிரத்னம் அவர்களின் மானசீக குரு அகிரா குரோசோவா.அவரது படங்களை திரையிட்டுக் காண்பதை அதிகம் விரும்பும் மனசு!

*கொடைக்கானலில் மணிரத்னம் அவர்களின் கனவு இல்லம் கிட்டத்தட்ட தயார். பெரிய தியேட்டரும் உள்ளே உண்டாம்.

*மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர்களாக 'ரியல் இமேஜ்' ஜெயேந்திரா, பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ்சிவன் மூவரைச் சொல்லலாம்.மாதம் ஒரு தடவையாவது சந்தித்து சிரிப்பது வழக்கம்.

*உடை தேர்வில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்.சிம்பிளாக பருத்தி ஆடைகள் போதும்.எவ்வளவு கிராண்ட் விழாவாக இருந்தாலும் கவலையேபடாமல் எளிமையின் வடிவில் வருவார்.

வலைப்பூ:www.legendmaniratnam.blogspot.com

No comments:

Post a Comment