Tuesday, July 16, 2013

கல்லூரி முதல்வர் 'குருசாமி' அவர்கள்...


இளங்கலை கணிப்பொறி இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவராக படிக்கும்போது கல்லூரியின் முதல்வராக விலங்கியல் துறை பேராசிரியர் 
Dr.குருசாமி அவர்கள் இருந்தார். நல்ல ஆளுமைமிக்க கம்பீரமானத் தோற்றம், மேடைகளில் பேசும்போது கரகரப்பான சிம்மக் குரல், முதல்வர் பதவி வகித்தபோது கல்லூரியின் சிறந்த நிர்வாகி என்று மாணவர்கள் அனைவரும் 
நேசிக்கும் முதல்வராக இருந்தார்கள். 

நான் சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து சில நேரங்களில் கல்லூரி வளாகங்களில் ஏதாவது நகைச்சுவையாக விளையாடிக் கொண்டிருந்தால், எங்களுக்குத் தெரியாமலேயே அருகில் வந்து நின்று விடுவார். நாங்கள் திடீரென்று முதல்வரைப் பார்க்கும்போது, ஒண்ணுமில்லே சார் சும்மாப் பேசி விளையாண்டுகிட்டு இருந்தோம். அது சரி! சினிமாவுல நடிக்கிற காமெடி நடிகர் விவேக்கே தோத்து போயிருவாப்புல போல இருக்கே. கல்லூரிய ஒரு சுத்து சுத்தி வந்தா யாரப் பாக்குறமோ இல்லையோ, உங்க டீம் மட்டும் துண்டா தெரியுறேங்க. சினிமா பீல்டுக்கு போனங்கின்னா பெரிய அளவுல சாதிக்கலாம். என்ன ஒரு நகைச்சுவை உணர்வு உங்க கிட்ட. ரொம்ப சந்தோசமா இருக்குது. ஆனா இப்படி Midterm பரீட்சையை ஒன்றரை மணி நேரத்துல எழுதிக் கொடுத்துட்டு, எங்கேயும் போகாம காலேஜுக்குள்ளேயே இருக்கேங்களே, பெருமையா இருக்குது. ஆமா நீங்க எல்லாம் மூணாவது வருஷம் ஸ்டுடண்ட்ஸ். செந்தில்குமாரு முதல் வருஷம் படிக்கிறாரு. வேற யாரும் முதல் வருஷம் படிக்கிற பசங்களக் காணோம். அவங்க எல்லாம் இன்னும் பரீட்சை எழுதிகிட்டு இருக்காங்க சார். ஒரு நாளு மாதத் தேர்வு நடந்துகிட்டு இருக்கும்போது நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இது. இந்த மாதிரி ரொம்ப நகைச்சுவையா, இயல்பான மனிதரா மாணவர்கள் கிட்ட பேசுவாரு குருசாமி சாரு. வாரத்துல எப்படியும் மூணு தடவையாவது கல்லூரி முடிஞ்சதுக்கு அப்புறம், நானும் மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறையில படிச்ச உதயசூரியன் அண்ணனும் குருசாமி சாரோட முதல்வர் அறைக்குப் போயி, ஏதாவது பழங்களை கொடுத்துட்டு பத்து நிமிஷம் பேசிட்டு வருவோம். உதயசூரியன் அண்ணனை எல்லாரும் "அட்டாக்"ன்னு பட்டப் பேரு சொல்லிக் கூப்புடுவாங்க. நாங்க ஜூனியர் மாணவர்கள் எல்லாம் உதயசூரியன் அண்ணானுதான் கூப்புடுவோம். உதயசூரியன் அண்ணனுக்கு வாசுதேவநல்லூர் சொந்த ஊரு. நான் கல்லூரியில படிச்சப் முதல் வருஷம் உதயசூரியன் அண்ணனும் நானும் ரொம்ப தீவிரமான நட்போட நண்பர்களா இருந்தோம். விடுதிக்காப்பாளர் சீனிவாசன் சாரும், எஸ்.எஸ்.சாரும் சீனியர் மாணவர்களோட அதிகமா சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனா நாளடைவுல உதயசூரியன்னா செந்தில்குமாரு அப்படீங்குற அளவுக்கு பழகுனோம். முதல் வருஷம் படிக்கும்போது விடுதி உணவகத்துல வேலை செஞ்ச சமையல் மாஸ்டரு சாத்தூர் மெயின் ரோட்டுல அதிகாலைப் பொழுது வண்டி மோதி, விபத்து ஏற்பட்டு காலமாயிட்டாரு. அப்போ நாங்க விடுதி மாணவர்கள் சில பேரு ஓடிப்போயி ரோட்டுல பாத்தப்போ வழியால துடிச்சிகிட்டு இருந்தாரு. ஆம்புலன்ஸ் வண்டி சரியான நேரத்துல வரததால கொஞ்ச நேரத்துல விடுதி மாணவர்கள் எல்லாம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில உட்கார்ந்து தர்ணா பண்ண ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் கொஞ்ச நேரத்துல கல்லூரி மாணவர்கள் எல்லாம் நிறைய பேரு வரவும், நெடுஞ்சாலையில ஓவர் டிராபிக் ஆகி பிரச்சினை பெருசா ஆகிருச்சு.

அப்போ என்னோட வகுப்புல படிச்ச புவனேஸ்வரியோட அப்பாதான் சாத்தூருல இன்ஸ்பெக்டரா இருந்தாரு. காவல்துறை மாணவர்களை எல்லாம் கலைஞ்சு போகச்சொன்னப்ப யாருமே போகலை. அப்புறம் காவல்துறை அதிகாரிங்க மாணவர்கள் மேல லத்தி சார்ஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. மிகப்பெரிய அளவுல நெடுஞ்சாலை கலவர பூமியாவே மாறிப்போச்சு. ஒரு காவல்துறை அதிகாரி என் பக்கத்துல நின்னுகிட்டு இருந்த உதயசூரியன் அண்ணனை லத்திக் கம்பால தாருமாரு அடிக்க ஆரம்பிச்சாரு. எனக்கோ கையும் ஓடல காலும் ஓடல. தீடிர்னு ஒரு காவல்துறை அதிகாரி என்னையும் லத்தியால ரெண்டு அடி விட்டாரு. நானு கணிதம் மூணாவது வருஷம் படிச்ச கிருஷ்ணபிரகாஷ் அண்ணன், உதயசூரியன் மூணு பேரும் சேர்ந்து ஒரு போலீஸ்கிட்ட இருந்து லத்திய லாவகமா பிடுங்கிட்டோம். அப்புறமா லேசா அவங்களை மாதிரி ரெண்டு அடி விட்டோம். ரெண்டு போலீசும் ஓடிப்போயிட்டாங்க. எம்மேல போலீஸ் அடிக்க வந்தப்ப குறுக்கால ஓடி வந்து ராமலிங்கபுரம் கிருஷ்ணபிரகாஷ் அண்ணன் அடியை வாங்கிகிட்டாரு. இந்த சமயத்துல காலேஜ்ல சிக்கல் கோவிந்தராஜ் அண்ணான்னு ஒருத்தரு லேப்ல அட்டண்டரா இருக்குறவரு, ஏய் இங்க வாங்கப்ப..! போலீஸ் ஜீப்ப துண்டா தூக்கி ஓடைக்குள்ள தள்ளிவிடுவோ முன்னு  கூப்புட்டாரு. நாங்க நாளும் பேரும் சேர்ந்து மூணு வண்டிய ஓடைக்குள்ள தள்ளி விட்டுட்டோம். தள்ளி விடுறதுக்கு முன்னாடி மாணவர்கள் வண்டிய அப்பளமா நொறுக்கி இருந்தாங்க. மாணவர்கள் எல்லாம் கற்களை தாறுமாறா வீசி எரிஞ்சிகிட்டு இருந்தாங்க. இறைவா! இது என்ன சோதனைன்னு கல்லூரிக்குள்ள ஓட ஆரம்பிச்சோம். போலீஸ்கிட்ட லத்தியில வாங்குன அடி வேற தாங்க முடியல. இந்த சமயத்துலதான் எங்க மூணு பேரையும் குருசாமி சாரு ஒரு வண்டி எடுத்துட்டு வந்து  ஒரு அறைக்கு கூப்புட்டு போயி மருந்து போட்டு விட்டாரு. அப்போ 1999 ம் வருஷம் பேராசிரியரா இருந்தாரு. ஏம்பா! இப்படி அடி வாங்கியிருக்கேங்க. கண்ண மூடி கண்ணத் திறக்குறதுக்குள்ள அடி பின்னி எடுத்துட்டாங்க சார். வலியில உயிரே போகுது. சரி சரி! அமைதியா இங்கேயே உட்கார்ந்து இருங்க. எங்கேயும் போக வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாரு. அப்ப இருந்துதான் நானும் உதயசூரியன் அண்ணனும் குருசாமி சாரோட ரொம்ப அன்னி யோன்யமா இருந்தோம். குருசாமி சாரு, உதயசூரியன் அண்ணனுக்கு பாடம் எடுக்குறவரு. அடிக்கடி ஏதாவது enquiry அண்ணன் மேல நடந்துகிட்டே இருக்கும். அண்ணனோட அம்மா அடிக்கடி கல்லூரிக்கு வருவாங்க. அவங்க அம்மா வாசுதேவநல்லூர்ல அரசு மருத்துவமனையில நர்சா வேலை பாத்தாங்க.

அண்ணனோட அப்பாவும், எங்க அப்பாவும் கிட்டத்தட்ட ஒரே கேரக்டர் அப்படீங்கறதால, எங்களுக்குள்ள அப்படி ஒரு நட்பு உண்டாகிச்சி. படிக்கும்போது அடிக்கடி அண்ணனோட வீட்டுக்கு போவேன். அண்ணனோட அப்பா ரொம்ப முரட்டுத் தனமான ஆளு. ரெண்டு சண்டியர்கள் சேர்ந்து என்ன பண்ணலாம்னு ஐடியாவோன்னு நகைச்சுவையா கேட்பாரு. அண்ணன் அடிக்கடி கல்லூரிக்கு விடுமுறை எடுக்குறது, ஏதாவது குறும்பு பண்றதால அடிக்கடி Enquiry இருக்கும். அதனால அட்வான்சா உதயசூரியன் அண்ணன் குருசாமி சார விலங்கியல் துறையில பாக்கப்போகும் போது நானும் நட்பு ரீதியா கூடப்போவேன். அப்ப சாரு சொல்லுவாரு, செந்தில்குமாரு நீ கம்பியூட்டர் ஸ்டுடண்ட். ஆனா அடிக்கடி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கோவிந்தராஜ் சாரோட பாக்கமுடியுது. ரொம்ப நேரமா அவரோட அறையில உட்காந்து பேசிகிட்டு இருக்குறீங்க. நூலகத்துல அடிக்கடி பார்க்க முடியுது. ஆனா கம்பியூட்டரு புத்தகங்களை வச்சு படிக்கிற மாதிரி தெரியல. பரவா இல்லே. சமூகத்து மேல ஒரு அக்கறை இருக்குது. ரொம்ப பொறுப்பான பசங்க எல்லாம் நல்லா படிச்சி கை நிறைய சம்பளத்துல ஒரு பெரிய நிறுவனத்துல வேலைக்குப் போயிருவாங்க. உங்கள மாதிரி பசங்களாலதான் சமூகத்துல துணிச்சலா எந்த ஒரு விசயத்தையும் சாதிக்க முடியும். உங்களை மாதிரியே என்கூட தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில படிச்ச ஒரு மாணவர், இன்னைக்கு அரசியல்வாதியாயா இருக்காரு. ஒண்ணுக்குமே உருப்பட மாட்டேடான்னு சொன்ன எங்க பேராசியரு இன்னைக்கு அவரோட நெருங்கிய நண்பரா இருக்காரு. பசங்க எந்த காலத்துல எந்த ரூபத்துல எப்படி வருவாங்கன்னு சொல்லவே முடியாது... 


பிரான்சு நாட்டு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ் எழுதுன நூற்றாண்டுகளின் நிகழ்வுகள்  என்ற நூலை எங்களுக்கு படிக்க கொடுத்தாரு. அதுல 2025 ம் வருஷத்துக்குள்ள, தென்னிந்தியாவுல பிறக்கிற வீரஇளைஞன் உலகின் தலைசிறந்த அரசியல்வாதியாகவும், தலைசிறந்த பேச்சாளனாகவும், உலகின் தலைசிறந்த ஐந்தாவது மாமனிதனாகவும் போற்றப்படுவாருன்னு எழுதியிருந்தது. அந்த நூலோட தமிழ் பிரதியோட பக்கங்களை படிச்சிப் பாருங்கன்னு எங்ககிட்ட கொடுத்தாரு. ஏதாவது சாதிக்க முடியுமான்னு யோசிங்கன்னு சொன்னாரு. குருசாமி சாரு எங்ககிட்ட பேசுன அந்த நாளை எப்பவுமே வாழ்க்கையில மறக்க முடியாது. அதுல எழுதப்பட்ட விசயங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டதா இருந்தாலும், காலமாற்றங்கள்ல எதுவுமே நடக்குமுன்னு நம்பிக்கை இருந்தது. நாஸ்டர்டாமஸ் சொன்ன மாதிரி 2001 ம் வருடம் செப்டம்பர் மாதம், உலக வரைபடத்துல 45 டிகிரி கோணத்துல அமெரிக்காவுல இருக்குற நியூயார்க் நகர இரட்டை கோபுரத்துல ஒசாமா பின்லாடன் ஏரோபிளேன்களை விட்டு நடத்துன  இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்துருச்சு. இனி அடுத்து நடக்க இருக்குறது தென்னிந்தியாவுல இருந்து உலகையே மூழ்கடிக்கிற மாதிரி கிளம்புற மிகப்பெரிய ஆன்மிக அலைதான். ஏன்னா, உலகத்துல நடக்கப்போற ஒவ்வொரு சரித்திர நிகழ்வுகளும் இறைவனால முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதுதான். ஒவ்வொரு நூற்றாண்டுலயும் உலகத்துல மிகப்பெரிய சரித்திர புருஷர்கள் சில பேருதான் உருவாகுவாங்க. காலமும் சூழ்நிலையும்தான் உருவாக்குது. அப்படி உலகத்துல மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துற தலைவர்களைதான் கோடான கோடி மக்களும் எதிர்நோக்கி காத்து இருக்காங்க..!
DhanushKRaja.tumblr.com

ஓம் நமசிவாய!

No comments:

Post a Comment