Tuesday, July 23, 2013

ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ போல் மிகச்சிறந்த நடிகர் தம்பி சிவாஜி ~ அறிஞர் அண்ணா

உலக அளவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் என்று மிகச்சிலரை மட்டுமே சொல்லலாம்.அவர்களில் நமது நடிகர் திலகம் - பத்மஸ்ரீ - செவாலியே சிவாஜி கணேசன் ஒருவர் என்பது தமிழர்க்கு பெருமை!தமிழ் மண்ணுக்கு சிறப்பு!!

மறைந்தும்,மறையாமல் தனது நடிப்பு மேதமையால் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற நடிகர் திலகம் அவர்களின் திறமைக்கும் - ஆற்றலுக்கும் உரிய கவுரவம் கொடுக்கிற வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் சென்னை கடற்கரைச் சாலையில் சிலை நிறுவி இருக்கிறார்கள்!! 

சிவாஜி நினைவை போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் மனிமண்டபமும் அமைக்க இருக்கிறார்!!வி.சி.கணேசன் இருந்தவரை (சினிமாவை நேசிக்காத)தந்தை பெரியார் வீர சிவாஜி நாடகத்தில் கணேசனின் நடிப்பை பார்த்து சிலிர்த்துப்போய் சிவாஜி என்று நாமகரணம் சூட்டிய பெருமைக்குரிய கலைஞன் சிவாஜி!!



"உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவைப் போல் மிகச்சிறந்த நடிகர் தம்பி சிவாஜி" என்று பேரறிஞர் அண்ணா அகமகிழ்ச்சியோடு வியந்துபோற்றிய நடிப்பரசன் சிவாஜி!

கலையை நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் சிவாஜி என்ற மாபெரும் மனிதன் மிகப்பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார்.எனக்கும் அவ்வாறுதான் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

No comments:

Post a Comment