Friday, July 5, 2013

நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் - சின்னக்காமன்பட்டி

முகாம் நடைபெற்ற நாட்கள்: 16.02.2001 - 25.02.2001 - பத்து நாட்கள் 

முகாம் பொறுப்பு ஆசிரியர்கள்: 
பேரா.கேத்தராஜ் (வணிகவியல் துறை), பேரா.க.இராமச்சந்திரன் (தமிழ்த் துறை), பேரா.ராஜேஷ் (இயற்பியல் துறை)...

முகாம் நடைபெற்ற இடம்: சின்னக்காமன்பட்டி கிராமம்

மாணவர்கள் தங்கியிருந்த இடம்: அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம்

இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் கணிப்பொறித்துறையிலிருந்து நான் ஒருவன் மட்டுமே கலந்து கொண்டு, பணியாற்றினேன். பெரும்பாலும் இது போன்ற NSS முகாமிற்கு கணிப்பொறித்துறை மாணவர்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. மாணவர்களும் அப்போதைய துறைத்தலைவர் பேரா.கிருஷ்ணவேணி அவர்களிடம் அனுமதி பெற செல்ல மாட்டார்கள். ஏனெனில் வருடத்தின் இரண்டாம் பருவம் என்பதால், குறைந்த நாட்களில் கணினி நிரல்களை செய்து முடிக்க வேண்டும். நாட்கள் அதிகம் கிடைக்காது. தேர்வுகள் வேறு நெருங்குவதால் யாரும் ஆர்வம் காட்டுவது கிடையாது.
நான் துறைத்தலைவர் பேரா.கிருஷ்ணவேணி அவர்களிடம் அனுமதி கடிதம் எழுதிக் கொண்டு துறைக்குச் சென்று அனுமதி கேட்டபோது, எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல், அனுமதிக் கடிதத்தில் கையொப்பம் இட்டார். ஏனெனில் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவத்தில் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தேன். கிருஷ்ணவேணி அவர்களின் பாடமான
Cobol Programming பாடத்தில் மட்டும் 80 மதிப்பெண்கள் பெற்றிருந்த காரணத்தால், நன்றாக படித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் கையொப்பமிட்டு விட்டு கூறினார். பரவாயில்லை செந்தில்குமார், தைரியமாக என்னிடம் வந்து அனுமதி கேட்டதற்கு.. எந்த ஒரு மாணவரும் அணுகாத பட்சத்தில் முகாமிற்கு செல்ல வேண்டும் என்ற சிந்தனை பாராட்டுக்குரியது. யாருக்கும் நான் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் நான் அனுமதி கொடுக்கா விட்டாலும் நீ முகாமிற்கு செல்வாய் என்பது நிச்சயமாதலால், என்னால் அனுமதி கையொப்பம் இடாமல் இருக்க முடியாது. எதிர்காலத்தில் இதே தைரியத்துடன் பொது வாழ்க்கையிலும் சரி, சமூகப் பணியிலும் பணியாற்றுவாயா என்று என்னிடம் கேட்டபோது, நிச்சயமாக மேடம் என்று கூறினேன். அந்த தைரியம் உன்னிடம் நிறையவே இருக்கிறது. சந்தோசமாக முகாமிற்கு சென்று பணியாற்றி விட்டு வரவும். சரி போயிட்டு வரலாம் என்று சொல்லியதும், நான் மிக்க நன்றி என்று கூறிவிட்டு முகாமிற்கு கிளம்பினேன்.

நாட்டு நலப்பணித்திட்ட முகாமைத் துவக்கி வைத்து கல்லூரி முதல்வர் Dr.குருசாமி அவர்கள் உரையாற்றுகிறார்...


இயற்பியல் துறை பேராசிரியர்.ராஜேஷ் அவர்களின் பின்னால் நான் நின்றுகொண்டிருந்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படம்...



No comments:

Post a Comment