Sunday, September 1, 2013

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நானும் எனது ஆருயிர் நண்பர் ஆட்டோ. சந்திரகுமார் அவர்களின் குடும்பத்தாருடன் கோவை மாநகரில் பேரூரிலுள்ள சிவாலய தலமான பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்த வேளையில் - 03.08.13 ~ சனிக்கிழமை

நொய்யல் ஆறு இறவாப்பனை (நடுவில்)-நால்வர் மடம் கோயிலைக் கட்டிய சுப்புராய பிள்ளையின் பேரன் நம்பி ஆரூரான் 

சுப்புராய பிள்ளையின் சமாதி

பேரூர் கோயில் முன்பு உள்ள தெப்பக்குளம்

அப்பர் தனது ஷேத்திரக்கோவையில்,பேரூர் பிரமபுரம் பேராவூரும் என்றும் ஆரூரார் பேரூரார் என்றும் 2 இடங்களில் குறிப்பிட்டுள்ளதும்,காஞ்சி வாய்ப்பேரூர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளதும்,
கரிகால் சோழன்,நாயக்க மன்னர்கள்,சேர,சோழ,பாண்டிய மன்னர்கள்,மைசூர் 
மன்னர்கள்,விஜயநகர அரசர்கள் வணங்கியதும்,பிரம்மா,திருமால்,அதி உக்ரகாளி,நந்தி,சுந்தரர் ஆகியோருக்காக நடராஜர் சிதம்பரத்தில் ஆடியது 
போலவே ஆனந்த நடனம் புரிந்ததும்,அருணகிரிநாதரால் திருப்புகழ் 
பாடபெற்ற தண்டபாணி உள்ளதும்,கச்சியப்ப முனிவரால் தலபுராணம் பாடப் 
பெற்றதும்,காமதேனு முக்தியடைந்ததும்,எப்போதும் நாரயணரையே வணங்கும் நாரதர் வழிபட்ட சிவனிருப்பதும்,பட்டிபுரி,ஆதிபுரி,ஞானபுரி,
நாரதேஸ்வரம்,காமதேனுபுரம்,தட்சிண கைலாயம்,மேலைச்சிதம்பரம் 
என்றெல்லாம் கூறப்படும் பெருமை பெற்றதும் சுமார் 1800 ஆண்டுகள் 
பழமைவாய்ந்த திருப்பேரூர் திருத்தலம்.இத்திருலத்தில் ஏராளமான சிற்பங்கள் அழகாக காட்சி அளிக்கின்றன.

பிறாவப்புளி 


பட்டிசுத்தும் மேடைக்கு கிழக்கில் சாலையோரத்தில் உள்ளது.ஒரே பிறப்புக்கான வரம்பெற்ற வந்த புளியமரம்.இந்த மரத்தின் விதைகள் முளைப்பதில்லை.இத்தலத்தை வழிபடுபவர்கள் இனி பிறவாநிலை அடைவார்கள் என்று காட்டுவதற்காக அமைந்துள்ளது.

இறவாப்பனை 


அறவாணர்கள் போற்றிடும் பேரூர் 
அழியா எமக்கோர் இடமாகி 
உறவாம் அதனால் எமைப்போல 
உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு 
இறவாப்பனை ஒன்றுள்ளது

என்று கச்சியப்ப முனிவரால் குறிக்கப் பெற்றுள்ள இப்பனை மரம் வடகைலாயர் கோவிலுக்கு வடகிழக்குப் பகுதியில் பிரம்ம தீர்த்தக்கரையில் 
பல ஆண்டுகளாக இறவாமல் உள்ளது.இத்தலத்தைச் சுற்றி வாழ்பவர்கள் இறவாத புகழுடம்பு எய்துவர் என்பதற்க்குச் சான்றாக அமைந்துள்ளது.

புழுக்காத சாணம் 

கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கால்நடைகளின் சாணம் எவ்வளவு நாட்களாக விழுந்து கிடந்தாலும் புழுப்பதில்லை.இத்தலத்தில் இறப்போருக்கு 
மீண்டும் பிறப்பில்லை என்பதை இது காட்டுகிறது.

கல் எலும்பு 

காஞ்சிமாநதியில் இடப்படும் எலும்புகள் சில நாட்களில் கற்களாக மாறிவிடு 
வதாக ஐதீகம்.அதனால் இத்தலத்தை ஒட்டியுள்ள ஆற்றங்கரையில் 
ஈமக்கிரியை சடங்குகள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன.

வலது செவி மேலே 

இத்தலத்தின் அருகே வாழ்பவர்கள் வலதுசெவி மேலுள்ள நிலையிலேயே இறப்பவர்கள் என்று கூறப்படுகிறது.

108 விளக்கு பூஜை 

கிருத்திகைதோறும் கடந்த 34 வருடங்களாக 108 விளக்கு பூஜை சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.தற்போது பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளிலும் 
திருவிளக்கு வழிபாடு நடைபெற்று வருகின்றது.

கோவிலுக்கு வடக்கே காஞ்சிநதியில் கட்டப்பட்டுள்ள சோழன் படித்துறை கரிகால் சோழனால் அமைக்கப்பட்டது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
கொங்கு நாட்டின் வரலாற்றையே இங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக 
அறிந்து கொள்ள முடிகின்றது.

கொங்குசோழர் கட்டிய அர்த்தமண்டபம்,மைசூர் அரசர் வெட்டிய 16 கோணமுள்ள திருக்குளம்,ஹோய்சாலர்களின் திருப்பணி இவைதவிர பல 
செப்புப் பட்டயங்களும் உள்ளன.

கல்யாணி என்ற 13 வயது பெண் யானை உள்ளது.

No comments:

Post a Comment