Monday, October 28, 2013

இந்திய திரை உலகின் உலகநாயகன்!!

களத்தூர் கண்ணம்மாவில் கையெடுத்து கும்பிட்ட சிறுவனை இன்று இந்திய
சினிமா வணங்குகிறது.தாகங்களின் தசாவதாரம்.தலைமுறைகளை வென்ற தனி அவதராம்.புதுமைகளை புகுத்தும் காதல் மன்னன் கமலஹாசன்!

*முதல் படத்திலேயே(களத்தூர் கண்ணம்மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்!கமல்,சாருஹாசன், சுஹாசினி,
என அவரது குடும்பத்தில் இருந்தே மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக் கிறார்கள்!

*களத்தூர் கண்ணம்மா,ஆனந்த ஜோதி,பார்த்தால் பசி தீரும்,பாத காணிக்கை,
வானம்பாடி என 5 படங்களில் நடித்து முடித்த பிறகு,அவ்வை டி.கே.சண்மு கத்திடம் சேர்ந்தார் கமல்.அவர் வேறு திசைக்கு பயணப்பட்டது அதற்குப்
பிறகுதான்.

*பிலிம் பேர் விருதை 18 முறைக்கு மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமல்தான்!தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,பெங்காலி மொழிப்
படங்களில் நடித்திருக்கிற ஒரே தமிழ் நடிகர் கமல்தான்!

*எண்பதுகளின் மத்தியில் "மய்யம்" என்ற இலக்கியப் பத்திரிக்கையைக் கொஞ்ச காலம் நடத்தினார் கமல்!தன் உடலைத் தானம் செய்திருக்கிறார் கமல்.சினிமாவில் இத்தகைய முன்மாதிரி இவர்தான்!

*எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்',சிவாஜிக்கு 'சவாலே சமாளி',ஜெயலலி தாவுக்கு 'அன்பு தங்கை' படங்களில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி
இருக்கிறார் கமல்.

*ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வந்த 'உணர்ச்சிகள்' தான் கமலைத் தனி
கதாநாயகனாக ஆக்கியது.ஆனால்,முந்திக் கொண்டு வெளிவந்த படம்
"பட்டாம்பூச்சி'!

*'நினைத்தாலே இனிக்கும்' படம்தான் கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்த கடைசிப் படம்!

*கமல் ரொம்பவும் ஆசைப்பட்டு,முற்றுப்பெறாத கனவுகளில் ஒன்று,
மருதநாயகம்.

*கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டவர் என்றாலும்,ஆத்திகத்தை கமல்
விமர்சனம் செய்வதில்லை!

*கமலுடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் இரண்டு பேர்.
ஸ்ரீ தேவி,ஸ்ரீ பிரியா.

*கமல் மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்த மனிதர் மறைந்த அனந்து.தன்னை வேறு தளத்துக்கு அழைத்து வந்த நண்பர் என்ற அன்பு அவர் நெஞ்சு நிறைய
உண்டு!

*அதிஅற்புதமான உலக சினிமாக்களின் டி.வி.டி.அணிவகுப்பு கமலின் ஹோம்
தியேட்டர் கலெக்சனில் இருக்கிறது.

*பட்டு வேட்டி பிடிக்கும்.தழையத் தழையக் கட்டிக்கொண்டு ஆபிஸ் வந்தால்,
அன்று முழுக்க உற்சாக மூடில் இருப்பார்.

*தமிழ்,ஆங்கிலம்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,பெங்காலி,கன்னடம்,
பிரெஞ்சு என எட்டு மொழிகள் கைவந்த வித்தகர்.

*உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்று கேட்டால்,நான் நடிக்கப் போகும் எனது அடுத்த படம் என்பார்.

*ஆஸ்கர் விருது பெற்ற 'டிராபிக்' படத்தை இயக்கிய ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் சோடர்பெர்க்கைப் போன்று ஒரு ஸ்டெடிகேம் கேமராவை இடுப்பில் கட்டி, லென்ஸைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொண்டு 'சிங்கிள்மேன் யூனிட்டாக ஒரு படத்தை இயக்கி நடிப்பது கமலின் நீண்ட நாள் ஆசை!

*கமலுக்கு சினிமா சென்டிமென்டுகளில் துளியும் நம்பிக்கை கிடையாது."ஹேராம்" படத்தின் முதல் வசனமே இப்படித்தான் இருக்கும்.."சாகேத்ராம்
திஸ் இஸ் பேக்-அப் டைம்!

*நடிகர் நாகேசுக்கும் கமலுக்குமான உறவு "அப்பா-மகன்" உறவு போன்றது.
தன்னை கமல்ஜி என்று நாகேஷ் அழைக்கும்போது,எதுக்கு அந்த ஜி என்ற
கமலிடம்,"கமலுக்குள்ள ஒரு நாகேஷ் இருக்கலாம்.ஆனால்,நாகேசுக்குள்ள
ஒரு கமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பாராம் நாகேஷ்!

No comments:

Post a Comment