Friday, January 24, 2014

ஐயோ!!இனப்படுகொலை

ஆடு,மாடு,கோழிகளை கொன்று மனிதர்கள் உணவாகத் தின்றால்,அதற்கு நல்ல புலால் என்று சொல்லிக் கொள்வார்கள்.நல்ல விருந்து உணவு என்றும் சொல்லிக் கொண்டு திருப்தியடைவார்கள்.அதே விலங்குகள் எதேச்சையாக மனிதர்களை வேட்டையாடி கொன்றுவிட்டால்,ஏதோ மனித சமுதாயமே அழிந்துவிட்டதாக மனிதர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.விலங்கை வேட்டையாடிக் கொள்வதை,ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக எழுதுவதை எண்ணி வாய்விட்டு சிரிப்பதைத் தவிர,வேறு என்ன செய்ய முடியும். மனிதர்களை மனிதனே கூட்டமாக அழித்தால் - இனப்படுகொலை.அதே மனிதர்கள் விலங்குகளான ஆடு,மாடு,கோழிகளை கொன்றொழித்தால் புலால் உணவு.இந்த பூமியில் என்ன ஒரு வினோதமான சூழ்நிலை.மனிதனுக்காக மட்டுமே இந்த உலகம் படைக்கப்பட்டதாக மனிதர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.இந்தப் பூமியில் மனிதனும் ஒரு மிகப்பெரிய பூச்சியினம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.விலங்குகளை விட மிகுதியான வன்முறை எண்ணங்களை மனிதன் கைவிட்டாலே உலகம் சுபிட்சம் பெரும்.


No comments:

Post a Comment