Saturday, January 25, 2014

அரசியலில் அகதிகளாகப் போகும் திராவிட முன்னேற்றக் கழகம்!

இந்தியாவிலேயே தலை சிறந்த அரசியல் தலைவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர்.பள்ளிக்கூட படிப்பில் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாமலே,தன்னுடைய வசீகரமான எழுத்து மற்றும் பேச்சாற்றலால் லட்சக்கணக்கான தொண்டர்களை திமுக கழகத்தின் பக்கம் ஈர்த்தவர்.தமிழக அரசியலில் தன்னிகரற்ற தலைவரான கலைஞர் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக திமுக கழகத்தை குடும்ப அரசியலாக மாற்றினார்.அறிஞர் அண்ணாவால் வார்த்தெடுக்கப்பட்ட இயக்கம் தன்னுடைய புத்திரர்களால் கட்சிக்கு அவப்பெயரை தேடித்தந்த வேளையில்,கலைஞர் அவர்கள் வெட்கித் தலை குனியவில்லை.திமுக என்ற மாபெரும் இயக்கத்திற்காக தியாகம் செய்த ஆயிரக்கணக்கான தொண்டர்களின் குடும்பங்கள் காணாமல் போனது.கட்சிக்காக எந்த ஒரு தியாகமும் செய்யாத மதுரையின் கூன்பாண்டி யனான மு.க.அழகிரி செய்யும் அராஜகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் கலைஞர்.மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களை கச்சிதமாக அரசியலிலும்,தன்னுடைய குடும்பத்திலும் செயல்படுத்துபவர் கலைஞர் அவர்கள்.தற்சமயம் மு.க.அழகிரி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை க்காக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மாபெரும் நாடக அரங்கேற்றம் இது என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். மதுரை மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தா.கிருஷ்ணன் அவர்கள் 2002 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபோது,கட்சியிலிருந்து மு.க.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பாராட்டக்கூடியதாக இருந்திருக்கும்.இனிவரும் காலங்களில் திமுக கழகம் அரசியலில் அகதிகளாக ஆகப்போகிறார்கள் என்பதை காலம் தமிழக மக்களுக்கு உணர்த்திக் காட்டுகிறது.


No comments:

Post a Comment