Wednesday, February 19, 2014

கோவை மாநகரில் எழுத்தாளர் பாமரன் அவர்களின் சொதப்பல் பக்கம் புத்தக வெளீயீட்டு விழா - 16.02.14 - ஞாயிறு

அந்திமழை என்ற மாத இதழில் பாமரன் அவர்கள் எழுதிய தொடர் கட்டுரையை சொதப்பல் பக்கம் என்ற தலைப்பில் அந்திமழை பதிப்பகத்தார் புத்தகமாக வெளியிட்டார்கள். நடிகர் சத்யராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்வு நடைபெற்ற இடம்:பாரதிய வித்யா பவன் 

அண்ணன் சத்யராஜ் அவர்கள் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகிறார் என்று ஒரு வாரத்திற்கு முன்பு தெரிய வந்தது. இதற்கு முன்னாள் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளேன். முதல் தடவை 2000 ம் வருசத்தில், மதுரையில் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துப் பேசியது. இரண்டாவது முறை சென்னையில் 2010 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் திரைப்ப்பட  இயக்குநர் -களுக்கான விழாவில் சந்தித்து பேசியது. இரண்டு முறையும் அண்ணன் சத்யராஜுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏனோ நினைக்கவில்லை. சமீப 3 வருட காலமாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பதால், இன்றைய தினம் சத்யராஜ் அவர்களுடன் புகைப்படம் எடுக்க முடிந்தது. ஒரு புகைப்படம் எடுப்பவரிடம்தான் கேமராவை கொடுத்து எடுக்கச் சொன்னேன். சுமாராகத் தான் எடுத்தார். அண்ணன் சத்யராஜ் என்னிடம் கேட்டார். என்ன செந்தில்குமாருஜி போட்டோ எடுக்கும்போது நான் சிரிக்கிறேன். நீங்க ஏன் சிரிக்க மாட்டேங்குறீங்க.. அண்ணா நான் சிரிக்கிறதுக்குள்ள போட்டோ எடுத்துட்டாரு.ரொம்ப சந்தோசம் என்றவரிடம், நான் அண்ணன் சத்யராஜ் பற்றி, அவருடைய படங்களை சிறுவயது முதல் நான் ரசித்தது, என் இதயத்தில் அவரை எப்படி உருவகப்படுத்தி வைத்திருந்தேன்  என்பது பற்றி 25 பக்க கட்டுரையை, இது என்னுடைய இதயப் பூர்வமான அன்பளிப்பு என்று சொல்லிக் கொடுத்தேன். ஆச்சரியமாகப் பார்த்தார். எல்லாரும் பரிசுப் பொருளா புக் கொடுப்பாங்க, இல்ல ஏதாவது கொடுப்பாங்க. ஆனா புதுமையா என்னைப் பத்தி எழுதுனத கொடுக்கிறது இதுதான் முதல்தடவை தம்பி. படிச்சிப் பாத்துட்டு எப்படி என்னோட மனசுக்குத் தோணுதோ, நான் உங்களோட பேசுறேன் என்று சொன்னார். சரியாக மூன்று கழித்து அலைபேசியில் அழைத்துப் பாராட்டினர். இதுவரைக்கும் யாரும் என்னைப் பத்தி சொல்லாதத சொல்லிருக்கீங்க தம்பி. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது.
எப்ப சென்னைக்கு வந்தாலும், என்னோட வீட்டுக்கு நீங்க வரலாம். மேலும் சினிமா பத்தி உங்ககூட நிறைய பேசலாம் என்று சொன்னபோது, ஒரு உண்மையான திரைக் கலையை நேசிக்கும் மனிதர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார். எனது ஆருயிர் நண்பராகவும் ஆகிவிட்டார்...
 நடிகர் சத்யராஜ் அவர்கள் சொதப்பல் பக்கம் புத்தகம் குறித்தும், எழுத்தாளர் பாமரனனுடனான தனது நட்பைக் குறித்தும் பேசினார்.

          கோவை அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் தாவரவியல் படிப்பில் நான் சேர்ந்தபோது, இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் ஆங்கிலத் துறையில் சேர்ந்தார். இருவருமே படிப்பை பாதியில் விட்டு சென்னைக்கு சென்று சினிமாவில் சேர்ந்தோம். திரும்பிப் பார்க்கிறேன், காலம் உருண்டோடிவிட்டது. இப்போது அண்ணன் மணிவண்ணன் அவர்களும் உயிருடன் இல்லை. நானும் அண்ணன் மணிவண்ணன் அவர்களும் பெரியாருடைய கொள்கையின் -பால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டோம். ஒத்த சிந்தனையுடைய நானும் பாமரன் அவர்களும் நண்பர்கள் ஆனோம்.

         ஆங்கிலமே தெரியாமல் பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நமக்கு ஆளுமைத்திறன் தேவையே தவிர, மொழி ஒரு தடையல்ல என்பது பிற மாநிலங்களுக்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது என்று மேலும் பல விசயங்களுடன் நகைச்சுவை உணர்வுகளோடு பேசி சிறப்புரையை நிறைவு செய்தார்.


எழுத்தாளர் பாமரன் அவர்கள் இறுதியாகப் பேசி நிறைவு செய்தார்...

No comments:

Post a Comment