Thursday, March 20, 2014

சூலூர் படகுத்துறை - 13.03.14








2002 ம் ஆண்டு கோவை மாநகரக்கு வந்து பூ.சா.கோ. தொழில் நுட்பக் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த பொழுது, ஒரு நண்பன் விடுமுறை நாளன்று இந்த சூலூரிலுள்ள எழில்மிகு படகுத்துறைக்கு அழைத்துச் சென்றான். குளத்தை பார்த்தவுடனே மனம் இலயித்துப் போய்விட்டது. குளத்தை சுற்றியுள்ள பாதைகளில் நடந்து வந்து பார்க்கும்போது, சுற்றியுள்ள மரங்களின் அழகு இதயத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். குளத்திற்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள், நம்மூர் பறவைகள், சிறு பறவைகள் போன்றவற்றை பார்க்கும்போது மனதை கொள்ளைகொள்ளும். எனக்கு பல நேரங்களில் மனம் சோர்வடையும்போது இந்த படகுத்துறைக்கு வந்துவிடுவேன். மனம் அப்படியே லேசாகிவிடும். இந்த வலைப்பூவின் மூலம் குளத்தை புகைப்படம் எடுத்து பிரசுரப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ, அவ்வளவு மகிழ்ச்சி குளத்திற்கு செல்லும்போதும் உள்ளது.









குளத்தில் வாழும் பறவைக் கூட்டங்கள் 






சூலூர் நகருக்கே அழகு சேர்க்கும் குளம். சூலூர் நகாராட்சி நிர்வாகம் அற்புதமாக பராமரித்து வருகிறது. இந்தக் குளத்தின் சிறப்பம்சமே சுற்றிலும் நிலவும் உயிர்ச்சூழல்...








குளத்திற்கு அருகேயுள்ள கோயிலின் பூசாரி சிதம்பரம் அவர்கள். நான்கு வருடத்திற்கு முன்னாள் பார்த்து பேசியது. இப்போது பார்த்தபோது அவர் கேட்டார் - தம்பி என்ன பாத்து ரொம்ப நாலு ஆனா மாதிரி தெரியுது..இவ்வளவு நாலு எங்க போயிரிந்தீக என்று அன்போடு கேட்டார். வயதாகி விட்டதால் மனிதர் தளர்ந்து விட்டார். அன்போடு இரண்டொரு வார்த்தைகள் பேசி, கொஞ்சம் பொருளுதவி செய்துவிட்டு கிளம்பினேன்.







குளத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் பெண்கள் விதைகளை எடுத்தபோது...


குளத்திற்கு ஒட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் அமர்ந்து பழ வியாபாரம் செய்யும் மனிதர்...


குளக்கரையை ஒட்டி செல்லும் பாதை...



























No comments:

Post a Comment