Sunday, March 16, 2014

காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் அவர்களை சந்தித்த வேளையில் - 16.03.14 - ஞாயிறு


 2014 ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியில் ம.தி.மு.க, தி.மு.தி.க, பாமகா போன்ற கட்சிகள் கூட்டணியில் இணைந்து, மெகா கூட்டணியாக உருவாவதற்கு மூலகாரணமாக இருந்த காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் அவர்கள் கோவை மாநகருக்கு வந்திருந்தார்.ஆர்.எஸ்.புரத்திலுள்ள அன்னபூர்ணா ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். நானும், தமிழகத்தின் பசுமைப் போராளி ஆருயிர் நண்பர் யோகநாதன் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றோம். அவருடைய காந்திய மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாக மாற்ற உள்ளார். இனி வரும் காலங்களில் காந்திய மக்கள் இயக்கம் வெற்றி பெறுவதற்கு நாங்கள் இருவரும் வாழ்த்துக்களை தெரிவுத்துக் கொண்டோம்.
தமிழகத்திலிருந்து மதுவை ஒழிப்பதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழக மக்களும், சக்தி வாய்ந்த இளைஞர்களும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழருவி மணியன் அவர்கள் பேசிய வேளையில்... 



காந்திய மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்களிடம் விவாதம் செய்தார். அரசியல் இயக்கமாக மாற உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து உரையாடினார்...

No comments:

Post a Comment