Sunday, March 23, 2014

காலத்தின் திரைச்சீலை டிராட்ஸ்கி மருது - நூல் அறிமுக விழா - 23.03.13

நாள்: 23.03.14 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி 

இடம்: பூ.சா.கோ.பொறியியல் கல்லூரி 'D' அரங்கம் - கோவை 




விஜயா பதிப்பக நிறுவனர் வேலாயுதம் அவர்கள் பேசிய வேளையில்...


நூலின் பிரதியை வேலாயுதம் அவர்கள் டிராட்ஸ்கி மருது அவர்களிடம் வழங்கிய வேளையில்...


கவிஞர் புவியரசு அவர்கள் பேசிய வேளையில்... 



சினி ஆர்ட்ஸ் ஓவியர் ஜீவானந்தம் அவர்கள் பேசிய வேளையில்...


சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடான் அவர்கள் பேசிய வேளையில்...


கவிஞர் வெண்ணிலா அவர்கள் பேசிய வேளையில்... 


ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்கள் பேசிய வேளையில்... 



இந்தியாவின் ஓவிய ஜாம்பவான்கள் ஜீவா, ட்ராட்ஸ்கி மருது அவர்களுடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்ட வேளையில்...


ஓவியர் ட்ராட்ஸ்கி மருது அவர்களுடன்... 


நான் ட்ராட்ஸ்கி மருது அவர்களின் தீவிர ரசிகன். ட்ராட்ஸ்கி மருது அவர்கள் இந்தியாவின் தலை சிறந்த ஓவியர்களில் ஒருவர். 1989 ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து, விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ பத்திரைகளில் 15 வருடங்களுக்கும் மேல் ஓவியங்கள் வரைந்து உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளார். இன்றைக்கும் அந்த ஓவியங்கள் உயிர்ப்புடன் விடுதலைப் புலிகளின் தியாக சரித்திரத்தை படம் பிடித்து காட்டுகிறது. தற்போது ஆனந்த விகடனில் தங்கத் தமிழ் என்ற தொடரில் அறிவுமதி அவர்களுடன் இணைந்து இவர் வரையும் ஓவியங்கள் வாசகர்களின் ஏகோபித்த ஆதவரை பெற்றுள்ளது. சங்க இலக்கியப் பாடல்களுக்கு எழிலுரை எழுதுகிறார்.

கடந்த 30 வருடங்களாக இவருடைய படைப்புகள் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. எனது ஆருயிர் நண்பர் கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் ட்ராட்ஸ்கி மருது அவர்களைப் பற்றி மிகச் சிறந்த முறையில் தொகுப்பு நூலை படைத்துள்ளார். இந்த நூலில் ட்ராட்ஸ்கி மருது அவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அற்புதமாக கலையாக்கம் செய்துள்ளார். கடந்த 6 வருடங்களாக கவிஞர்.வெண்ணிலா அவர்கள் என்னுடைய வாசிப்புக்கும், படைப்புகளுக்கும் உறுதுணையாக இருப்பதால், என்னாலும் இனி வரும் காலங்களில் எழுத்துலகில் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடைய படைப்புகளை இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன். இணைய வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை தினம் தினம் மின்னஞ்சலில் பதிவு செய்கிறார்கள். மிகுந்த ஊக்கத்தை ஏற்படுத்தும் வாசகர்களின் ஆதரவால் சிறந்த படைப்புகளை உருவாக்குவதற்கு நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இணையத்தில் நான் பிரசுரம் செய்யும் படைப்புகள் எதிர் காலத்தில், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியாதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கவிஞர் வெண்ணிலா அவர்களுடன்... 




No comments:

Post a Comment