Saturday, March 1, 2014

தமிழ்நாடு தேசிய பசுமைப் படையின் கூடலூர் பள்ளி மாவட்ட ஆசிரியர்களுக்கான சுற்றுச்சூழல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்

முகாம் நடைபெற்ற இடம்:கூடலூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி 

நாள்: 28.02.14 - வெள்ளிக்கிழமை  

கூடலூரிலுள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூடலூர் மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் 80 க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு தேசியப் பசுமைப் படையின் சுற்றுச்சூழல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்கள். கோவையில் செயல்படும் வெற்றிப்பாதை மாத இதழின் சார்பில் நான் கலந்து கொண்டேன். கோவையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் 2008 ம் ஆண்டு துணை ஜனாதிபதி விருது பெற்ற நண்பர் கோவை யோகநாதன் அவர்களுடன் இணைந்து நான் கோவையில் சுற்றுச்சூழலுக்காக ஆற்றும் பணி குறித்து உரையாற்றினேன். மேலும் வெற்றிப்பாதை மாத இதழ் சுற்றுச்சூழலுக்காக செய்யும் பங்களிப்பு குறித்தும், இயற்கையை பாதுகாப்பது குறித்தும் ஆசிரிய பெருமக்களிடம் 30 நிமிடம் உரையாற்றினேன்.



பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கூடலூர் பள்ளி மாவட்ட பேராசியர்கள் ...




தமிழ்நாடு தேசிய பசுமைப் படையின் தமிழ்நாடு மாவட்ட பள்ளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி L.துரை அவர்கள் ஆசிரியர்களிடம் சுற்றுச்சூழல் குறித்து உரையாற்றிய வேளையில்...



கூடலூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கூடலூர் மாவட்ட பள்ளிகளின் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அவர்கள்(இடது)

No comments:

Post a Comment