Thursday, March 27, 2014

கணிப்பொறித்துறையின் இணைப்பேராசிரியர் டாக்டர்.அருணேஷ் அவர்கள்


இந்தப் புகைப்படத்தை அவருடைய முகநூலில் இருந்து எடுத்து பிரசுரித்துள்ளேன். சமீபத்தில் கணிப்பொறித்துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் அருணேஷ் அவர்களுக்கு இந்த வலைப்பூவின் மூலம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறேன். இதற்கு முன்பே அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டேன். சில்வர் ஜுபிலி விழா நடைபெற இருப்பதால் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் 
கணிப்பொறித்துறைக்கே ஒரு சிறப்பம்சமாகும்...

இந்த எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரியின் வலைப்பூ உருவாக்கத்தின் மூலகர்த்தாவே பேரா.அருணேஷ் அவர்கள்தான். நான் ஒரு சிருஷ்டிகர்த்தா மட்டும்தான். என்னை முழுவதும் இயக்குபவராக பேரா.அருணேஷ் அவர்கள்தான் செயல்படுகிறார். பேராசிரியருடைய சிறப்பான வழிகாட்டுதலின் பேரில்தான் என்னுடைய வலைப்பூவை ஒவ்வொரு நாளும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்... என்னுடைய இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியருக்கு இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன்...

No comments:

Post a Comment