Wednesday, February 12, 2014

எஸ்.பி.ஏ.மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வெற்றிப்பாதையின் சார்பில் நடைபெற்ற தன்னம்பிக்கை பயிலரங்கு - T.N.பாளையம் - சத்தியமங்கலம் - 12.02.14

நானும் சூரியகாந்த் அவர்களும் பள்ளியின் நுழைவுவாயிலில்...




பள்ளியின் செயலாளர் அவர்கள் வெற்றிப்பாதை பயிலரங்கின் நோக்கம் குறித்தும், இதழைப் பற்றிய சிறப்புகளையும் மாணவர்களுக்கு கூறினார்.


நான் இந்த நிகழ்ச்சியின் வரவேற்புரை ஆற்றினேன். இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற வந்த தன்னம்பிக்கை பேச்சாளர் கோவையைச் சேர்ந்த சூரியகாந்த் அவர்களைப் பற்றி மாணவர்களுக்கு அறிமுகம் செய்தேன்.வெற்றிப்பாதை மாத இதழைக் குறித்து சில விசயங்களை பேசினேன். தன்னம்பிக்கை பயிலரங்கம் மாணவர்களுக்கு எதற்காக நடத்தப்படுகிறது, பயிலரங்கத்தின் குறிக்கோள் என்ன? என்பது குறித்து 15 நிமிட உரை ஆற்றினேன். மாணவர்களின் எதிர்கால லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இந்த தன்னம்பிக்கை பயிலரங்கம் மாணவர்களாகிய உங்களுக்கு தெளிவுபடுத்தும் என்ற மையக்கருத்தைக் கூறினேன்.



மாணவர்கள் இறைவணக்கம் செய்த வேளையில்...



தன்னம்பிக்கை பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 9,10,11,12 ம் வகுப்புமாணவர்கள்...



சிறப்பு பேச்சாளர் சூரியகாந்த் அவர்கள் மாணவர்களுக்கு இரண்டு மணி நேரம் பயிற்சி வகுப்பை நடத்தினார்.தன்னுடைய அற்புதமான பேச்சாற்றலால் மாணவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.தன்னுடைய நகைச்சுவையான சொல்லாற்றலின் மூலம் மாணவர்களை தன் வசப்படுத்தியது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.கீழே உள்ள புகைப்படத்தில் - ஒரு மாணவியின் சிறந்த ஞாபகசக்தியின் திறமைக்காக பள்ளியின் செயலாளர் 300 ரூபாய் பரிசை வழங்கினார்.புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள்,மனிதகுலத்திற்கு
மகத்தான சேவை ஆற்றியவர்களின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோள் காட்டி, ஒரு வித்தியாசமான அணுகுமுறையில் மாணவர்களின் சிந்தனையில் பிரமிக்க வைக்கும் தாக்கத்தை சூரியகாந்த் அவர்கள் ஏற்படுத்தினார்.



மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேளையில்...


பள்ளியின் முதல்வர் Dr.முருகானந்தன் அவர்களுடன்...



No comments:

Post a Comment