Wednesday, April 30, 2014

வெற்றிப்பாதை மாத இதழின் தன்னம்பிக்கை பயிலரங்க நிகழ்வு - குன்னூர் - 02.02.14


(வலமிருந்து) - நான், எழுத்தாளர் கலைமாமணி-அரிமதி இளம்பரிதி, வெற்றிப்பாதை மாத இதழின் ஆசிரியர் கி.வேணுகோபால் மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதி நண்பர்கள்...

கலைமாமணி அரிமதி இளம்பரிதி அவர்களுக்கு புதுச்சேரி சொந்த ஊர். புதுச்சேரியிலுள்ள புதுவை பல்கலைக்கழகத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர். தந்தையார் எழுத்தாளராக இருந்து, புதுவை மாநிலத்தின் கலைமாமணி விருது பெற்றவர். அதேபோல் அவருடைய புதல்வர் அரிமதி இளம்பரிதி அவர்களும் குழந்தை இலக்கியம், இளைஞர் மேம்பாட்டு நூல்கள் என்று 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய எழுத்துலக பணிக்காக புதுவை மாநில அரசு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பல விருதுகளை பெற்றுள்ளார். கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாரயணன் அவர்களுக்கு நெருங்கிய நண்பர். இந்த நிகழ்விற்கு வந்தபொழுது எனக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய 'மானுடம் வெல்லும்' என்ற புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார். இந்த வெற்றிப்பாதை தன்னம்பிக்கை நிகழ்வில் சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினார். கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு உற்ற நண்பராக உள்ளார். சமூக விசயங்கள் குறித்து கடிதம் மூலமும், அலைபேசி மூலமும் விவாதம் செய்து, பகிர்ந்து கொவோம். இளம்பரிதி அவர்கள் இணையதளம் உபயோகப்படுத்துவதில்லை என்பதால், அவருக்கு கடிதம் எழுதும்போது உணர்வுப்பூர்வமாக விசயங்கள் மனதில் தோன்றும். ஏனெனில் இப்போது இணைய உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பிறகு, கடிதம் எழுதும் பழக்கமே அதிகம் கிடையாது. இது ஒரு அபாயகரமான சூழ்நிலைதான். எனினும் இணையம் காலத்தால் தவிர்க்க முடியாத ஒரு ஊடகம்...


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெற்றிப்பாதை மாத இதழின் குன்னூர் வாசகர்கள்...


No comments:

Post a Comment