Saturday, April 5, 2014

சில்வர் ஜுபிலி விழாவிற்கு முன்தினம் கல்லூரிக்கு சென்றபோது - 03.04.14

பேராசிரியர் அருணேஷ் அவர்களுடன்...

சரியாக எனது பேராசிரியர் அருணேஷ் அவர்களை 11 வருடங்கள் கழித்து, கல்லூரியில் சந்திக்கிறேன். கடந்த 3 வருடங்களாக அலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்வோம். ஆனால் நேரில் சந்திப்பது இப்பொழுதுதான். சில்வர் ஜுபிலி விழா மலரில், தகவல் தொழில் நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை முதல் பக்கத்திலேயே பிரசுரம் செய்து, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன், என்ன சார் என்னோட சீனியர் மாணவர்கள்ல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்ல வேலை செய்றாங்கா. அப்படி இருக்க எனக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி சாருனு சொன்னேன். நம்ம கம்பியூட்டரு துறையில படிச்ச மாணவர்கள்ல, கோவையில மேடைப்பேச்சாளரா இருக்கே. சமூகப் பணியிலயும் ஒரு அமைப்ப ஆரம்பிச்சி 200 மாணவர்கள வச்சு பண்ணிக்கிட்டு இருக்கே. கோவை மாநகருல பத்திரிகையில வேலை செய்யுற. எழுத்தாளரா இருக்க, இணைய எழுத்தாளரா சிறந்த படைப்புகளை செஞ்சிகிட்டே இருக்கே. கடந்த 7 வருடங்களா உதவிப் பேராசிரியராவும் கோவையில பணிபுரியுரே. இவ்வளவு செய்ற உனக்கு, இந்த விழா மலருல உன்னோட கட்டுரையை போடலனா நல்லா இருக்காது. எனக்கு கட்டுரையை போட்டதால ரொம்ப சந்தோசமா இருக்குனு அருணேஷ் சார் சொன்னப்ப, எனக்கு ரொம்ப மகிழ்ச்சிய இருந்துச்சு. ஏன்னா, நான் படிக்கும்போது துறையிலயும், கல்லூரியிலயும் அவ்வளவு குறும்பு செய்வேன். என்ன எப்பவும் அருணேஷ் சார் கண்காணிச்சிக்கிட்டே இருப்பாரு. என்னப்பா செந்திலு, இப்ப ஒரு மாசமா ஏதும் சேட்டை செய்யல. என்னப்பா ஆச்சு, படிப்புல தீவிரமா இறங்கிட்டா மாதிரி தெரியுது என்று நகைச்சுவையாக பேசுவார். நான் தட்டு தடுமாறி இருக்குற சமயத்துல தனியா கூப்புட்டு பேசி, தக்க ஆலோசனைகள் சொல்லுவாரு. சில கஷ்டமான நேரங்கள்ல பொருளாதார உதவிகள் செய்வாரு. கல்லூரிக்கு வந்து இளங்கலை மாணவர்களுக்கு செமினார் எடுக்கச்சொன்னாரு. எனக்கு சரியா நேரம் கிடைக்காம போகமுடியல. அடுத்த பருவத்துல கருத்தரங்கும், தன்னம்பிக்கை பயிலரங்கும் மாணவர்களுக்கு எடுக்குறேன்னு சொன்னேன். என்னாலேயே நம்ப முடியல, நாம படிச்ச காலேஜ்ல இவ்வளவும் என்னால செய்ய முடியுமான்னு. காலமும் ,நேரமும் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காதுன்னு மட்டும் புரிஞ்சிகிட்டேன். இந்த சில்வர் ஜுபிலி விழாவுல அருணேஷ் சாரு, எனக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்ததுக்கு எப்படி கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியல. ஆனா நான் ரொம்ப நாளாக கல்லூரிக்கு போகமா இருந்தது நினைச்சு பாக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...


பேராசிரியர் அருணேஷ் அவர்களுடன் என்னுடன் இளங்கலை கணிப்பொறி வகுப்பில் படித்த சீனிவாசராகவன். இவர் இதே கல்லூரியில் கணிப்பொறித் துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்...

No comments:

Post a Comment