Sunday, April 27, 2014

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு - டாப்ஸ்லிப் மலைப்பகுதி யானைப் பாகனின் வாழ்வியல் அனுபவங்கள் - 27.04.14 - ஞாயிறு


OSAI 
                          Voice for Nature
கோவையிலுள்ள ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் காந்திபுரம் அருகில் உள்ள தமிழ்நாடு உணவக அரங்கில், டாப்ஸ்லிப் மலைப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற யானைப் பாகனின் வாழ்வியல் அனுபவங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் ஆருயிர் நண்பர் காளிதாஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இறுதிவரை இருந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
ஓசை காளிதாஸ் அவர்கள் 1988 ம் ஆண்டிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம், சுற்றுச்சூழலுக்கு ஆற்றிய பணி மகத்தானது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள், பணிகள் எண்ணிலடங்காது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள தமிழக அரசின் யானைகள் பாதுகாப்பின் உறுப்பினாராக செயல்படுகிறார். மத்திய அரசின் விருதுகளை வாங்க வேண்டும் என்ற இலக்கை மனதில் வைத்து செயல்படுபவர் கிடையாது. நான் கோவைக்கு வந்த 2002 ம் ஆண்டிலிருந்து இவருடைய செயல்பாடுகளை பத்திரிகையில் படித்து வருகிறேன். இவருடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது கடந்த ஐந்து வருடங்களாகத்தான். இவர் தனக்கென தன்னுடைய பணிகளை அடுத்த தலைமுறைகளும் செய்ய வேண்டும் என்பதற்காக நிறைய சீடர்களை உருவாக்கி இருக்கிறார். அதுதான் இவருடைய மகத்தான வெற்றியே. நான் உங்களுடன் இணைத்து தன்னலமில்லாமல் சுற்றுச்சூழலுக்காக மகத்தான பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டபோது, தாரளாமாக செய்யலாம் என்ற உறுதிமொழியை அளித்தார். இதற்கு முன்பு எந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரும் இப்படி ஒரு உறுதிமொழியை கொடுத்ததில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை...

E-mail: Pasumaiosai@yahoo.com

ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாஸ் அவர்களுடன் ...




யானைப்பாகன் பழனிச்சாமி அவர்கள் டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் யானையுடன் செல்லும் அனுபவக் காட்சியின் டாக்குமெண்டரி வீடியோ ஒரு மணி நேரம் கட்டப்பட்டது...


யானைப்பாகன் பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை கூட்ட அமர்விற்கு வந்திருந்தவர்களிடம் பகிர்ந்து கொண்டார்...




ஓசை காளிதாஸ் அவர்கள் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்...




வீடியோ காணொளியிலிருந்து சில காட்சிகள்...



சென்னையச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பேசிய வேளையில்... 


யானைப்பாகன் பழனிச்சாமிக்கு நினைவுப் பரிசு வழங்கியபோது...

No comments:

Post a Comment