Saturday, April 12, 2014

என்னுடன் இளங்கலை வகுப்பில் படித்த விஜயாபுரி வெங்கடேஷ்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி இல்லத்தில், வெங்கடேஷ் தனது மாமனார்  மற்றும் துணைவியாருடன்...


வைகோ அவர்களின் துணைவியார் ரேணுகாதேவி அவர்களுடன்...


என்னுடன் படித்த மாணவர்களில் வெங்கடேஷ் என் மீது மிகுந்த அன்பும், நேசமும் கொண்டவர். நான் இளங்கலை வகுப்பு படிக்கும்போது வேங்கடேஷினுடைய முழுமையான நட்பை கொஞ்சம் இழந்துவிட்டேன். வகுப்பிலேயே படிப்பிலும், விளையாட்டிலும், கல்லூரிகளுக்கு வெளியில் கலந்துகொள்ளும் போட்டிகளிலும், கணினி நிரல்களை செய்வதிலும் முதன்மையான மாணவராக இருந்தார். இவ்வளவு திறமைகளையும் இவரிடமிருந்து கற்றுக் கொள்ள நான் தவறிவிட்டேன். நான் சில நேரங்களில் தடுமாறி குழம்பிய மனநிலையில் உள்ள நாட்களிலெல்லாம், தானாக வந்து என்னிடம் மனம் விட்டு பேசி, பிரச்சனைகளை தீர்க்க உதவியவர். என்னை நண்பன் என்ற முறையில் அதிக உரிமை எடுத்து, இவருடைய ஊரைச் சேர்ந்த என்னுடன் படித்த ரமேஷ்குமாரும் சேர்ந்து, கிண்டல் செய்து கலாய்க்கும்போது மிகுதியான மகிழ்ச்சியை உணர்வேன். அவ்வளவு உரிமையோடு எதிர்பார்ப்பு இல்லாமல் பழகிய மாணவ நண்பர்கள். வேங்கடேஷினுடைய திருமண நிகழ்விற்கு செல்ல முடியாமல் போனது மனவேதனையை ஏற்படுத்தியது. அதிக நாட்கள் தொடர்பில்லாமல் இருந்ததால், வேங்கடேஷால் என்னை அழைக்க முடியவில்லை. 
இளங்கலை வகுப்பு முடித்தவுடன் திசைக்கு ஒருவராக பிரிந்ததில், யாருடன் தொடர்பில்லாமல் போயிற்று. இப்போது முகநூல், டுவிட்டர், வலைப்பூ என்ற சமூக வலைதளங்கள் வந்தபிறகு, நண்பர்களுடன் தொடர்பு கொள்வது எளிதாக போய்விட்டது. அதனால்தான் சமூக வலைதளத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறியில், நான் தீவிரமாக செயல்படுவது. 

பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் ஒருவர் தன்னைப் பற்றிய சுயபுராணங்களை அதிகமாக பிரசுரம் செய்வதும், தனக்கு அருகில் உள்ள சகமனிதர்களைப் பற்றி சிறப்பியல்புகளை அதிகம் சொல்லாதவர்களை பார்க்க முடிகிறது. நான் என்னைத் தவிர்த்து, என்னுடன் வாழ்ந்த, இப்போது அருகில் என்னுடன் தினமும் பழகும் மனிதர்களை அதிகமாக நேசிப்பதினாலேயே நல்ல படைப்புகளை உருவாக்க முடிகிறது. மற்றவர்களைப் பற்றிய சிறப்புகளை சொல்லும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது...

No comments:

Post a Comment