Wednesday, April 16, 2014

புதுப்பட்டி போத்திராஜ்


என்னுடன் இளங்கலை வகுப்பில் பயின்ற திருவேங்கடம் ஊருக்கு அருகில் உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த போத்திராஜ். அமெரிக்காவில் மென்பொருள்துறையில் பணிபுரிகிறார். என்னுடைய முகநூலில் வெகு நாட்களாக நண்பராக உள்ளார். ஆனால் எனக்கு இவரை அடையாளம் காண முடியவில்லை. அதற்கு காரணம் சினிமா நடிகரைப் போன்று தோற்றம் மாறிவிட்டதால்..! சரி யாரோ ஹீரோ மாதிரி இருக்காங்க.. நம்மள முகனூல்ல நண்பரா சேர்த்துக்கிட்டாங்க. ஏதாவது சினிமா வாய்ப்பு கிடைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லேன்னு நான் நினைச்சிகிட்டு இருந்தேன்.
எஸ்.ஆர்.என்.எம்.கல்லூரி வலைப்பூவை பார்த்துட்டு மாப்ளே போத்திராஜ் எனக்கு Message அனுப்புனாரு. மாப்ளே எப்படிறா இருக்க. ரொம்ப சந்தோசமா இருக்கு. நம்ம கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்துனதுக்கு. தொடர்ந்து எழுது மாப்ளேன்னு சொன்னப்ப, எனக்கு உன்னை யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்க முடியலே, ரொம்ப நன்றி அப்படின்னு நான் Message அனுப்புனேன். அதுக்கு பிறகுதான் தெரிஞ்சது புதுப்பட்டி போத்திராஜுன்னு. எனக்கு மாப்ளே அமெரிக்காவுல வேலை செய்றது தெரியும். ஆனா இப்படி சினிமா ஸ்டார் மாதிரி மாறுவாருன்னு நான் நினைக்கலே. ரொம்ப சந்தோசமா இருக்குது மாப்ளே. இந்த வலைப்பூவை உருவாக்கி, நான் கதை எழுத ஆரம்பிச்சதுக்கு அப்புறம், நம்மகூட படிச்ச பொண்ணுங்கள தவிர்த்து எல்லா பசங்களும் என்கூட பேசுனாங்க. ரொம்ப சந்தோசமா இருந்தது. 2002 வருசத்துக்கு அப்புறம் 12 வருசங்கழிச்சு எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியிலயும் எங்கூட அலைபேசியில மணிக்கணக்கா பழைய நினைவுகளை பகிர்ந்துதுகிட்ட எல்லா மாப்ளே -களுக்கும் என்னோட இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்... 

No comments:

Post a Comment