Tuesday, May 6, 2014

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமூக வலைதளமான டுவிட்டரில் இணைந்தார் - 05.05.14 - திங்கள்

ஒரே நாளில் ஒரு லட்சம் பாலோயர்கள்... 

twitter.com/SuperStarRajini

வலைப்பூ: Rajni-Superstar.blogspot.com

05.05.1951 - இன்றைய தினம் எனது தந்தையார் இராமகிருஷ்ணன் அவர்கள் பரந்துபட்ட நமது பாரததேசத்தில் ஜனனம் செய்த நாள்...



நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் திங்கள்கிழமை (05.05.14) தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததை அறிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பாலோயர்கள் குவிந்தனர். 

டுவிட்டரில் தன்னுடைய முதல் பதிவாக, "கடவுளுக்கு சல்யூட். அனைவருக்கும் வணக்கம். எனது அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணம் என்னை பரவசமூட்டுகிறது" என்று மகிழ்ச்சியோடு டுவிட் செய்தார். மேலும் 9 விநாடியே ஓடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், "நான் சமூக வலைதளத்தில் இருக்க வேண்டும் என்று என் ரசிகர்கள் விரும்பினர். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் டுவிட்டரில் இணைகிறேன்" என்று கூறியுள்ளார். 


ரஜினியுடன் டுவிட்டரில் இணையும் பாலோயர்கள் அனைவருக்கும் 'கோச்சடையான்' திரைப்பட போஸ்டர்கள் டுவிட்டர் மூலமே அனுப்பப்படுகிறது. ஏற்கனவே டுவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் 86 லட்சம் பாலோயர்களை கடந்து 90 லட்சங்களை நெருங்குகிறார். டுவிட்டரில் இணைந்த முதல் நாளிலேயே நடிகர் ரஜினிகாந்த் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பாலோயர்களை பெற்றுள்ளார். 

அவர் அமிதாப்பின் இலக்கை மிக விரைவில் எட்டுவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்...


No comments:

Post a Comment