Monday, May 19, 2014

அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் சாலையிலுள்ள பாரதி பூங்கா - 23.03.14

கோவை மாநகர அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திலிருந்து அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு செல்லும் சாலையில் உள்ளது மனதை மயக்கும் பாரதி பூங்கா. கோவை மாநகரில் 2010 ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது அற்புதமாக புதுப்பிக்கப்பட்டது.
நான் பெரும்பாலான சமயங்களில் இந்த பூங்கா உள்ள சாலையின் வழியாக செல்வது உண்டு. அப்படி ஒரு நாள் அதிகாலை வேளையில் சென்றபோது, பூங்காவிற்குள் சென்று புகைப்படம் எடுத்தேன். கோவை மாநகரில் வசிப்பவர்களுக்கு பாரதி பூங்கா பரிச்சியமாக இருக்கும். ஆனால் இந்த வலைப்பூவில் பதிவு செய்வதன் மூலம் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு கோவை மாநகரில் இப்படி ஒரு அழகான பூங்கா இருப்பது தெரியவரும். இந்தியாவில் உள்ள பெரிய மாநகரங்களில் கண்ணைக் கவரும், மனதை மயக்கும் இன்பகரமான ஏராளமான பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கெல்லாம் வசிப்பவர்கள் பூங்காகளை அற்புதமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பிரசுரம் செய்வதன் மூலம் இயற்கை வளங்களை நாம் அனைவரும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற உந்துதலை உருவாக்கும். மாநகர வாழ்க்கையின் பல்வேறு விதமான வாகன இரைச்சல்கள், பரபரப்பான வாழ்க்கை முறை, ஓய்வில்லாத உழைப்பு இவற்றுக்கு மத்தியில், ரம்மியமான இந்த பூங்காவிற்குள் வந்தால் அத்தனை பரபரப்புகளும் காணாமல் போய்விடும். இலட்சம் பணம் நம்மிடம் இருந்தாலும் இந்த மாதிரியான பூங்காவிற்குள் இருக்கும்பொழுது இருக்கும் இயற்கையின் சவுந்திரயத்தை விலைக்கு வாங்க முடியாது. அதேபோல் நம்மிடம் கோடி கோடியாக பணம் கொட்டிக் கிடந்தாலும் அற்புதமான அழகோடு உள்ள இது மாதிரியான பூங்காக்களை ஒரே நாளில் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க குறைந்தது 10, 15 வருடங்களாவது ஆகும். ஆனால் நம் மனித இனமோ, கேவலம் வெறும் பணத்திற்காகவும், அற்ப ஆசைகளுக்காகவும் ஒரே நொடியில் மரத்தை வெட்டுகிறார்களே..!! எப்படி இந்த விஷயத்தை ஜீரணிப்பது..!! இறைவா..!! நீதான் இயற்கையை காப்பதற்கு அருள்புரிய வேண்டும்..!!

நாம் அனைவரும் மரம் வளர்ப்போம்..!! மழை வளம் பெறுவோம்..!!












அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு செல்லும் சாலை...


No comments:

Post a Comment