Tuesday, May 20, 2014

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை - 25.04.14

இந்த வருடம் சுவாமி.விவேகானந்தரின் 151 வது பிறந்தநாள் (12.01.14) அன்று கன்னியாகுமரிக்கு செல்ல இயலவில்லை. மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 2014 பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய வாக்களிப்பை செய்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்தேன். 24.04.14 அன்று வாக்களித்து விட்ட பிறகு மிகுந்த மனநிறைவை கொடுத்தது. மறுநாள் 25.04.14 அன்று மிகுந்த மன மகிழ்ச்சியோடு, என்னுடைய குருநாதரின் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கும் முக்கடலும் சங்கமிக்கும் பாரத தேசத்தின் தென் முனையான கன்னியாகுமரி யிலுள்ள விவேகானந்தர் பாறைக்குச் சென்றேன். 2002 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சுவாமி.விவேகானந்தரின் பிறந்த நாள் அன்று சென்று  விடுவது வழக்கம். அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கவில்லை என்று நினைக்கும்போது மனம் மிகுந்த சஞ்சலம் அடைகிறது. ஏனெனில் புகைப்படம் என்பது நூற்றாண்டுகளையும் கடந்து காலத்தைப் பிரதிபலிக்கக் கூடியது. ஆகையாலே 2008 ம் வருடத்திலிருந்து புகைப்படக் கலையின் மீது எனக்கு ஆர்வம் வந்தது..!! 

மாசில் வீணையும் மாலை மதியமும் 
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் 
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே 
ஈசன் எந்தன் இணையடி நிழலே..!!


சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் 
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்..!!
--சிவபுராணம் அமெரிக்கா நாடு வியட்நாமின் மீது 1961 ம் ஆண்டுகளில் போர்தொடுத்த போது அதி பயங்கரமான குண்டுகளை பயன்படுத்தியது. குண்டடி பட்ட பலத்த காயங்களுடன், நிர்வாணமாக கதறி அழுதுகொண்டு ஓடிவரும் சிறுமியின் புகைப்படம் என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்ன பிற மனித உரிமை மீறல்களுடன் உள்ள புகைப்படங்கள் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கியது. அந்த சிறுமியின் புகைப்படம் உலக நாடுகளில் ஏற்படுத்திய கொந்தளிப்பை போன்று எந்த புகைப்படமும் ஏற்படுத்தவில்லை..!!
அதே நாசகார அமெரிக்கா நாட்டில்தான் செப்டம்பர் 11, 1893 ம் ஆண்டு   வியாழக்கிழமை நாளில் சகோதர, சகோதரிகளே என்று உரையாற்ற ஆரம்பித்து, உலக சர்வமத மாகாநாட்டில் சுவாமி.விவேகானந்தர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றி சகாப்தம் படைத்தார். 1892 ம் ஆண்டு டிசம்பர் 24,25,26 மூன்று நாட்கள், இந்த முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையில் தவமிருந்தார். இதில் டிசம்பர் 25 ந் தேதி கிருஸ்துமஸ் நாளாகும். ஏன்..? சுவாமிஜி அவர்கள் கிருஸ்துமஸ் நாளை தேர்ந்தெடுத்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பிதாமகர் இயேசுவை, அவர் போதித்த கொள்கைகளை ஆழமாக நேசித்தார். ஆனால் அவருடைய மதத்தை பின்பற்றும் பிரிட்டீஷ் காலனியாதிக்க நாடுகளை இந்திய தேசம் வெல்ல வேண்டும் என்பதற்காக, மேற்கு திசை நோக்கி அமர்ந்தவாறு, மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவம் செய்தார். இந்திய நாடு உலகையே வெல்ல வேண்டும் என்ற இமாலய இலட்சியத்துடன் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார். இப்படியாக இந்த பரந்த பாரத பூமியில் சர்வ வல்லமையும் சங்கமிக்கும் உன்னதமான முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரையை தவம் செய்ய தேர்ந்தெடுத்து, நூற்றாண்டுகளை யும் கடந்து புண்ணிய பூமியாக ஆவதற்கு மூலகாரணமாக திகழ்ந்தார் சுவாமிஜி அவர்கள். இன்றைய தினம் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் குமரி முனையிலுள்ள விவேகானந்தர் பாறை நினைவை தரிசிக்க வருகிறார்கள். இந்த விவேகானந்தர் நினைவு பாறையை உருவாக்க அடித்தளமிட்ட எனது மற்றுமொரு குருநாதர் ஏக்நாத்ஜி.ராணடே அவர்களும் போற்றுதலுக்கு உரியவர்..!!

இறைவா! உன் உண்மையான வடிவத்தைக் காண என்னைத் தகுதியுடைய வனாக்கு..!!  --சுவாமி விவேகானந்தர் 


காரிருள் கிழித்தே கதிரவன் உதித்தான்
இருளெனும் திரையும் நீங்கியதே
இரவியின் குலப்புகழ் ஓங்கியதே..!!

அதிகாலை மூன்று மணி விவேகானந்தர் பாறையின் தோற்றம்...
சிந்திக்கத் தீரம் செரிக்கும் மனத்தவிசில் 
வந்திக்க ஞானமகிழ் பெருக்கும் - பந்திக்கும் 
பேதமலம் தேய்க்கும் பெருமை விவேகானந்தன் 
பாதமலர் யாமுடைய பற்று..!!ஆலயம் எழுந்தது அற்புதம் நிகழ்ந்தது 
அறநெறி உயர்ந்ததுவே..!!
நீலவானைக் கொஞ்சியே 
நிமிர்ந்தது கோபுரம் 
நிலைத்தது கலைப்புகழே..!!


பொன்னி நாட்டு மன்னர் மன்னன் 
வாகை சூடினான்..!!
தமிழ் அன்னை வடிவச் சிலையமைத்து 
வாழ்த்துப் பாடினான்..!!சுவாமி விவேகானந்தர் பேசியவற்றையும் எழுதியவற்றையும் நான் ஆழ்ந்து படித்தேன். அதன் பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்கு வளர்ந்துவிட்டது. இளைஞர்களே!! அவரது நூல்களைப் படியுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்..!! 
--மகாத்மா காந்தி 


வாழ்க்கையின் எந்தத் துறை ஆனாலும் மனிதர்களை வழிநடத்துகின்ற உண்மையான தலைவர்களைக் காண்பது அரிது. அந்தத் தலைவர்களை வழிநடத்துகின்ற மாபெரும் தலைவர்கள் அரிதினும் அரிதாகவே தோன்று -வார்கள். மூழ்கிக் கொண்டிருக்கின்ற மனித குலத்தை உயர்த்துவதற்காக அத்தகைய மாபெரும் தலைவர்கள் அவ்வப்போது பூமியில் தோன்றுவார்கள். அத்தகைய மாபெரும் தலைவர்களில் ஒருவர் சுவாமி விவேகானந்தர்..!!
--டாக்டர்.இராஜேந்திர பிரசாத் நரனெனும் ஆதி முனியே நரேந்திர நாதனாகி
தரையினில் ஞானம் சொல்லத் திருவுடல் தரித்தானென்று
உரைபுகழ்ந்தேத்தி உன்னை வணங்கினன் உந்தன் குருவும்
ஒருவகை உணர்வுமில்லா யானுனை ஓதல் எளிதோ..?ஒரு விவேகானந்தர் ஒரு நாளில் தோன்றிவிடுவதில்லை. பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் நிலவிவரும் மேன்மைகளின் நிறைவாகவே தோன்றுகிறார்..!!
-- மகேந்திரநாத் தத்தர் (சுவாமிஜியின் சகோதரர்)நீ ஒருவனை நல்லவனாக்க விரும்பினால் அவனுக்கு உபதேசங்கள் செய்யாதே, அவனைச் சீர்திருத்த முயலாதே. அவனுடன் சென்று வாழ்..! உன்னிடம் நன்மை என்ற தெய்வீகத் தீப்பொறி இருக்குமானால் அது அவனைப் பற்றிக்கொண்டு நல்லனவாக்கும்..!!
--சுவாமி விவேகானந்தர் 


மேலே மேலே பறந்து செல்கின்ற பறவை உயரத்தில் ஓர் இடத்தை அடைந்ததும், அங்கு அமர்ந்து ஆழ்ந்த அமைதியுடன் தரையைப் பார்க்கிறது. அந்த இடத்தை நீ அடைந்துவிட்டாயா..? அந்த இடத்தை அடையாத யாருக்கும் பிறருக்கு உபதேசம் செய்வதற்கு அதிகாரம் கிடையாது..!!


ஓர் உயரிய இலட்சியத்தை மேற்கொள்வதும், அதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான காரியமாகும்..!!யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிகிறதோ, அவனையே மகாத்மா என்பேன். இல்லாவிட்டால் அவன் ஒரு துராத்மாவே..!!
--சுவாமி விவேகானந்தர் 


இறைவா, உன்னிலும் உனது கருணையிலும் நம்பிக்கை கொள்வது மனிதருக்கு எவ்வளவு கடினமாக உள்ளது..!!இங்கே ஒருபிடி சோறு கொடுக்க மாட்டாராம், சொர்க்கத்தில் நித்தியானந்தத்தைத் தருவாராம்.. இத்தகைய ஒரு கடவுளிடம் எனக்கு நம்பிக்கை இல்லை..!!
--சுவாமி விவேகானந்தர் கீழை நாடுகளுக்கு புத்தர் ஒரு செய்தியை அளித்ததுபோல்
மேலை நாடுகளுக்கு நான் அளிப்பதற்குச்
செய்தி ஒன்று உள்ளது..!!                                                       -- சுவாமி.விவேகானந்தர்உலகின் செல்வத்தில் முக்கால் பகுதி இந்தியாவிலிருந்தே வந்தது, இன்றும் வந்து கொண்டிருக்கிறது. இந்திய வர்த்தகம்தான் உலக வரலாற்றில் திருப்புமுனையாக, ஆதாரமாக இருந்துவந்திருக்கிறது..!! --சுவாமிஜி


எனக்கு முக்தி வேண்டாம், பக்தி வேண்டாம்; வசந்த காலம்போல் உலகிற்கு நன்மை செய்வதற்கான லட்சம் நரகங்களுக்கு வேண்டுமானாலும் நான் போவேன். இதுவே எனது மதம்..!!
--சுவாமி.விவேகானந்தர்சுவாமி.விவேகானந்தர் இந்தியாவின் கடந்த காலத்தில் காலூன்றி நின்றார். இந்தியாவின் புராதானப் பெருமையில் பெருமை கண்டார். அதேவேளையில் வாழ்க்கைப் பிரச்சினைகளை நவீனக் கண்ணோட்டத்துடன் அணுகினார். இந்தியாவின் கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் ஒரு பாலமாகத் திகழ்ந்தார் அவர்..!!
--ஜவஹர்லால் நேரு


நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலுவாய்ந்த பகுத்தறிவையும், பொதுநல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை..!!
--சுவாமி.விவேகானந்தர் 


விவேகானந்தர் யோசனை பண்ணாத பெரிய விசயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் கிடையாது. அவருடைய தைரியத்துக்கோ எல்லை கிடையாது. அவருடைய அறிவின் வேகத்துக்குத் தடையே கிடையாது..!!
--மகாகவி பாரதியார் 


ஸ்ரீராமகிருஷ்ணர் என்னைப்பற்றி பல விசயங்கள் கூறுவாரே, அவற்றை இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். உலகையே உலுக்கவல்ல எல்லையற்ற ஆற்றல் என்னிடம் இருப்பதை இப்போது நான் உண்மையில் உணர்கிறேன்..!!
--சுவாமி.விவேகானந்தர் இந்தியர்களே இந்திய வரலாற்றை எழுத வேண்டும். மறைந்து போன, மறைக்கப்பட்ட நமது பண்டைய பொக்கிஷங்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்..!!  -- சுவாமி.விவேகானந்தர் 


இந்துக்கள் தங்கள் பழங்காலத்தைப்பற்றி அறிகின்ற அளவிற்கு அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்கும். கடந்த காலத்தைப் பற்றி ஒவ்வொருவரின் கவனத்திற்கும் கொண்டு வருபவர் இந்த நாட்டிற்குச் சிறந்த நன்மை செய்பவர்..!! --சுவாமி விவேகானந்தர் !நல்லவற்றின்மீது உன் நினைவுகளை வைத்திரு. நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு..!!இயற்கையில் நாம் காணும் அழகிய பொருட்கள் 
எல்லாம் மிக நல்லவையே; என்றாலும் இறைவனைக் காணும் 
வழி அதுவல்ல..! பார்வையை உள்ளே திருப்புவது எப்படி 
என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்..!!பாரதமே விழித்தெழு!! உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றிகொள்..!!
-- சுவாமி விவேகானந்தர்!சுவாமி விவேகானந்தர் இந்த கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்கமிக்கும் உள்ள கடற்கரையில் உள்ள பாறையில் மூன்று நாட்கள் (1892, டிசம்பர் 24,25,26 ) தியானம் செய்துவிட்டு கரைக்குத் திரும்பினார். அப்போது அங்குள்ள மக்கள் சிலர் அவரிடம், "பாறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்ன அனுபவம் கிடைத்தது?" என்று கேட்டார்கள்..!!

அதற்கு சுவாமிஜி கூறினார்: 

அகத்திலும் புறத்திலும் நான் எதைத் தேடி 
இத்தனை காலம் அலைந்தேனோ 
அது இந்த இடத்தில் எனக்குக் கிடைத்தது..!!மரணத்திற்கு அப்பாலும் நம்மைத்
தொடர்ந்து வருகின்ற நண்பன்
நமது புண்ணியம் ஒன்றே..!!
மற்ற அனைத்தும் மரணத்துடன்
முடிந்துவிடும்..!!                                   --சுவாமி.விவேகானந்தர் 


எண்ணங்களுக்கு ஏற்ப நாம் உருவாகிறோம். ஆகவே என்ன நினைக்கிறாய் என்பதில் எச்சரிக்கையாய் இரு..!!  --சுவாமி.விவேகானந்தர்  

ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற ஆற்றல் பொதிந்திருக்கிறது. பராசக்தியிடம் பிரார்த்தனை செய். அந்த ஆற்றல் உன்னிடம் வெளிப்படும்..!!
--சுவாமி.விவேகானந்தர்!! 


சிரமதில் முண்டாசேந்தி சற்று மெய் இடமே சாய்த்து 
விரைமிகு முளரித்தாள் போல் விழியினை வலமே சாய்த்து 
கரமதில் கரமும் சேர்த்து காவியின் சொக்காய் போர்த்து 
அரசிளங்குமரனே போல் நின்றிடும் அடிகள் வாழ்க..!!


ஆங்கிலத்தில் உபநிடதம் அருளியவா போற்றி போற்றி 
தீங்குளதேல் உன்னகத்தில் தீங்கெங்கும் காண்பாய் என்று 
ஓங்குகுரல் எழுப்பியதோர் உத்தமனே போற்றி போற்றி 
வீங்குபுகழ் விவேகானந்த குருநாதா போற்றி போற்றி..!!

உனது சுதந்திரம் பிறருக்குத் துன்பம் விளைவிக்குமானால், நீ சுதந்திரமாக இல்லை. பிறருக்குத் துன்பம் செய்யாதே..!! --சுவாமி.விவேகானந்தர் !

No comments:

Post a Comment