Sunday, May 18, 2014

பாலிவுட் திரை உலகின் நட்சத்திர நாயகன் அமிதாப்பச்சன் - எனது தந்தையாரின் ஆதர்சன நாயகன்..!!


இந்தியத் திரை உலகிலும் பாலிவுட்டிலும் அமரகாவியமாக மார்கண்டேயனாக காலத்தால் அழியாத பல திரைப்படங்களில் நடித்து உலக அளவில் நட்ச்சத்திர நடிகராக அமிதாப்பச்சன் அவர்கள் திகழ்கிறார். நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய தந்தையார் அமிதாப்பச்சன் படங்களை அப்போது இருந்த வீடியோ கேசட்டில் பார்ப்பார். அதன்பிறகும் DVD கேசட்டுகளை எங்கெங்கோ அலைந்து புதிய படங்களை தேடிபிடித்து வாங்கி பார்த்து விடுவார். பார்த்துவிட்டு என்னிடம் திரைப்படம் குறித்து கதைகளை விமர்சனம் செய்வார். அமிதாப் நடித்த உலகப் புகழ்பெற்ற படமான sholay வை நானும் எனது தந்தையாரும் ஒன்றாக பத்து தடைவகளுக்கு மேல் பார்த்திருப்போம். அதன்பிறகு சஞ்சய்லீலா பான்சாலி இயக்கத்தில் உருவான ஹெலன் கில்லரின் வாழ்க்கை வரலாறான Black படத்தையும் பத்து தடவைகளுக்கு மேல் பார்த்திருப்போம். இப்படியாக அமிதாப்பச்சன் நடித்த அத்தனை படங்களின் DVD களும் என் வீட்டில் இருக்கும். அமிதாப்பின் நடித்த அனைத்து படங்களின் கதைகள் என் இதயத்தில் ஆழமாக பதிந்துபோனது. இன்றைக்கு என்னுடைய தந்தையார் காலமாகி விட்டார். அமிதாப்பச்சன் படங்கள் புதிதாக திரையரங்கில் வெளிவந்தால் முதல் ஆளாக போய் பார்த்துவிடுவேன். திரையில் அமிதாப்பச்சன் தோன்றும் முதல் காட்சி வரும்போது உணர்ச்சிகரமாக இருக்கும். என்னுடைய தந்தையார் அப்போது எனக்கு அருகில் உட்கார்ந்து இருப்பது போல நினைவுகள் தோன்றும். என்னுடன் அமிதாப்பின் நடிப்பு குறித்து பேசிக்கொண்டு இருப்பது போல ஒரு பிரமை ஏற்படும். அமிதாப்பச்சன் அவர்களின் பிரமிப்பு ஏற்படுத்தும் நடிப்புக்கு கோடிக்கணக்கான நன்றிகளை சொல்லியாக வேண்டும்..!!

Srbachchan/tumblr.com





No comments:

Post a Comment