Saturday, June 28, 2014

ஸ்ரீராமகிருஷ்ணரின் நினைவு நாளன்று..!!


காசிப்பூர் தோட்ட வீடு, ஆகஸ்ட் 16, 1886 ம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பிறகு எடுக்கப்பட்டது. காசிப்பூர் தோட்ட வீட்டிற்கு வெளியே மிக அருகில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் புறச் சுவர்களும் ஜன்னல்களும் பின்னணியில் தெரிகின்றன. கட்டிலில் ஸ்ரீராமகிருஷ்ணரின் திருமேனி படுக்க வைக்கப்பட்டுள்ளது. கொசு வலை கட்டுவதற்கான தூண்கள் பூச்சரங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. கட்டிலுக்கு அருகில் படுக்கையும், துணிகளும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஸ்ரீராமகிருஷ்ண ருக்குப் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். வெயிலில் உலர்த்துவதற் காக வெளியில் இடப்பட்டிருக்கலாம். சுமார் 50 பேர் இந்தப் புகைப்படத்தில் தெரிகின்றனர். அவர்களுள் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனது குருநாதரை உலகிற்கு அடையாளம் காட்டியதற்காக ஸ்ரீராமகிருஷ்ணரின் பொற்பாதங்களில் சரணடைகிறேன்..!!


ஸ்ரீராமகிருஷ்ணர் மிகவும் போதித்த சமய சமரசச் சின்னம் ஒன்று படத்தில் தெரிகிறது. இதில் திரிசூலம், ஓம், துளசி மாலை தாங்கிய கை என்று இந்து மதத்தின் பல்வேறு பிரிவினரின் சின்னங்களும், முஸ்லீம்களின் பிறையும், கிருஸ்துவர்களின் சிலுவையும் உள்ளன. இந்த சின்னத்தை பலராம் போஸ் என்ற பக்தர் தாங்கிப் பிடித்திருக்கிறார்..!! இந்தப் புகைப்படங்களை எடுத்தது பெங்கால் போட்டோகிராபர்ஸ்..!!


ஒரு விவேகானந்தர் ஒருநாளில் தோன்றிவிடுவதில்லை. பரம்பரை பரம்பரையாக குடும்பத்தில் நிலவிவரும் மேன்மைகளின் நிறைவாகவே தோன்றுகிறார்..!!

மகேந்திர நாத் தத்தர் (சுவாமிஜியின் சகோதரர்)..!!

No comments:

Post a Comment