Friday, June 27, 2014

தமிழ்த் துறை பேராசிரியர்.ராமச்சந்திரன் அவர்கள்

இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கும் வரைக்கும் தமிழ் ஒரு பாடமாக இருந்தது. தமிழ்த் துறை பேராசிரியர்.தனபால் அவர்கள் கல்லூரியின் மிகச்சிறந்த பேச்சாளர். அனல்தெறிக்கப் பேசுவார். அதே சமயத்தில் நகைச்சுவையுடனும் பேசுவார். அரங்கில் எத்தனை பேர் அமர்திருந்தாலும் தன்னுடைய பேச்சால் மெய்சிலிர்க்க வைத்துவிடுவார். இவர் பேசுவதைப் பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன். பேரா.தனபால் அவர்களுக்கு ஈடுஇணையற்ற மற்றொரு பேராசிரியர்.ராமச்சந்திரன் அவர்கள் எழுத்தாற்றலில் வல்லவர். தமிழ் வகுப்பில் தன்னுடைய கன்னிப் பேச்சால் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகளை மேற்கோள்காட்டி பேசுவார். தினத்தந்தி இளைஞர்மலர் பத்திரிகையில் கடந்த ஒரு வருடமாக தன்னம்பிக்கைத் தொடரை எழுதி வருகிறார். இன்றைய தினம் நாற்பத்து ஏழு தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐம்பதாவது தொடருடன் முற்றுப் பெறுகிறது. இன்றைய தொடரில் பண்பட்ட மனமே மன்னிக்கும்!! என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரமாகியுள்ளது. அற்புதமான விசயங்களை பதிவு செய்திருக்கிறார்..!!

No comments:

Post a Comment