Saturday, June 14, 2014

பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்றவருக்கு உதவிய சைக்கிள்

1930 களில் அமர்த்தியா சென் எனும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் உடல் பரிசோதனை செய்து கொண்டபோது, அவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இனி அமர்த்தியா சென் நீண்ட காலம் உயிர் வாழ்வது கடினம். அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்று கூறிவிட்டனர். இதனால் அந்த இளைஞரை சிகிச்சைக்கு லண்டன் கொண்டு சென்றனர். லண்டனில் சிகிச்சை எடுத்துக்கொண்டவாறே அந்த இளைஞர் தனது படிப்பையும் அங்கே தொடர்ந்தார். புற்றுநோய் போராட்டத்தில் வெற்றி கண்ட அவருக்கு நாற்பது ஆண்டுகள் கழித்து இன்னொரு வெற்றியும் கிடைத்தது.


ஆம், அவரது பொருளாதார ஆய்வுகளுக்காக 1998 ம் ஆண்டிற்கான பொருளாதாரத் துறை நோபல் பரிசைப் பெற்றார். அவர்தான் பேராசிரியர் அமர்த்தியா சென். எனது ஆராய்ச்சிகளுக்கு இது உதவியாக இருந்தது. இதனால்தான் இதை என் நினைவுச் சின்னமாக நோபல் அருங்காட்சியகத் திற்கு வழங்குகிறேன் என்றார். அது என்ன பொருள்..? 1944 ம் ஆண்டு அவர் பள்ளி செல்ல, அவர் தந்தை கொடுத்த பிலிப்ஸ் சைக்கிள். அதை அவர் 55 ஆண்டுகள் பயன்படுத்தி உள்ளார்..!!

No comments:

Post a Comment