Sunday, June 29, 2014

ஆருயிர் அண்ணன் கோவை VG டேவிட் அவர்கள் அத்வானி அவர்களுடன் - 1998


பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி அவர்கள் 1998 ம் ஆண்டு கோவை மாநகருக்கு வந்திருந்தபோது எனது ஆருயிர் அண்ணன் கோவை V.G.டேவிட் (வலமிருந்து இரண்டாவது) அவர்களும், ஆருயிர் நண்பர் தொழிலதிபர் பிளிப்சன்(வலது - முதலாவதாக) அவர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம். அருகில் நிற்கும் மற்றவர்கள் பா.ஜ.க கழகத்தை சேர்ந்தவர்கள்.
1998 ம் ஆண்டுகளில்தான் அத்வானி அவர்கள் கோவை மாநகருக்கு யாத்திரை வந்தபொழுது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று, தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு முன் தினம் எடுத்துக்கொண்ட புகைப்படம். ஆருயிர் அண்ணன் டேவிட் அவர்கள் இன்று வரைக்கும் அத்வானி அவர்களை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கே சென்று சந்திக்ககூடியவர். பத்து வருடங்களுக்கு மேலாக அவருடன் நேரடி தொடர்பில் உள்ளவர். கோவை மாநகரில் முன்னணி தொழிலதிபராக உள்ளதால் அடிக்கடி டெல்லிக்குச் செல்லும்போது, அத்வானி அவர்களை பார்த்துவிட்டுத்தான் வருவார். தற்போது அதிமுக கழகத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தாலும், கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் எளிமையாக பழகக்கூடியவர் ஆருயிர் அண்ணன் டேவிட் அவர்கள்..!!

No comments:

Post a Comment