Sunday, July 20, 2014

ஆட்டோகிராப் - 1

கல்லூரி இறுதியாண்டு படிப்பு முடியும் தருவாயில் நண்பர்களாக பழகிய மாணவர்களுடன் டைரியில் மலரும் நினைவுகளை எழுதி வாங்கினேன். அவற்றை இங்கே பிரசுரம் செய்கிறேன்..!!



உயிர் இருக்கும் வரை
உள்ளம் இருக்கும்..!
உள்ளம் இருக்கும் வரை
நினைவிருக்கும்..!!

அன்புள்ள நண்பா..!!
                                      உன்னை எனக்கு பள்ளி படிப்பிலிருந்தே தெரியும். உன் நட்பு என்றும் மறவாது இருக்கும். உன் பள்ளி நட்பு கிடைத்தது, அதன் பிறகு சிறிது இடைவெளிக்குப் பிறகு கல்லூரி நட்பு கிடைத்தது. இன்னும் சிறிது இடைவெளி கழித்து உன் நட்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

மீண்டும் சிந்திப்போம்..!!

நினைவிருக்கும் வரை 
S.Srikumaran

S.Srikumaran
S/O P.Shanmuga Sundaram
435/6, EB Colony
Kamaraj Nagar
Kovilpatti - 628501

நண்பன் ஸ்ரீகுமரன் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் 
(1992-1997) என்னுடன் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் ஒன்றாகப் படித்தான். என் இதயம் கவர்ந்த நண்பன். மிகுந்த சாந்த குணம் படைத்தவன். அதிர்ந்து கூட பேசமாட்டான். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி மைதானத்தில் என்னுடைய வகுப்பு மாணவர்களுடன் கால்பந்து விளையாட்டு ஆடும்போது, ஒருவனுடன் சண்டை வந்து நான் அடித்து விட்டேன். இருவருக்கும் சண்டை உக்கிரமாக நடக்க ஆரம்பித்தபொழுது, நண்பன் ஸ்ரீகுமரன் என்னுடன் சண்டையிட்டவனை ஓங்கி கன்னத்தில் ஒரு அறைவிட்டான். அவன் அப்படியே சதம்பித்துப்போய் சண்டைபோடாமல் சென்றுவிட்டான். என்னுடன் சண்டைபோட்டவனுக்கு தொழிலே, மற்றவர் களை வம்புக்கு இழுத்து சண்டைபோடுவதையே பொழுதுபோக்காகக் கொண்டவன். இருவரிடமும் அறைவாங்கிய பிறகு எவருடன் சண்டையிடு வதில்லை. எப்படிறா ஸ்ரீகுமரா! உனக்கு இவ்வளவு கோபம் எப்படி வந்துச்சு. என்னடா செந்திலு, நானும் ரொம்ப நாலு பாத்துகிட்டேன் இருக்கேன். பாட்ஷா படத்துல வர்ற ரஜினிகாந்த மாதிரி நினைச்சுகிட்டு சண்டியர்த்தனம் பண்றான். அதான் ஒரு அப்புவிட்டேன். ராஸ்கல்! கடைசியில உங்கிட்டயும் கைவரி சைய காட்ட ஆரம்பிச்சுட்டான். இப்படியாக என் நட்புக்காக, என் மீது கொண்ட அன்பின் காரணமாக எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறான்.
எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் நான் கணிப்பொறிப் படிப்பில் சேர்ந்தபோது, ஸ்ரீகுமரன் B.Com(CA) படிப்பில் சேர்ந்தான். கல்லூரியிலும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தோம். ஆட்டோகிராப் எழுதும்போது சுருக்கமாகத்தான் எழுதினான். எங்கள் நட்பையும், பழகிய நாட்களையும் இனிய நினைவுக ளையும் எழுத ஆரம்பித்தால் ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்..!! இப்போது ஸ்ரீகுமரன் எங்கே, என்ன வேலை செய்கிறான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கோவில்பட்டியில் ஸ்ரீகுமரனுடைய இல்ல முகவரிக்குத் தேடிச் சென்றபொழுது வீட்டைக் காலி செய்துவிட்டு போய்விட்டதாக சொன்னார்கள்..!! நண்பா..!! ஸ்ரீகுமரா! நீ எங்கிருந்தாலும் எல்லா வளமும் பெற்று, நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்..!! 

No comments:

Post a Comment