Friday, July 18, 2014

நினைவுகள் - 11

இரண்டாமாண்டு படிக்கும்போது மாணவர் விடுதியிலிருந்து ஐம்பது பேருடன் ஒன்றாகச் சேர்ந்து, குற்றாலம், பாபநாசம் ஊர்களுக்குச் சுற்றுலா சென்றோம். நன்றாக அருவிகளில் குளித்து மகிழ்ந்தோம். ஒரே வகுப்பு மாணவர்களுடன் இறுதியாண்டு படிக்கும்போது சுற்றுலா என்ற நினைப்பே இன்பகரமாக இருந்தது. ஒரே வகுப்பில் மாணவ, மாணவிகளாக படித்தாலும், மாணவிகளு டன் அதிகமாகப் பேசமுடியாது. இந்தக் குறையை நாங்கள் இறுதியாண்டு படிக்கும்போது பெங்களூரு, மைசூருக்கு சென்று வந்த சுற்றுலா போக்கியது!

சுற்றுலா செல்லும் நாளன்று மாலைவேளை நான்கு மணிக்கு சாத்தூரிலுள்ள ரயில்நிலையம் வந்துவிட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். நான் ஒரே ஒரு பேக்கில் துணிமணிகளை எடுத்துக் கொண்டேன். காலையி லிருந்தே நண்பர்களுடன் உற்சாகமாக பேசிக் கொண்டிருந் தேன். சாத்தூர் ரயில்நிலைய த்திற்கு வந்து எங்களை வழியனுப்பி வைக்க ஜி.சுப்ரமணியம் சார், செந்தில் குமரன் சார், சந்திரசேகரன் சார் போன்றோர் வந்திருந்தனர். என்னு டன் படித்த சாத்தூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி யின் புதல்வர் முத்துக்குமாரின் உடன்பிறந்த அக்காவும் வழியனுப்ப வந்திருந்தார்.  முத்துக்குமாரும், டெல்லி யிலிருந்து வந்து படிக்கும் வேங்கடேஸ்வரிக்கும் காதல் இருப்பதாக
வதந்தியை வகுப்பு மாணவர்கள் பரப்பி விட்டிருந்தார்கள். அதனால் வெங்க டேஸ்வரியைப் பார்ப்பதற்காக முத்துக்குமாரின் அக்கா, ஆவலோடு வந்திருந் தார். தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் வெங்கடேஸ்வரியு டன் பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் அனைவரும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தோம். மானத்தை வாங்கிறாதங்கடா மாப்ளேகளா! என்று முத்துக்குமார் எங்களை கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

நாங்கள் செல்ல வேண்டிய ரயில் புகையைக் கக்கிக்கொண்டு வந்து நின்றது. அனைவரும் ரயிலில் ஏறி இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.
பேரா.சுப்ரமணியம் அவர்கள் எங்களைப் பார்த்து, ரயில்நிலையத்தில் பேருந்தை நிறுத்துவதைப் போல் கையைக் காட்டிவிடாதீர்கள் என்று கிண்டலாகப் பேசினார். புகைவண்டி கிளம்புகையில் " பயணம் இனிதாக அமையட்டும்" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். புகைவண்டி புறப்பட்டு தன்னுடைய வரலாற்றுப் பயணத்தை செலுத்திக் கொண்டு இருந்தது.

பேரா.அருணேஷ் அவர்களுடன் ஆறு மாணவர்கள் அமர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தார்கள். எனக்கு சீட்டு விளையாட்டு ஆடுவதில் விருப்பமில்லாத தால் கலந்துகொள்ளவில்லை. சரியாக எட்டு மணி இருக்கும். ரயிலுக்குள் ஒரு நபர் I am Very glad to meet you sir என்று என்னிடம் பேசிக்கொண்டு, தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். நானும் இருபது நிமிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அதன்பிறகுதான் தெரிந்தது சரியான அறுவைக் கேஸ் என்று. பலதரப்பட்ட விசயங்களை பேசிக்கொண்டே எளிதில் விடுவ தாக இல்லை. அவசரமாக பாத்ரூம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நான் நழுவிவிட்டேன். அதன்பிறகு ஒரு சில மாணவர்களு டன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தார். பேரா.அருணேஷ் அவர்கள் மாணவர்களை தொந்தரவு தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லிய பிறகு, அவருடைய இருக்கைக்குச் சென்றுவிட்டார். 

கரிய இருளில் ரயில் குபுகுபுவென புகையைக் கக்கிக் கொண்டு தன்னுடைய வரலாற்றுப் பயணத்தைச் செலுத்திக் கொண்டு இருந்தது. மாணவிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் அனைவ ரும் பாட்டுப் பாடிக்கொண்டு அமர்க்களப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். இரவு பன்னிரண்டு மணியள வில் அனைவரும் நன்றாக தூங்க ஆரம்பித் தார்கள். நான் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவாறு மைசூரிலு ள்ள ஸ்ரீ ரெங்கபட்டிணத்துக் திப்புசுல்தான் கோட்டை யையும், குருசிஷ்யன் படத்தில் வரும் மைசூரின் இயற்கை அழகையும், திப்பு சுல்தான் பெங்களூரில் உருவாக்கிய கப்பன், லால் பூங்கா வையும், வசந்த மாளிகை திரைப்படத்தில் வரும் லலிதா மஹாலை யும், பிரமிப்பூட்டும் மைசூர் உடையார் வம்சத்தாரின் அரண்மனையையும், கட்டடக் கலை பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் தொழில் நுட்பத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகரின் அணைக்கட்டிலுள்ள பிருந்தா வன் பூங்காவையும் பார்த்து இன்புற இருக்கிறோம் என்று எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த நினைவுகளுடனேயே என்னுடைய கண்களும் ரயிலின் தட தட சத்தத்திலும் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்தது..!!

No comments:

Post a Comment