Sunday, July 20, 2014

ஆருயிர் நண்பர் கரியன் அவர்களுடன் - கோவை மாநகரம் - 17.02.14


ஆருயிர் நண்பர் கரியன் அவர்கள் கோவை மாநகரிலுள்ள காந்திபுரத்தில், பிக் பாஸ் என்ற பெயரில் துணி தைக்கும் கடை வைத்துள்ளார். பசுமைப் போராளி நண்பர் யோகநாதன் அவர்களின் மூலம் நண்பரானவர். தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களான ரஜினிகாந்த, இளைய திலகம் பிரபு, சரத்குமார் போன்றோர்களுக்கு ஆடை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் கோத்தகிரி. பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகிலுள்ள பாலமலை கோயில், குலதெய்வக் கோயிலாகும். அந்தக் கோயிலைப் பற்றி கதை கதையாக நிறைய பேசுவார். இவருக்கு ஐம்பது வயதில்தான் குழந்தை பிறந்தது. குலதெய்வ சாமியின் மகிமையால்தான் பிறந்தது என்று அடிக்கடி கூறுவார். இவருடன் இரண்டு, மூன்று முறை கோயிலுக்குச் சென்றிருக்கி றேன். கலவென கலவென அதிர்வேட்டுச் சத்தம்போல் இயல்பாகவே பேசுவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பழகிய நாட்களின் நினைவுகளைப் பற்றி அடிக்கடி பேசுவார். இப்படிப்பட்ட நண்பர்களுடனேயே அதிகமாக சிநேகிதம் வைத்துள்ளதால், என்னுடைய மனது எப்பொழுதுமே உற்சாகமாக இருக்கும். மாலை வேளையில் எடுத்துக் கொண்ட புகைப்படம்..!!

No comments:

Post a Comment