Monday, July 14, 2014

ஆருயிர் நண்பர் சிவக்குமார் அவர்களுடன் கோத்தகிரியிலுள்ள ஈளாடா மலைப்பகுதிக்குச் சென்ற வேளையில் - 17.06.14

எனக்கு பின்னால் தெரியும் மலைப்பகுதி மிகப்பெரிய கணுவாய் பகுதியாகும். காற்று அதிவேகத்தில் அடித்துக் கொண்டே இருந்தது. இந்த கணுவாய்ப் பகுதியின் இயற்கை அழகைப் பார்த்து பிரமித்துப் போனேன். இனி வரும் விடுமுறை நாட்களில் நானும் எனது ஆருயிர் அண்ணன் சந்திரன் அவர்களும்,
உதகை, குன்னூர், கோத்தகிரி மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களை புகைப்படங்களையும் எடுப்பதற்கு திட்டம் தாயரித்துள்ளோம். உலக அளவில் பேசப்படவேண்டும் என்பதற்காகவும், வெளி உலகம் தெரியாத மலைவாழ் மக்களின் வாழ்க்கையை எங்களால் முடிந்த அளவிற்கு வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகத்தோடு இமாலயப் பயணத்தைத் தொடங்க உள்ளோம். மலைவாழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பலர் பதிவு செய்துள்ளனர். நாங்கள் புதிய கோணத்துடன் அவர்களுடைய வாழ்வியலை பதிவு செய்ய உள்ளோம்..!!


இன்றைய தினம் எனக்கு விடுமுறையாக இருந்ததால் நண்பர் சிவக்குமாருடன் கோத்தகிரிக்குச் சென்றேன். கோத்தகிரியிலிருந்து வடக்கு நோக்கி பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஈளாடா மலைப்பகுதி உள்ளது. கீழே உள்ள புகைப்படத்தில் வலது புறம் நோக்கி அம்புக்குறியிட்டுக் காட்டப்பட் டுள்ளது. நேராகச் செல்லும் சாலை கோடநாடு எஸ்டேட்டிற்குச் செல்லும். அங்கேதான் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் எஸ்டேட் உள்ளது. எனது ஆருயிர் அண்ணன் கோவை V.G.டேவிட் அவர்களுடன் கோடநாடு எஸ்டேட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். அங்கெ புகைப்படக் கருவியை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அதனாலேயே புகைப்படம் எடுக்க முடியவில்லை. இந்த ஈளாடா மலைப்பகுதியில் உள்ள எஸ்டேட்டில் குடியிருப்பு வில்லா கட்ட உள்ளனர். அதில் நண்பர் சிவகுமார் அவர்கள், ஐந்து கோடி ரூபாய் மதிப்பு உள்ள புராஜக்ட் வேலைக்கு, தனி ஒரு நபராக வந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டபொழுது, எனக்கு தலையே சுற்றிவிட்டது. சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினேன். கையொப்பம் இடுவதற்கு நாள், கிழமை, சம்பிரதாயங்களை எல்லாம் பார்ப்பது கிடையாது என்று கூறியபோது, எனக்கு இந்த விசயங்களை கேட்பதற்கே புதுமையாக இருந்தது..!!










ஈளாடா மலைப்பகுதியில் உள்ள கிராமம். இதைப் பார்க்கும்போது இறைவனின் சாம்ராஜ்யம் போல் கட்சி தந்தது. இதைப் போன்ற அமைதியான, ரம்மியமான எழில் கொஞ்சும் இயற்கை அழகை உதகையில் பார்த்தது கிடையாது. நண்பர் சிவகுமார் அவர்களுடன் வந்ததாலேயே இந்த பகுதிகளை பார்க்க முடிந்தது. இந்த குடியிருப்பு வில்லா பகுதிகளுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.





நண்பர் சிவகுமார் அவர்கள் வில்லா குடியிருப்பு பகுதியில் Rain Gun மற்றும் நீர்ப்பாசன வசதியை அமைக்கும் முறைகள் குறித்து, உரிமையாளர்களிடம் விளக்குகிறார்..!!


எஸ்டேட்டில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தூரத்தில் தெரிவது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வில்லா..!!




No comments:

Post a Comment