Monday, July 7, 2014

இறுதியாண்டு இளங்கலை கணிப்பொறித்துறை மாணவர்களுடன் - 2009 ம் வருடம்


மார்ச் மாதம் 2009 ம் வருடத்தில் இந்த புகைப்படம் கல்லூரி வளாகத்தில் வைத்து எடுக்கப்பட்டது. 2010 ம் வருடத்துடன் என்.ஜி.பி.கல்லூரியில் எனது உதவிப் பேராசிரியர் பணியை நிறைவுசெய்தேன். வலமிருந்து - பேராசிரியர் கள் சரஸ்வதி, லதா, ஜெயகணேஷ் அவர்கள், நான், கோபால கிருஷ்ணன், கல்லூரி நிர்வாக அதிகாரி சாம்பசிவம் அவர்கள், கல்லூரி முதல்வர் முத்துசாமி அவர்கள், துறைத்தலைவர் நந்தினி அவர்கள், ஹேமலதா, தேன்மொழி, தேவபிரியா மற்றும் இறுதியாண்டு இளங்கலை கணிப்பொறித் துறை மாணவர்கள்..!! இவர்களில் தேன்மொழி, தேவபிரியா இருவரும் நான் கல்லூரியில் படிக்கும்போது எனது முதுகலை வகுப்பு ஜூனியர் மாணவர்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கணிப்பொறிப் பாடம் நடத்துகையில்தான் என்னுடைய பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டேன். வகுப்பறையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் கணிப்பொறிப் பாடத்தோடு, உலக இலக்கியங்களையும், வரலாறுகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும், வரலாற்றில் சகாப்தம் படைத்த மனிதர்களின் வாழ்வியலையும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். 2003 ம் வருடத்திலி ருந்தே புதிய புதிய விசயங்களை செய்வதில் எல்லையற்ற ஆர்வம் ஏற்பட்டது. 2009 ம் ஆண்டு இலங்கை நாட்டில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களவர்களு க்கும் படுபயங்கரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்காக தமிழக முதல்வர் கேட்டு கொண்டதற்கினங்க கல்லூரியில் படித்த 3000 மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினேன். அதன்பிறகு இலங்கை யில் நடைபெறும் போரில் மனித உரிமை மீறல்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றபோது, என்.ஜி.பி.கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் அவினாசி சாலையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். எங்கள் ரத்தம், எங்கள் ரத்தம்..!! தமிழ் சொந்தங்கள் எங்கள் ரத்தம்..! சிங்களே அரசே! இனவாத அரசே..!! எங்கள் தமிழ் சொந்தங்களை மனிதாபிமானம் இல்லாமல் கொலை செய்யாதீர்கள்!! என்று விண்ணகமே அதிரும் அளவிற்கு எழுப்பிய கோசத்தை, என்னால் இந்த பூமியை விட்டுச் செல்லும் வரை மறக்க முடியாது.

No comments:

Post a Comment