Friday, July 4, 2014

2014 ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த வீரமங்கைக்கான அமெரிக்கா நாட்டின் விருது பெற்ற லட்சுமி!!

வீடியோ காணொளி : Click here

இன்றைய கணிப்பொறி யுகத்தில் தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தால் கை நிறைய சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, இதர நாடுகளிலோ வசதியான வாழ்க்கையுடன் வாழலாம். அதன்பிறகு பிறந்த பாரதமண்ணை சீச்சீ அதெல்லாம் ஒரு வாழத்தகுந்த நாடா..? என்று நினைத்துக் கொண்டு, எந்த நாட்டிற்கு வேலைக்குச் சென்றோமோ அந்த நாட்டையே புண்ணியபூமியாக, கர்மபூமியாக எண்ணும் இளைஞர்கள் லட்சக்கணக்கான பேர். வசதியான வாழ்க்கை அமைந்தபிறகு சவுந்திரயத்துடன் மனதை மயக்கும் அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள மணப்பெண்ணை சல்லடை போட்டுத் தேடுவார்கள். திருமணம் முடிந்து வாழ்க்கை கசந்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் விவாகரத்து பெற்றுவிடுவார்கள். அடுத்ததாக பெண் தேடும் படலத்தை தொடங்குவார்கள். வேதாளம் முருங்கை மரம் ஏறுவதைப் போன்று மறுபடியும் விவாகரத்து செய்துவிட்டு, மற்றொரு பெண்ணைத் தேடுவார்கள். பாரதத் திருநாட்டில்தான் என்ன ஒரு உலக அதிசயம்..!! இவர்களின் கதையை வைத்து நிறைய திரைப்படங்கள் எடுக்கலாம். சில இளைஞர்கள் பட்டப் படித்து குறைந்த ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டு, சமூக விசயங்களில் ஈடுபட்டாலோ, அரசியல் களத்தில் ஈடுபட்டாலோ, பெண்ணைப் பெற்றவர்கள் திருமண பந்தந்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டார்கள். காரணம் பெண்ணின் வாழ்க்கை பாழாய்ப் போய்விடுமாம். இவர்கள்தான் நாடு சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை, அரசியல்வாதிகள் நாட்டைக் கொள்ளை அடித்து தேசத்தையே குலநாசம் செய்துவிட்டார்கள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய் கிழியப் பேசுபவர்கள். சோற்றால் அடித்த பிண்டங்கள்..!! பாரத தேசத்தில் வாழும் இந்த கோடான கோடி மானிடப் பதர்களுக்கு மத்தியில் இந்திய தேசத்தில் புரட்சியை ஏற்படுத்திய லட்சுமி - அலோக் தீட்சித் தம்பதிகளைப் பற்றிய செய்தியைப் பார்ப்போம்..!!


காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம் எனப் பிரமிப்பூட்டுகிறார்கள் டெல்லியைச் சேர்ந்த அலோக் தீட்சித் - லட்சுமி ஜோடி! எட்டு ஆண்டுகளு க்கு முன்பு ஆசிட் வீச்சு ஒன்றில் முகம் சிதைக்கப்பட்ட லட்சுமியும் சமூக சேவகர் அலோக் தீட்சித்தும் இணைந்து வாழ்வதோடு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டும் அமைப்பு ஒன்றை நடத்துகிறார் கள். "Stop Acid Attacks" எனும் அந்த அமைப்புக்கு பெண்களிடையே ஏக வரவேற்பு. 

சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தபோது, நான் பார்த்து வந்த விமானப் பணியை உதறிவிட்டு ஊடகவியலாளர் ஆனேன். 2012 - ல் இந்தியா முழுக்க அரசியல்வாதிகளை விமர்சித்து இணையங்களில் எழுதிய, கார்ட்டூன் வெளியிட்ட பலரும் கைது செய்யப்பட்டார்கள். ஊழலுக்கு எதிராக வெகு வீரியமான கார்ட்டூன்களைப் பதிவு செய்து, தேசம் முழுக்க பரபரப்பு கிளப்பிய அசீம் திரிவேதி என் நண்பர். இந்திய அரசியல்வாதிகள், தேசியச் சின்னங்களை அவமதிப்பது போல காட்டூன்களை வரைகிறார் என்று கைது செய்யப்பட்டாரே அவரேதான். கருத்துச் சுதந்திரம் அடக்கப்படுவதற்கு 
எதிராக நானும் அவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடினோம். அருந்ததி ராய் தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை அப்போது எங்கள் போராட்டத்தை ஆதரித்தார்கள். நாட்டின் கவுரவத்தை சீர்குலைத்ததாகச் சொல்லி, எங்களை கைது செய்து அப்புறப்படுத்தினார்கள். அரசாங்கம் எளியவர்களைக் கிள்ளுக் கீரைகளாக நடத்தும் அந்த அராஜகம்தான் நலிவுற்றவர்களுக்காக என்னை முழுமூச்சாகப் போராடச் செய்தது. அப்படி நான் இயங்கிக்கொண்டிருந்த போதுதான், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. நம் இந்திய சமூக அமைப்பினால் பாதிக்கப்பட்டோரில் மிகவும் பரிதாபமானவர் கள் அவர்கள்தான் என உணர்ந்தேன். அவர்களின் வேதனையை வெறுமனே எழுதிக்கொண்டிருக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அவர்களுக்கு வழிகாட்டவும் ஆலோசனைகளை அளிக்கவும், Stop Acid Attacks என்ற அமைப்பைத் தொடங்கினோம். அமைப்பின் பிரச்சார நடவடிக்கைகளுக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது லட்சுமியைப் பற்றிச் சொன்னார்கள். ஆசிட் வீச்சின் துணிச்சலான சாட்சியமாக இருந்ததால், அவரை எனது இயக்கத்தில் இணைக்க விரும்பித் தேடினேன். ஒருநாள் அந்தச் சந்திப்பு நடந்தது..!!

ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பல பெண்கள் சிதைந்த தங்களின் முகத்தை மூடியபடி கூனிக் குறுகி நடக்கும்போது, லட்சுமி முகத்தை மறைக்காமல் நேரான பார்வையுடன் என்னைச் சந்தித்தார். அந்த மனத்திடம் முதல் சொடுக்கிலேயே என்னை ஈர்த்தது. அநேகமாக அவர் மீதான என் காதலின் தொடக்கப் புள்ளி அதுவாகத்தான் இருக்க வேண்டும். கலையான அழகுடன் இருந்த லட்சுமி, தன் 15 வயதில் ஆசிட் தாக்குதலை எதிர்கொண்டாள். அவரைவிட 15 வயது மூத்தவனான குட்டு என்பவன் அவரைக் காதலிப்பதாகச் சொல்லி இருக்கிறான். அந்தக் காதலில் தனக்கு சம்மதம் இல்லை என்று லட்சுமி சொல்ல, பரபரப்பான டெல்லியின் கான் மார்கெட் பகுதியில் வைத்து அவர் முகத்தில் ஆசிட் வீசியிருக்கிறான். யாரும் உதவிக்கு வராமல் பயந்து ஓட, துடித்துப் புரண்ட லட்சுமி, ஏழு அறுவை சிகிச்சைகளை எதிர்கொண்டிருக் கிறார். 

நாங்கள் காதலித்தோம். இணைந்து வாழ முடிவெடுத்தோம். திருமணம் என்ற சடங்கின் பெயரால் கூட்டம் கூட்டி லட்சுமியின் கழுத்தில் தாலி கட்ட நான் விரும்பவில்லை. காரணம் அங்கு வரும் அனைவரும் லட்சுமியின் அழகு பற்றி பேசுவார்கள். பண்பாட்டின் பெயரால் நடைபெறும் உடல் வன்முறையா கத் திருமணம் மாறிவிடக் கூடாது என்பதால், திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ முடிவெடுத்தோம். வாழ்ந்து வருகிறோம். 'இரக்கத்தின் பெயரால் உருவான காதலா இது..?' என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நிச்சியமாக இல்லை. இரக்கத்தின் பேரில் வரும் எந்த உணர்வும் நிலைக்காது. அது தன் அகங்காரத்தை வளர்த்து, ஒரு கட்டத்தில் தான் நேசிக்கும் ஜீவன்களை முடக்கிவிடும். இது மிக இயற்கையான உணர்வு" என்று மென்மையாகச் சிரிக்கிறார் அலோக் தீட்சித்..!!

--ஹிந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணல்..!!


அமெரிக்காவின் அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிட்சேல் ஒபாமாவிடம் 2014 ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த வீர மங்கைக்கான விருது பெற்ற வேளையில் - மார்ச் 5,2014
அலோக் தீட்சித் இளைஞரை நினைத்துப் பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. படித்துப் பட்டம் பெற்ற இவரைப் போன்ற இளைஞர்கள்தான்  இந்தியாவின் தேவதூதர்கள். இவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள்..!!


இலட்சுமி ஆசிட் வீச்சுக்கு முன்பு..

 
ஆசிட் வீச்சுக்கு ஆளான நாளில் இருந்து எட்டு வருடங்களாக என் வீட்டில்தான் முடங்கிக்கிடந்தேன். ஆசிட் வீச்சின் கொடுமை ஒரு பக்கம், சமூகமும் உறவுகளும் என்னைப் புறக்கணித்தது மறு பக்கம் எனத் தனிமைத் துயரால் சபிக்கப்பட்டிருந்தேன். எந்த வேலைக்கும் என்னால் செல்ல முடியவில்லை. எதிரில் வருகிறவர்கள் முகம் சுழித்து அருவருப்பாக விலகிச் சென்றபோது, இனி எனக்கு ஒரு வாழ்வு இல்லை நம்பினேன். ஆனால், அதெல்லாம் வாழ்வின் கறுப்புப் பக்கங்கள். அதிலிருந்து மீண்டு அலோக்கைச் சந்தித்த பிறகு, வாழ்க்கையின் புதிய அத்தியாயம் பிறந்தது. இப்போது எங்கள் இல்லறத்தையே ஓர் இயக்கமாக்கி இருக்கிறோம். ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களே.. உங்கள் மீது ஆசிட் வீசியவர்களிடம் நீங்கள் செல்லுங்கள். 'என் முகத்தை மாற்ற முடிந்த உன்னால், என் மனதை மாற்ற முடியவில்லையே. அதனால் நீ தோல்வியடைந்தவன்தான்' என்று..!!


எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்..!!
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாரம்சமாகும்..!!

பகவான் ஸ்ரீகிருஷ்ணர்..!!

No comments:

Post a Comment