Friday, July 11, 2014

தியாகச் செம்மல் அமரர் கே.பாலதண்டாயுதம் அவர்களின் 41 ம் ஆண்டு நினைவு நாள் விழாவில் நான் ஆற்றிய உரை..!!

தியாகச் செம்மல் அமரர் கே.பாலதண்டாயுதம் அவர்களின் 41 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 31.05.14 சனிக்கிழமை அன்று, கோவை மாநகரில் மசக்காளிபாளையத்திலுள்ள கண்டியப்பன் சமூகக்கூடத்தில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரத்த தான முகாம், விளையாட்டுப் போட்டிகள், நாணயக் கண்காட்சி, பொது அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற் றது. எனது ஆருயிர் அண்ணன் ஆடோசந்திரன் அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க நான் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டேன். முகநூல் அறிவுலகத் தொடர்பா? உளவியல் பிரச்சினையா..? என்ற தலைப்பில் பதினைந்து நிமிடங்கள் உரையாற்றினேன். மாலை வேளையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக, ஈரோடு மாநகரில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் தோழர்.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் முன்னாள் நான் உரையாற்றியதுபோது மிகுந்த மகிழ்ச்சிய டைந்தேன். 2011 ம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு, "எழுத்து எனும் கருவறை" என்ற தலைப்பில் அவருடைய வாழ்நாளில் இதுவரை பேசாத வகையில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். இனி வைகோ அவர்கள் நினைத்தாலே இந்த உரையைப் போன்று மறுபடியும் பேசமுடியாது. இலக்கிய உலகில் மேடைப்பேச்சில் அன்றைய தினம் வரலாற்றுச் சகாப்தம் படைத்தார். அன்றைய தினம் தோழர்.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் முன்னிலை யில்தான் வைகோ அவர்கள் உரையாற்றினார். இந்த பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்று ஸ்டாலின் குணசேகரன் அவர்களிடமிருந்து பரிசைப் பெற்றேன். பரிசைப் பெற்ற பின்பு சில நிமிடங்கள் அவரிடம் பேசினேன். வைகோ அவர்களின் பாசறையில் பயிற்சி பெற்ற மாணவன். வைகோ அவர்களைப் பார்த்துதான் அரசியலையும், இலக்கியம், வரலாற்றைக் கற்றுக் கொண்டேன். மேடைகளில் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டேன்.
எனது ஆருயிர் அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களுடன் பண்ணிரெண்டு வருடங்கள் நட்பை வளர்த்துக் கொண்டேன் என்று கூறினேன். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தேன். என்னுடைய உரை சிறப்பாக இருந்ததாக ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பாராட்டினார்..!! பரிசளிப்பு விழா முடிந்த பின்பு அமரர் பாலதண்டாயுதம் அவர்களைப் பற்றி ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். நாளை 13.07.13 ஞாயிறு அன்று கோவை மாநகரில் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கவிஞர்கள்  திருவிழாவில்  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் இமயம் கே.பாலசந்தர் போன்றோருடன் ஸ்டாலின் குணசேகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றுகிறார். கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய "மூன்றாம் உலகப்போர்" என்ற புகழ்பெற்ற புத்தகம் குறித்து சிறப்புரையாற்றுகிறார்..!!

எனது உரையை www.Senthilkumarvision.tumblr.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன்..!! 

தோழர்.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களிடம் நான் பரிசு பெற்றபோது..!!


இரண்டாம் பரிசுபெற்ற என்னுடைய மாணவர்..!!


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு அளித்த வேளையில்..!!


 (இடது) - எனது ஆருயிர் அண்ணன் ஆட்டோ.சந்திரன் அவர்கள்..!!


இரத்ததான முகாம் நடைபெற்ற வேளையில்..!!




ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் தோழர்.த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள், அமரர் கே.பாலதண்டாயுதம் அவர்கள் குறித்து சிறப்புரை ஆற்றிய வேளையில்..!!



No comments:

Post a Comment