Tuesday, July 1, 2014

ஆட்டோ.சந்திரன் அவர்களின் மாமனார் எம்.எஸ்.கண்ணன் அவர்கள்


ஆட்டோ.சந்திரன் அவர்களின் துணைவியார் அஜிதா அவர்கள். இவருடைய தந்தையார் எம்.எஸ்.கண்ணன் அவர்கள். ஜனசக்தி பத்திரிகையில் எழுத்தாளராக பணியாற்றியவர். முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் ஆருயிர் நண்பராக இருந்தவர். ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் உற்ற தோழர். சுபதினம் என்ற தமிழ் படத்தின் திரைக்கதை ஆசிரியர் எம்.எஸ்.கண்ணன் அவர்கள். சுபதினம் படத்தின் திரைக்கதை சமீபத்தில் காலமான தமிழ்த் திரை உலகின் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களால் நிறுவப்பட்டு, புனேயில் செயல்படும் திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட காரல் மார்க்சின் வரலாறை தமிழில் மொழிபெயர்த்தவர். ஜூன் 20,1920 ம் ஆண்டு பிறந்தவர். 1970 ம் ஆண்டு காலமானார். இவருடைய புகைப்படத்தை அண்ணன் சந்திரன் அவர்களின் வீட்டில் முகப்பில் மாட்டி வைக்கப்பட்டிரு க்கும். நேற்றுதான் என்னுடைய கேமாரவைக் கொண்டு புகைப்படம் எடுத்தேன். இன்று என்னுடைய வலைப்பூவில் இவருடைய புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதன் மூலம், வலைப்பூவே பெருமிதம் அடைவது போல் உணர்ந்தேன்..!!

வலைப்பூ: ஆட்டோ சந்திரன் 

No comments:

Post a Comment