Wednesday, July 2, 2014

பேனோ செபின் - பார்வை சவால் கொண்டவர் மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்வில் வெற்றி!!

எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பேனோ செபீன்..!!


இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் முத்திரை பதித்தவர் பார்வை சவால் கொண்ட பேனோ செபீன். 2008 ம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட
பேனோ, இந்தியாவின் ஆன்மாவைப் பேச பேச பிரமித்தது உலகம். அந்த முயற்சிக்காகவே, நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை குரல் பேனோ என்று அந்த வருடத்துக்கான டாப் 10 நம்பிக்கை இளைஞர்களில் ஒருவராக பேனோ செபீன் தேர்தேடுக்கப்பட்டிருந்தார்.

ஐ.ஏ.எஸ்.படித்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதே இலக்கு! என்று அப்போது கூறிய பேனோ, இப்போது அதைச் சாதித்திருக்கிறார். முத்தற்ற சிப்பிகள் என் முகத்தில் உண்டு என்ற தன் கவிதை மூலம் மட்டுமே "தான்
பார்வையற்றவர்" என்பதை உணர்த்தும் பேனோ, தன்னம்பிக்கையின் உச்ச நட்சத்திரம். சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் பேனோ செபீனுக்கு 343 வது இடம்..!!

எதுக்கு தண்ணீரையும் பயன்படுத்திவிட்டு பிறகு டிஷ்யூ பேப்பரையும் பயன்படுத்துறீங்க. குப்பைத் தொட்டியில் குப்பையைப் போடுறதுக்காக நாலாவது மாடில இருந்து இறங்கி வந்த நீங்க, குப்பைத் தொட்டியில் போடாமல் ரோட்ல கொட்டுறது ஏன்..? இப்படி சின்னச் சின்னதா எனக்குள் எழுந்த கேள்விதான், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நோக்கி என்னை நகரத்தின..!! வார்த்தைகளைக் கவனமாகக் கையாளுகிறார் பேனோ..!!

அப்பா சார்லஸ் ரயில்வே ஊழியர். நான் ஆசைப்பட்டால் எதையுமே தட்டமாட்டார். அம்மா மேரி பத்மஜாவும் அப்படித்தான். பள்ளி, கல்லூரிகளில் பிரெய்லியில்தான் படிச்சேன். செய்தித்தாள் செய்திகளை வரிக்கு வரி அம்மா வாசிச்சுக் காட்டுவாங்க. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான பாடத்தில், விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் புத்தகங்கள் பிரெய்லியில் கிடைக்கும். தேவையான சில புத்தகங்களை நானே பிரெய்லியில் மாத்திக்கிட்டேன். நண்பர்களும் அம்மாவும்தான் எப்போதும் எனக்காகப் புத்தகங்களைப் படிச்சிகிட்டே இருப்பாங்க. தேர்வு நாட்கள்ல அம்மா தொடர்ந்து ஏழு மணி நேரம் வரை கூட படிச்சிட்டே இருந்தாங்க என்று குறுப்பிடுகிறார். அம்மா சொல்கிறார் - அதெல்லாம் பெரிய விசயமாங்க. புள்ளை நல்லாப் படிக்கணுங்கிறதை விட நமக்கு என்ன வேணும்..? நான் சொல்ல கவனமா கேட்டுப்பா. எதையும் அர்த்தம் புரியாம படிக்கவே மாட்டா.
வங்கியில வேலை பார்த்துட்டே படிச்சிகிட்டு இருந்தா. இவ பாஸ் பண்ணிடுவான்னு எனக்கு அப்பவே தெரியுங்க. ரெண்டு, மூணு மணி நேரம் தான் படிப்பா. அதுக்கு மேல அவளுக்கு நேரமும் கிடையாது. ஆனா, ஆல் இந்தியா நியூஸ், நியூஸ் அனலிசிஸ்ணு நிறையக் கேட்பா - என்கிறார் தாயார் மேரி, முகத்தில் சந்தோஷ மின்னல்கள் ஜொலிக்க..!!

நேர்காணல் ரொம்ப சுவராஷ்யமா இருந்தது. 45 நிமிஷங்களுக்கு மேல் என்னை இண்டர்வியூ பண்ணாங்க. வசதியா உணர்றீங்களா? எங்க ஸ்டாப்ஸ் உங்களை நல்லவிதமாப் பார்த்து கிட்டாங்களா'னு அன்பா கேட்டாங்க. ரொம்ப நல்லாப் பார்த்துகிட்டாங்க. நன்றின்னு சொன்னேன். என் பயோடேட்டால, பேச்சுப்போட்டிகளில் கலந்துக்குவேன். பேசுவதில் விருப்பம்னு குறிப்பிட்டிரு ந்தேன். அதைப் பார்த்துட்டு, முதல் அஞ்சு நிமிசத்துலயே உங்களுக்கு நல்லாப் பேசத் தெரியும்னு தெரிஞ்சிக்கிட்டோம்னு சொல்லிச் சிரிச்சாங்க. அப்புறம் சப்ஜெக்ட் சம்பந்தமா நிறையக் கேள்விகள் கேட்டாங்க. எல்லாக் கேள்விகளுக் குமே ரொம்ப நம்பிக்கையோட பதில் சொன்னேன். பாஸ் பண்ணிடுவேன்னு அப்பவே தெரியும். பயிற்சியை சீக்கிரம் முடிக்கணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஏன்னா, செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு!" என்று உறுதியான குரலில் சொல்கிறார் பேனோ..!!

புத்தகங்களை வாசித்துக் காட்டும் தாயார் மேரி அவர்கள்..!!


பேனோ செபீன் தனது பெற்றோர்களுடன்..!!

No comments:

Post a Comment