Friday, October 31, 2014

நினைவுகள் - 16

சந்திரன் அண்ணன்கூட நாட்டு நடப்பை பத்தி பேசிகிட்டு இருக்கும்போது, ஒரு நாளு என்கிட்ட கேட்டாரு. மாகபாரதக் கதையை நல்லாத் தெரியுமான்னு..?
ஓரளவுக்குத்தான் தெரியுமுன்னு சொன்னேன். யாரு எழுதுன புத்தகத்தை படிச்சீங்கன்னு கேட்டாரு. மூதறிஞர் ராஜாஜி ஐயா எழுதுன மாகாபாரத புத்தகமுன்னு சொன்னேன். அரசியலைப் பத்தி பேசுற நாம, மாகாபாரத இதிகாசத்துல நடக்குற அரசியலைப் பத்தி சரியாத் தெரியலேன்னா, நாம பல விசயங்களை ஆராய முடியாமப் போகும். அதனால இன்னுமே புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதுன நூல்களை படிச்சாத்தான், தேவையான நேரத்துல மேற்கோள்காட்டி பேசுறதுக்கு உதவியா இருக்கும். அப்படி இல்லாத பட்சத்துல மேடைப் பேச்சுல ஜொலிக்க முடியாதுன்னு சொன்னாரு.

சமீபத்துல எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டனோட 'கவுரன்' தமிழ்பதிப்பு முதல் பாகம் மாகாபாரதக் கதையை படிச்சப்ப ஒரு விஷயம் தெளிவா தெரிய வந்துச்சு. நியாயப்படி ராஜ்ஜியம் கவுரவர்களுக்குத்தான் சொந்தம். கவுரவர்கள் அந்த காலத்துல பின்பற்றுன சமுதாய நடைமுறைகளை உடைச்செரிஞ்சிருக் காங்க. சாதிய நடைமுறைகளையும், பழமைகளையும் தூள் தூளா அடிச்சி நொறுக்கி இருக்காங்க. தீண்டத்தகாத மனிதர்கள்னு சமுதாயத்துல ஒதுக்கி வச்சவங்களுக்கு, ராஜ்ஜியத்துல நல்ல பதவிகளை கொடுத்துருக்காங்க.

இதுக்கு உதரணமா, கர்ணனையே சொல்லலாம். தேரோட்டியோட மகன்னு தெரிஞ்சும், துரியோதனன் கர்ணனை அங்க நாட்டு அரசனா பதவியில அமர்த்துறான். மகத நாட்டு அரசன் ஜாரசந்தன் சூத்திர ஜாதியை சேர்ந்த ரணியதனுசுவை, தன்னோட படையில தளபதியா பதவியில அமர்த்துறான். வியாசருக்கும் ஒரு வேலைக்காரிக்கும் முறைகேடான முறையில பொறந்த விதுரனை, பீஷ்மர் தன்னோட அஸ்தினாபுர நாட்டுக்கு பிரதம மந்திரியா பதவியில அமர்த்துறாரு.

விதுரன் ஒரு தாழ்ந்த சாதியை சேர்ந்தவன்தான். இதெல்லாம் அந்தக் காலத்துல பல எதிர்ப்புகளையும் மீறி செய்யப்பட்ட விசயங்கள்.

திரவுபதியை கல்யாணம் செய்யுறதுக்கு நடத்தப்படுற சுயம்வரத்துல, கர்ணன் வில்வித்தை போட்டியில ஜெயிக்கிறான். ஆனா, கர்ணன் தேரோட்டியோட மகனுங்கிற காரணத்தால, திரவுபதி கர்ணனோட குலத்தை கேவலமா பேசி அவமானப்படுத்துறா. இப்படி பேசுனதுக்கு பரிகாரமா அதே திரவுபதி சூதாட்டத் துல கவுரவர்களுக்கு முன்னாடி அவமானப்படுறா.

இப்படி அந்தக் காலத்துல கவுரவர்கள் சமுதாய நடைமுறைகளை உடைச்ச தால, இதையெல்லாம் தாங்க முடியாத பிராமணர்கள் கூட்டம் கோபமடையு -றாங்க. பாண்டவர்கள் அஞ்சு பேருமே பாண்டுவுக்கு பிறந்த குழந்தைகள் கிடையாது. தர்மன், பீமன், அர்ச்சுனன் மூணு பேரு தேவ அரசன் இந்திரனுக்கு பிறந்தவங்க. நகுலன், சகாதேவன் வேற ஒரு அம்மாவுக்கு பொறந்தவங்க.

கவுரவர்கள் நூறு பேருமே அரசன் திருதாஷ்டிரனுக்கும், காந்தரிக்கும் பொறந்தவங்க. சகுனியோட பழிவாங்குற சூழ்ச்சியால நல்ல மனசு உள்ள துரியோதனன் தீயவனா சித்தரிக்கப்படுறான்.

காலப்போக்குல பிராமணர்கள் கூட்டம் மகாபாரத இதிகாசக் கதையை திருச்சி எழுதுறாங்க. கிருஷ்ணரை கடவுளோட அவதாரமா சித்தரிக்கிறது மூலமா, பாண்டவர்களை யோக்கியமான, தர்மத்தைக் காக்குறதுக்கு பொறந்தவங்க மாதிரி வரலாறு எழுதுறாங்க. பதினெட்டு கிரந்தங்கள் கொண்ட பகவத் கீதை நூல் அழிவை வலியுறுத்தக் கூடியது. தர்மத்தை நிலை நாட்டுறதுக்கு சொந்த ரத்த பந்தங்களையே கொள்ளச் சொல்லி வலியுறுத்துது. நாம யோசிச்சு பாக்கணும். நம்ம வீட்டுல அண்ணன், தம்பி, பெற்றோர்களுக்குள்ள சொத்து பிரிக்கிறதுல பிரச்சினை வந்துச்சுன்னா, பெத்தவங்களையோ, அண்ணன், தம்பிகளையோ கொலை செய்ய முடியுமா..? கொலை செய்யுறதால தர்மத்தை நிலை நாட்ட முடியுமா? இந்த மாதிரி பகவத் கீதை ஆணித்தரமா வலியுறுத் துது.

தீண்டத்தகாதவர்களை சமுதாயத்துல சக மனிதனா அங்கீகரிச்ச கவுரவர் களை, பிராமணர்கள் கூட்டம் காலம் காலமா வீழ்த்தப்பட்ட மனிதர்களா சித்தரிச்சிகிட்டு வர்றாங்க. என்னமோ, உலகத்துல பாண்டவர்கள் யோக்கிய மானவங்க மாதிரியும், கவுரவர்கள் அயோக்கியர்கள் மாதிரியும் பேசிகிட்டு வர்றாங்க. இந்த மாகாபாரதக் கதையோட ஆணிவேரே இந்த நூற்றாண்டுல சரியப் போகுது.

மிகப்பெரிய தொலைக்காட்சிகள்ல கோடிக்கணக்குல செலவு செஞ்சி மாகபாரதக் கதையா தொடரா ஒளிபரப்பி, திரும்பத் திரும்ப மக்களை முட்டாளா செஞ்சிகிட்டு வர்றாங்க. இந்த நூற்றாண்டுல கடவுளோட அவதார -மான கம்பியூட்டர்லயே, எல்லா உண்மைகளும் மக்களுக்கு கூடிய சீக்கிரத்து -லயே தெரிய வரும்..!!

No comments:

Post a Comment