Tuesday, October 14, 2014

தேவர்மகன்

நான் 1992 ம் ஆண்டு கோவில்பட்டியிலுள்ள நாடார் மேல்நிலைப்பள்ளியில் 6 ம் வகுப்பு சேர்ந்திருந்தேன். பள்ளி விடுதியில் தங்கிப் படித்தேன். இந்த வருடத்தில் கமல்ஹாசன், சிவாஜிகணேசன் நடிப்பில் உருவான தேவர்மகன் படம் வெளியானது. இயக்குநர் பரதன் அவர்கள் சாதிய மோதல்களை மையமாக வைத்து, உலகநாயகனின் நடிப்பில் அற்புதமான ஒரு கிராமத்து காவியத்தை படைத்திருந்தார். கமல்ஹாசன் பங்க் வைத்துக்கொண்டு சாந்து பொட்டு, சந்தனப் பொட்டுப் பாடலுக்கு அற்புதமான கோரியோகிராபி செய்திதிருப்பார். வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்ற தன்னுடைய மகன் கிராமத்திற்கு வரும்பொழுது, கிராமத் தில் நடக்கும் சாதி ரீதியான மோதல்க ளைப்  பார்த்து ஆவேசப்படுகிறார். அப்போது நடிகர் திலகத்திற்கும், கமல்ஹாச -னுக்கும் நடக்கும் பாசப்போராட்ட மான உரையாடல் திரைப்படம் பார்ப்பவரின் மனதை அப்படியே உருக்கிவிடும். படம் உருவான காலகட்டத்தில் "தேவர் மகன்" என்ற தலைப்பு கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் இதயத்தை வருடச் செய்பவை.

படம் வெளியான 10 நாள் கழித்து என்னுடைய அப்பா, கோவில்பட்டியிலுள்ள இலட்சுமி திரையரங்குக்கு அழைத்துச் சென்றார். 11 வயதான எனக்கு தேவர் மகன் திரைப்படம் இதயத்தில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசும் சில வசனங்கள் இன்றும் சில வேளைகளில் காதுகளில் ஒலிக்கிறது. "இந்தக் கட்டை இங்கேயேதான் வாழ்ந்து, இங்கேயேதான் வெந்து சாகும்" என்ற வசனம் மறக்ககூடியதா? திரைப்பட -த்தின் இறுதிக்காட்சியில், நாசரின் தலையைத் துண்டித்த கமல்ஹாசன் அழுதவாறே, அடப்பாவி!என்னையே கொலைகாரான ஆக்கிட்டியேடா!பாவி என்று வசனம் கூறும் காட்சி, நெஞ்சையே கசக்கி பிழிவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் எந்த அளவுக்கு வேரூன்றியி ருந்தன என்பதை இயக்குநர் பரதன் அற்புதமாக பதிவு செய்திருப்பார். இயக்குநர் பரதன் அதன்பிறகு குறைந்த வயதிலேயே மரணமடைந்தார்..

No comments:

Post a Comment